ஸெல்ஃப் மேட் மேன்…

self made man

“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,”

என்று கரவொலிக்கிடையில்  மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் ,
மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்”
மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்”
மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு வந்துட்டேன், எடுத்துவிட்டு வாயேன் கொஞ்சம்”
கடவுளிடம் – “கொஞ்சம் பார்த்துக்கோயேன் !”

: பரமன் பச்சைமுத்து

[‘இன் ஃ பினி’ இதழின் ‘அட..!’ பகுதியில் பிரசுரமாயிற்று ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *