‘ஸல்லி’ –  திரை விமர்சனம்

விமானப் பயனம் என்பது மற்றப் பயணங்களைப் போலல்ல.  ட்ரெயினில், காரில், பேருந்தில், கப்பலில் என எதில் இஞ்சின் பழுதடைந்தாலும் குறைந்த சேதங்களோடு நிறுத்தி இருப்பவர்களை காப்பாற்றி விடலாம். உயரப் பறக்கும் விமானத்தின் நிலை அப்படி இல்லை. பழுதானால் விழ வேண்டியதுதான். விழுந்தால் முடிந்தது கதை.
அப்படி நூற்றைம்பத்தியைந்து பேரை அவர்களது கனவுகளோடு சேர்த்து சுமந்து உயரப் பறக்கும் ஓர் அமெரிக்க பயணிகள் விமானம்  பறவைகள் மோதி இரண்டு இஞ்சின்களும் பழுதாகி  வானிலிருந்து விழத் தொடங்கினால் என்னவாகும்? குதூகலமாகவும் உற்சாகமாகவும் புறப்பட்ட பயணிகளுக்கு கதை முடிந்தது என்று உணரும் போது எப்படி இருக்கும்? இஞ்சினும் உதவாமல் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறையாலும் உதவ முடியாத விமானம் விழத் தொடங்கிய நிலையில் அந்த கேப்டன் என்ன செய்ய முடியும், ஏதாவது செய்து நூற்றைம்பத்தியந்து பேரையும் ஒரு காயம் கூட இல்லாமல் அவன் காப்பாற்றி விட்டால் எப்படி இருக்கும்?  அவனை ஹீரோவாகக் கொண்டாடுவார்கள் என்றுதானே சொல்வீர்கள். அதுதான் இல்லை. அவனை விசாரனை என்ற பெயரில்  உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி துன்புறுத்துகிறார்கள். 

அதை எப்படி அவன் வெற்றி கொள்கிறான் என்பதை வெள்ளித் திரையில் காண்க. 

அமெரிக்காவின் ஹட்சன் நதியில் விமானம் இறங்கிய உண்மைச் சம்பத்தை படமாக்கிய விதத்தில் கிளிண்ட் ஈஃஸ்ட் உட்டும், நடித்த விதத்தில் டாம் ஹேங்க்ஸும் கலக்கி விடுகிறார்கள். 

நல்ல படம். நம்மூரில் செய்தால் இதற்கு மோகன்லால் பொருந்துவார். 

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ஸல்லி’ : அடிக்கிறார்கள் சொல்லி. 

– திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *