நண்பன் ஒருவன்…

​நண்பன் ஒருவன் என் வகுப்பிலமர்ந்ததில்லை இதுவரை. பலர் பரிந்துரைக்கவே மலர்ச்சி வகுப்பிற்குள் வந்தான் அவன். 

நண்பனை மாணவனாக பார்க்க வேண்டும் என்பது எனக்கும், நண்பனை ஆசிரியனாக பார்க்க வேண்டும் என்பது அவனுக்குமான புதிய பரீட்சை. நிறைய அனுமானங்களோடு நிறைய எண்ணங்களோடு நிறைய எதிர்பார்ப்புகளோடு வந்திருந்தானவன்.  இருவரும் வகுப்பிற்குள் நுழைந்தோம்.  செவ்வாய், வியாழன் என இரு வகுப்புகள் முடிந்திருக்கின்றன. 

இன்று அழைத்திருந்தான்.
‘மச்சீ சொல்’ என்று எப்போதும் போல எங்களிருவராலும் விளித்துக் கொள்ள முடியவில்லை. 

‘எப்படி இருக்க?’

‘இந்தளவுக்கு இருக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை!’

‘ம்ம்ம்..’

‘நீ முன்னாடியே சொல்லியிருக்கலாம்! எப்பவோ பேட்ச் பண்ணியிருப்பேன்!’

‘ம்ம்ம்… நான் கோர்ஸ் பத்தி நண்பர்கள் கிட்ட பேசறது இல்லயே!’

‘நாளைக்கு நான் கும்பகோணம் போகனும், போஸ்ட்போன் பண்ணிட்டேன். இதே மாதிரி எல்லாத்தயும் மாத்தி வச்சிருப்பனே. சில மாசங்கள் முன்ன  பண்ணியிருந்தா சில விஷயங்கள முன்னயே பண்ணியிருப்பேனே!’

‘உண்மை! வகுப்பை விட அதைத் தொடர்ந்து நடக்கும் ‘வளர்ச்சிப் பாதை'(ஃபாலோ அப்) மாசாமாசம் கிடைச்சிருக்கும் முன்னயே வந்திருந்தா!’

‘சின்ன விஷயம் ஒண்ணுல கிளாஸ் என்ன அடிச்சது. எல்லாமே மாறிப் போச்சி. அஞ்சு மணிக்கு நான் வாக்கிங் போயிட்டு பால் வாங்க ஆரம்பிச்சி, என் வொய்ஃபு, பெரிய பையன் என வந்து இன்னிக்கு சின்ன பையனும் வந்துட்டான். என் குடும்பமே பால் வாங்க வருது! சீக்கிரம் எழறோம்! எல்லாமே மாறுது! அவ்ளோதான் சொல்ல முடியும். இப்படி இருக்கும் கோர்ஸ்ன்னு நான் நெனைக்கவே இல்லை!’ 

அவனிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது ஆங்கிலத்தில், ‘பல வருடங்களுக்குப் பிறகு உன்னதமாய் உணர்கிறேன். வகுப்பறையில் கண்மூடி செய்த அந்தப் பயிற்சி சில நிமிடங்களில் என்னை ஆழத்திற்கு எடுத்துப் போய்விட்டது, எங்களூர் சிவன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற அனுபவத்தை இங்கு பெற்றேன்!’ என்னும் பொருள்பட.   

மலர்ச்சியும், ‘மலர்ச்சி அகம்’மும் அவனுள் நல்ல அதிர்வுகளை உண்டாக்கி மாற்றங்கள் பல தந்து ஏற்றம் தரும் என்பது புரிந்து, ‘இன்னும் மலர்ச்சி வரும், மகிழ்ச்சி!’ என்று பதிலனுப்பினேன்.
-பரமன் பச்சைமுத்து

12.09.2016

1 Comment

  1. Meghanathan T

    Awesome, I will also the part of the team soon. Thanks Paraman, changing millions of people life in positive way..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *