வைரமுத்து – கம்பன் ஆய்வுப் பதிவு

​வைரமுத்து தந்த ஆய்வுத் தமிழில் தோய்ந்து போனோம் இன்று மாலை. ‘தமிழுக்குப் புனை பெயர் கம்பன்’ என்ற தலைப்பில் அவர் பிய்த்து எறிந்ததை துய்த்து மகிழ்ந்தோம்.  நாளை தினமணியில் வெளியாகும்  இக்கட்டுரையை இன்று அவர் குரலிலேயே கேட்கும் மகிழ்வு கிட்டக் காரணமான தினமணி வைத்தியநாதனுக்கு நன்றி.
முன்பு பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், பாரதி, இப்போது கம்பன் என்று வரிசையாய் வைரமுத்துவை வைத்து எழுதச் சொல்கிறாரே, ஒரு வேளை நூலாக வரப் போகிறதோ! 
பாலகுமாரன், அவ்வை நடராஜன், நடிகர் சிவக்குமார், மணிவாசகம், குமரி அனந்தன், தமிழிசை சௌந்தரராஜன், திருநாவுக்கரசர், க.ப. அறவாணன், நடிகர் ராஜேஷ், காந்தி என நீதித்துறை, கலைத்துறை, பல அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என துறைகள்-அரசியல் கடந்து தமிழுக்காக அனைவரும் ஒரு கூரையில் மியூசிக் அகாதெமியில் கூடியிருந்தது கண் கொள்ளாக் காட்சி. 
பரமன் பச்சைமுத்து

08.11.2016
Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *