பிஜேபி, காங்கிரஸ், தீவிரவாதிகள்…

காலையில் தில்லியில் காப்பி, மதியம் லாகூரில் லஞ்ச், இரவு காபூலில் உணவு என்று கனவு காண்பதாக அன்று மன்மோகன் சிங் சொன்னபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள், இன்று அதையே ‘காபூலில் காலை உணவு, லாகூரில் லஞ்ச், டில்லியில் டின்னர்’ என்று மாற்றி செய்திருக்கும் போது எதிர்க்கிறார்கள்.  காங்கிரஸைத் தவிர, உலகத் தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். பிஜேபியினர் ஒரேயடியாக இதைப்பற்றி பேசித் தள்ளுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். காங்கிரஸும் பிஜேபியும்  இதைப் பற்றுயே ஓவராய்ப் பேசுவது இரு நாடுகளைப் பற்றிய உலக கவனம் பெறுகிறது. ஓவராய்ப் பேசினால் தீவிரவாதிகளை உசிப்பி விடும்,  அமைதிக்கான, உறவிற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தாலே எல்லையில் வெடிப்பார்கள் என்பது என்பது எல்லோருக்கும் தெரியும்.  இருந்தும் அரசியல் லாபங்களுக்காக அதையே செய்கின்றனர். விளைவு பதான்கோட்.

-பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *