எழுத்து என்பது…

e

e

எழுத்து என்பது நாம் எழுதி வருவதில்லை. அது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எழுதுபவனின் உள்மன அடுக்குகளில் படிந்திருக்கும் துகள்களை பூசிக்கொண்டு அது வெளி வருகிறது.
இடம், நிலை, சுற்றுச்சூழல், காலம் என எதுவும் உண்மையில் அதைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதை வெளிப்பட வைக்கும் ஒத்த ஓர் அலைவரிசையில் உள்ளம் இருக்கும் தருணங்களில் எந்த சூழலிலும் எந்த நிலையிலும் அது வழிந்து பாய்ந்து ஓடி வருகிறது. அது வெளிப்பட உள்ளத்தை ஒத்திசைவான அந்த அலைவரிசையில் வைப்பதும், அது வெளிப்படும்போது அதில் தன்னைக் கொண்டுவராமல் இருப்பதுவும்தான் ஒருவனது பெரும்பணி. ஒருவகையில் இந்நிலை உண்மையில் ஒரு தவம்.
எழுத்து என்றில்லை எல்லாவற்றிக்கும் இது பொருந்தும்தானே! எதிலெல்லாம் ஒருவன் தேவையில்லாமல் தன்னைக் கொண்டு வருகிறானோ அதில் நாற்றம் அடிக்கிறது. எதிலெல்லாம் ஒருவன் தன்னை இழந்து தன் மூலமாக வருவதை அதுவாகவே வெளிப்படுத்துகிறானோ அங்கே மணம் வீசுகிறது.
பரமன் பச்சைமுத்து
01.12.2016

2 Comments

  1. சிவ இராஜேந்திரன்

    என் 20 ஆண்டுக்கு முன் என் ஆசிரியர் எழுத்துக்கு எனக்கு வாழ்ப்பு கொடுத்தது எனக்கு ஞபாகம்வருகிறது.சந்தோஷம்

    Reply
  2. சிவ இராஜேந்திரன்

    மன்னிக்கவும் ஞாபகம்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *