“நதி போல ஓடிக் கொண்டிரு…” ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில்

டோக்கியோ, ஜப்பான் ‘அரிகாதோ கொசைமாசே…!’ ஒரு அழகிய சிவந்த ஜப்பானிய இளம்பெண் கிட்டத்தட்ட ‘ட’வை கவிழ்த்துப் போட்டதை போல இடுப்பை ஒடித்து குனிந்து ‘வருகை புரிந்ததற்கு நன்றீய்…!’ என்பதாக ஜப்பானிய மொழியில் கூவிக் கொண்டிருந்தாள். நன்றியைக் கூட சத்தமாக கூவி உடல்மொழி கொண்டு வெளிப்படுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். வெளியே ஒரு இருபது பேர் இடம் பிடிக்க ஒழுங்கான வரிசையில் காத்திருக்க, உள்ளே ஒரு மேசையில் உணவருந்த இடம் பிடித்து அமர்ந்தான் ‘மத்வன்’ என்று அழைக்கப்படும் ‘மத்வ மைந்தன்’.

அது ‘கழ்ழி ரெஸ்டாரன்ட்’ என்று டோக்கியோ மக்களால் குறிப்பிடப்படும் இந்திய உணவகம். ‘கரி வகைகள்’ கொண்ட இந்திய உணவகங்களை, ‘கர்ரி ரெஸ்டாரன்ட்’ என்று சொல்வர். ‘கர்ரி’ என்பதை அமெரிக்க-பிரித்தானிய ஆங்கிலத்தில் ‘கழ்ழி’ என்று சொல்லப் போய், அதுவே ‘கழ்ழி ரெஸ்டாரன்ட்’ என்றாகிப்போனது. உணவகத்தின் உள்ளே சுவற்றில் இருந்த ரஜினிகாந்த்தின் படத்தைப் பார்த்ததும் பெருமையில் புடைத்தது மத்வனின் உணர்ச்சி நரம்புகள். ‘மோத்தோ…. லஜீணீ’ என்று ‘முத்து ரஜினி’யை குறிபிடும் ஜப்பானியர்களிடையே ரஜினிக்கு இருக்கும் மவுசை நினைத்து மகிழ்ந்தான். மதிய உணவு உண்ண வந்தவனின் மனம் அப்படியே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அலுவலக ப்ராஜெக்ட் மீட்டிங்கை அசை போட்டது.

‘இவ்வளவு டேர்ன் ஓவர். இவ்வளவு ட்ரான்சாக்ஷன். அது முக்கியமில்லை! பெரிய ப்ராசெஸ். எத்தனை துறைகள். எத்தனை கிளைகள். எத்தனை மடிப்புகள். ஒவ்வொனிலும் உள்ள பூந்து செக் பண்ணனும். ஆடிட் பண்ணும். ரிப்போர்ட் எடுக்கணும். ஓட்டைகளை கண்டுபிடிக்கணும். அதுக்கப்புறம் அத பட்டியலிடனும். அது சரிதாதானான்னு சோதிக்கணும். திரும்ப அதெல்லாம் எடுத்து தீர்வுகள் என்னென்னன்னு யோசிக்கணும். வேற தீர்வு முறைகள் இருக்கான்னு பாக்கணும். அதுல சிறந்தத தேர்வு செய்து அதை பட்டியலிடனும். செயல் முறை திட்டங்களை சொல்லணும். செயல்படுத்த டைம் ஸ்லாட் தரனும். செயல்படுத்தும்போது ஏதாவது ப்ரசினையாயிட்டா, பழச அப்படியே கொண்டுவர என்ன வழின்னு சொல்லணும். இதெல்லாம் செய்ய இங்க வேலை பாக்கற ஆயிரக்கணக்கானவங்களோட ஆதரவு வேணும்.’ திட்ட மேலாளர் ‘யமட்டோ’ எச்சரிக்கை என்பதைத் தாண்டி புலம்பிக் கொண்டிருந்தார்.

‘செக்யூரிட்டி ஆடிட்டிங் இங்கறது சும்மா இல்ல. எம்ப்லாயீஸ் கோஆப்பரேஷன் இருந்தாதான் பண்ண முடியும். இல்லன்னா தீர்வு தப்பா வந்திடும். கொடுமை என்னன்னா, அவங்க வேலை செய்யற விதத்தைப் பத்தி, அவங்க ஆதரவ வாங்கி ஆராய்ந்து, அதுல குறை கண்டுபிடிச்சி ‘நீங்க செய்யறது சரி இல்லை!’ன்னு சொல்றதுதான் இந்த செக்யூரிட்டி ஆடிட்டிங். அவன் எப்படி ஒத்துப்பான் சொல்லுங்கோ!’ என்றான் ‘ஆல்டிஸ்’,

பிரித்தானிய இளைஞன். ‘இந்தப் ப்ராஜெக்ட்ட நீ எப்படிதான் செய்யப் போறியோ! கடவுளே!’ என்பதாக உரோமமில்லா தன் ஜப்பானிய இமையை இமைக்காமல் மத்வ மைந்தனை பார்த்தாள் ‘கெய்க்கோ’.

‘எவ்வளவோ பண்ணிருக்கோம்! இத பண்ணமாட்டமா!’ என்பது மாதிரி புன்னகைத்து கட்டை விரலை உயர்த்தி காட்டி ‘கலக்கிடுவோம்!’ என்றான் மத்வன். ஒரு மனிதனின் அசாத்திய தன்னம்பிக்கை, உள்ளத்து உறுதி, உற்சாகம் உடன் இருப்பவரையும் தொற்றிக் கொள்ளும். மற்றவர்களுக்கும் நம்பிக்கை வந்தது. ஜப்பானின் ஒரு பெரிய வங்கியின் ப்ராஜெக்ட்டை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். மத்வன் எழுந்து வெள்ளை போர்டில் மார்க்கர் எடுத்து எழுதினான். அவர்களை நோக்கி பேசினான்….

கதை + தன்னம்பிக்கை + தொடர் “நதி போல ஓடிக் கொண்டிரு…” ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில்… முதல் ஆண்டு கொண்டாட்டம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *