‘யானை, மனிதன் – யார் தவறு?’ – யானை புகுந்த ஊரில்…:

Masinagudi2 - Copy

Masinagudi`‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், பயிர்கள் நாசம்’ என்று அடிக்கடி செய்தியில் வருவதை பார்க்கிறோம். பாதிக்கப் பட்ட இடத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்?

நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் பந்திப்பூர் – முதுமலை வனச்சரகத்தில், மசினகுடியை ஒட்டியமைந்துள்ள கிராமங்கள் தொட்டலிங்கி, பொக்காபுரம், தெப்பக்காடு.

காட்டு முயல்களும், கடைமான்கள் என்று சொல்லப்படும் சாம்பா மான்பளும், புள்ளி மான்களும், காட்டெருமைகளும், காட்டு நாய்களும் சாதாரணமாக உலவும் இப்பகுதியில் அவ்வப்போது சிறுத்தைகளும், யானைகளும் வந்து போவது செய்தியாகிறது.

நேற்று நள்ளிரவு ஊருக்குள் வந்த யானைக்கூட்டம் தென்னை மரங்களை வேருடன் சாய்த்தும், முள் வேலிகளை முறித்து நசிக்கித் தாண்டிச் சென்று மூங்கில் மரங்களை உடைத்துத் தின்றும் திரும்பி வனத்துக்குள் நகர்ந்து விட்டன.

யானை சத்தம் கேட்டு நள்ளிரவில் கண் விழித்த பாபு இது குறித்து கூறுகையில், ‘ சத்தம் கேட்டு ஓடி வந்தேனுங்க. பாத்தா… ரெண்டு கால தென்ன மரத்துல அம்முட்டு ஒயரத்தில தூக்கி வச்சி, தும்பிக்கையால மேலவுள்ள அந்த மட்டையை இழுத்து தின்னுதுங்க. நீ என்னவேனா வெறட்டிக்க, தின்னுட்டுதான் போவேன்னு நிக்குதுங்க. ஒண்ணும் செய்யமுடியல. சுத்தி சுத்தி வந்து மரத்த சாய்ச்சிடிச்சி. தின்னுட்டு, மரத்த எப்படி எத்திட்டுப் போயிருக்கு பாருங்க. இது சாய்ஞ்ச தென்ன மரம், அது உடைஞ்ச மூங்கில், அங்க பாருங்க நின்னு சாணி போட்டுருக்கு’ என்றார்.

வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை பார்த்தோம். என்ன ஒரு அசுர சக்தி அதற்கு. ‘அட்டகாசம் பண்ணிட்டு போவுதுங்க!’ என்றார் திரும்பவும்.

 

Masinagudi2

 

மேற்குத் தொடற்சி மலை அடியில் ‘ரிசார்ட்’ ‘ஆன்மீக மையம்’ ‘ஜங்கில் வில்லா’ என்று அதன் இடத்தை நாம் ஆக்ரமித்து விட்டோம். ஊரிலிருப்பவர்கள் வனத்தினுள் போய் விட்டதால், வனத்திலிருக்கும் யானை ஊருக்குள் வருகிறது.

யார் தவறு இது?

:
பொக்காபுரம் பகுதியிலிந்து
நமது திருபர், வானவில்

மேலும் பார்க்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *