கீழடி – ஏன் அவசரமாய் மூட வேண்டும்?

​எதிரியமாக ஒரு பதிவிடுகிறேன் என்று எனக்கே நெருடுகிறது என்றாலும் இடவே செய்கிறேன்.
தொல்லியல் துறைக்குக் கிடைத்த புதையல் குவியல் ஒன்றை திறந்து பார்த்துவிட்டு தீயிட்டுக் கொளுத்துவார்களா யாரேனும், கொளுத்தி மண் மூடி புதைப்பார்களா எவரேனும். செய்கிறார்களே!
அகழ்வாராய்ச்சி செய்து அரிய புதையல்களை கண்டெடுத்தனர் கீழடியில். சிந்து சமவெளிக்கு முன்னரே முந்து தமிழ் நாகரீகம் இருந்ததன் சான்றுகள் அசலாக கிடைத்தன. கிடைத்ததை மைசூருக்கு கொண்டு செல்வோம் என்றார்கள். ‘ஐயா, மைசூர் கொண்டு சென்றால் தமிழர் வரலாற்று சான்றுகள் அழிக்கப் படும்! வேண்டாம்’ என்று போரிட்டனர் தமிழ் பெருமக்கள். ‘சரி, இங்கேயே இரண்டு ஏக்கரில் நிலம் கொண்டு அமைப்போம்!’ என்று பதில் சொல்லி ஆறுதல் தந்தனர். ஆனால், அறும்பாடு பட்டு அகழ்ந்தெடுத்த அந்த குழிகளை கூடாரம் அமைத்து காப்பதற்கு பதிலாக புல்டோசர் கொண்டு அவசரவசரமாக மண்ணைப் போட்டு நிரப்புகிறது மத்திய அரசு.  ஏன் இந்த அவசரம்?  வேறு மொழியை, வேறு எதையோ காக்க தமிழ் மொழியின் பாரம்பரியத்தை அழிப்பதற்கா? ஏன் அய்யா மண் போட்டு மூட வேண்டும்? ஏன் இந்த அவசரம்? 

பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

24.10.2016

1 Comment

  1. M Muthaiya

    கீழடி தமிழுக்காக அழுத்தம் தரவோ அல்லது ஆதங்கபடவோ ஆளில்லை. ஆனால் தமிழை அரசியலாக்கி குளிர் காய ஆட்கள் நிறைய உண்டு. எனவே இவர்கள் வாய் திறக்குமுன் மூடிவிட்டால் பிரச்சினை முடிந்தது.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *