Great teacher is

Great teacher is one who gives great learning from simple things! An ordinary student become extraordinary when he goes in the hands of a great teacher!

சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்களை கற்பிக்கிறார்கள் சிறந்த ஆசிரியர்கள்.
‘எது விஷயம்?’ என்று பார்க்கும்போது மாணவனாய் இருப்பவன், அதை ‘எப்படிப் பார்ப்பது ?’ என்று ஆழ்ந்து நோக்கும்போது ஆசிரியன் நிலைக்கு வருகிறான்.

தனக்குள்ளே ஆகச்சிறந்ததொரு மாணவனைக் கொண்டிருப்பவனே ஆகச்சிறந்ததோர் ஆசிரியன் ஆகமுடியும். (‘நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாம் சண்டை வெறி ஊறிப் போனவன்…’ என்று ரஜினியின் ‘பாட்சா’ படத்தில் வரும் பாலகுமாரனின் வசனத்தில் வருவதை போல) தான் கற்பிக்கும் விஷயம் உள்ளே ஊறி உள்ளும் புறமும் அதுவாகவே ஆன ஒருவனால், எதையும் அதுவாகவே பார்க்கமுடியும். எதிலும் அதையே பார்க்க முடியும்.

எளியவன் ஒருவன் வலியவன் ஆவான் ஆகச்சிறந்ததோர் ஆசானிடம் சேரும்போது!

நானும், நீங்களும், எந்தையும், தாயும், இவ்வுலகத்தின் உள்ள எல்லா உன்னதங்களும் உருவாக தங்களைத் தந்த அத்துணை ஆசிரியர்களுக்கும் மலர்ச்சி வணக்கங்கள்

 

(‘Karate Kid’ – Video Clipping)

– பரமன் பச்சைமுத்து
15.06.2016
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *