தந்தை மனம்

செல்வ மகள் எழுதிய ஆங்கிலக் கவிதை
தேர்வாகி பிரசுரமாயிற்று பள்ளி அறிவிப்பு பலகையில்.
இரை  தவிர்த்து  இறை  தேடி ஓடும்  நாயன்மாரைப் போல் ஓடினேன் இறைக்க இறைக்க.
கண்ணாடிக் கூண்டின் வெள்ளைத்தாள் வரிகளில் விரைகையில் வாய் சொன்னது
” கவிதை எழுதிய கவிதை!”

:பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *