மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவையல்ல…

​எங்களூருக்கு கிழக்கே ஓர் அய்யனார் கோவில் உண்டு. சுரபுன்னை மரங்களும், பனையும், வேம்பும், இன்ன பிற கொடிகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் வெயில்புக முடியா அக்காட்டில், சில சிலைகள் இருக்கும். ‘தச்சக்காடு’ அய்யானார் கோவில் என்று பெயர் அதற்கு. குருவிகளும், காட்டுப்பூனைகளும், பாம்புக் குட்டிகளும் வசித்த அந்தக்காட்டிற்கு சென்று வழிபடுவது அந்த வயதில் பயமாக இருந்தாலும், ஒருவகையில் அதி அற்புதமான உணர்வுகள் பொங்கிப் பீறிடவே செய்தன.  இப்போது மரங்கள் வெட்டப்பட்டு கோவிலெழுப்பப் பட்டுவிட்டது. 

அன்றிருந்த உணர்வு இல்லை எங்களுக்கு.  

மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவை மட்டும் இல்லை. இயற்கையை வழிபட்ட தமிழன் காலப்போக்கில் மரங்களை மதித்து வழிபடவே செய்தான்.  கடம்ப மரத்தடியில் இருந்த கடவுள் ஆகையால் அவன் கடம்பன். கருவறையை விட்டுவிட்டு சிவனே ஒளிந்த இடம் ஆயிரங்கால் மண்டபம் அல்ல, திருமஞ்சன அறையல்ல, மகிழ மரத்து அடி! மகேசனே மனமகிழ்ந்து அமர்ந்தது மகிழ மரத்தின் அடியில்.  மரங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் நெடுந்தொடர்புண்டு. அதனால்தான் ‘ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்’ என்று பாடினார்போல டி.எம்.சௌந்தரராஜன். 
ஒரு ஆன்மீக தலத்தின் எங்களூருக்கு கிழக்கே ஓர் அய்யனார் கோவில் உண்டு. சுரபுன்னை மரங்களும், பனையும், வேம்பும், இன்ன பிற கொடிகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் வெயில்புக முடியா அக்காட்டில், சில சிலைகள் இருக்கும். ‘தச்சக்காடு’ அய்யானார் கோவில் என்று பெயர் அதற்கு. குருவிகளும், காட்டுப்பூனைகளும், பாம்புக் குட்டிகளும் வசித்த அந்தக்காட்டிற்கு சென்று வழிபடுவது அந்த வயதில் பயமாக இருந்தாலும், ஒருவகையில் அதி அற்புதமான உணர்வுகள் பொங்கிப் பீறிடவே செய்தன.  இப்போது மரங்கள் வெட்டப்பட்டு கோவிலெழுப்பப் பட்டுவிட்டது. 
அன்றிருந்த உணர்வு இல்லை எங்களுக்கு.  

மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவை மட்டும் இல்லை. இயற்கையை வழிபட்ட தமிழன் காலப்போக்கில் மரங்களை மதித்து வழிபடவே செய்தான்.  கடம்ப மரத்தடியில் இருந்த கடவுள் ஆகையால் அவன் கடம்பன். கருவறையை விட்டுவிட்டு சிவனே ஒளிந்த இடம் ஆயிரங்கால் மண்டபம் அல்ல, திருமஞ்சன அறையல்ல, மகிழ மரத்து அடி! மகேசனே மனமகிழ்ந்து அமர்ந்தது மகிழ மரத்தின் அடியில்.  மரங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் நெடுந்தொடர்புண்டு. அதனால்தான் ‘ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்’ என்று பாடினார்போல டி.எம்.சௌந்தரராஜன். 

ஒரு ஆன்மீக தலத்தின் மரங்கள் அகற்றப்படும்போது, இயற்கையோடு இணைந்து சக்தியை வாங்கித்தந்த, எதிரிய அதிர்வுகளை உள்வாங்கி நேரிய அதிர்வுகளைத் தந்த முக்கிய தொடர்புச் சாதனம் ஒன்று அகற்றப்படுவதாகவே நான் உணர்கிறேன்.  இழப்பு மனித குலத்திற்கு. 

அறுபத்தியைந்து கோடி செலவழித்து அருணாச்சலத்தைச் சுற்றியுள்ள பாதையை அகன்ற பாதையாக மாற்ற அதிகாரிகள் எடுத்த செயல்பாட்டுக்கு எதிராக அமைதிப் போராட்டத்தில் இறங்கி, ஆட்சியரை வரவழைத்து பொக்லைன் இயந்திரங்களை அப்புறப்படுத்திய உள்ளூர் வெளியூர் பக்தர்கள் அனைவரையும் எழுந்து நின்று வணங்குகிறேன்.  

வாழ்க! வளர்க! 

பேரன்புடன்,

பரமன் பச்சைமுத்து

02.07.2016
Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *