அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு…

தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா இருந்தா, சென்சார் போர்டு இருக்கு. அதை மீறி வந்தா கேஸ் போடுங்க, தடை வாங்குங்க. வந்ததுக்கப்புறம் செய்யுங்க. செய்யவே உடமாட்றீங்களே, வாழ்க்கை சார்!’ என்று வயிறெறிந்து கதறுவான் நாயகன். ‘எதற்கும் நான் அஞ்சமாட்டேன். எதிர்கொள்வேன். நான் இந்திரா காந்தியின் மருமகள்’ என்றெல்லாம் வெளியில் மார் தட்டி சூளுரைத்து விட்டு, அதை எதிர்கொள்ளாமல் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி முழு நாளை நாசமாக்குவதைப் பார்த்த போது, அந்தப் படத்தின் நாயகன் கதறுவதுபோலவே கதற வேண்டும் போல் உள்ளது. நடக்காமல் போன நாடாளுமன்றத்தால் நாசமானது கோடிகள்.

குடிமகன்

Disclaimer: I am not belonging to any political party.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *