பெரும் ஆளுமை பெரும் நாயக வடிவங்களைக் கொண்ட சாகசங்கள் புரியக்கூடிய கதாபாத்திரங்களால் பிடிக்க முடியாத ஓரிடத்தை சில எளிமையான கதாபாத்திரங்கள் பிடித்து விடுகின்றன நம் மனதில்.  நம் உள் மன ஆசையின் பிரதிபலிப்பாய் அவை அமைந்து விடுவதாலோ, ‘அசாதாரண சூழலில்’ அவை தங்களை வெளிப்படுத்தும் விதத்தாலோ, அவை கொண்டிருக்கும் பெரும்  எளிமையினாலோ… கொஞ்ச நேரமே நம் கண்களுக்கு முன்னால் அவை வந்தாலும், உள்ளே ‘பச்சக்’கென்று ஒட்டிக் கொள்கின்றன.
‘எப்படியப்பா உருவாக்கினார்கள் இந்த பாத்திரத்தை!’ என்று வியக்கச் செய்யும் இந்தப் பாத்திரங்கள் உருவாக்கியவர்களைத் தாண்டி மக்கள் மனதில் பதிந்து போகின்றன.
கண்களால் காதலை ஊற்றி வழிய விடும் ‘மரியான்’னின் ‘பனி மலர்’, ‘ஐ ஆம் மிஸ்டர் சூறாவளி!’ என்று இளையராஜாவோடு கைகோர்த்துக் கொண்டு பார்ப்பவர்களின் நெஞ்சில் கால் வைத்து ஏறி நிற்கும் ‘தாரை தப்பட்டை’யின் முதல் பாதி நாயகி, ‘இவரு கோபுரம் கொடை சொம்புன்னு எழுதற எழுத்தாளரு’ என்று அறிமுகம் பெறும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’லின் ‘திருச்செல்வம்’, திமிறும் தெனாவெட்டும் அதேயளவு பாசமும் ஊற்றி உருவாக்கப்பட்ட ‘பருத்தி வீரன்’னின் ”முத்தழகு,  ‘நான்… நான்… சும்மா வெளையாட்டுக்குப் பண்ணேன்!’ என்னும் ‘வருஷம் 16’ன் ‘கண்ணன்’, ‘அவனுங்க பாவம்ய்யா!’ என மனங்கலங்கும் ‘விசாரனை’ படத்து ‘காவலர்’ பாத்திரம், ‘ஒரு கக்கூஸ் கட்டிட்டா என் ஊருக்கு அவ வந்திடுவா!’ என ஆசைப்படும் ‘ஜோக்கர்’ படத்து ‘ஜனாதிபதி’ என….. 
 கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் நின்று விடுகின்றன சில பாத்திரங்கள். ‘உருவாக்கியவர்களைத்’ தாண்டே மக்கள் மனதில் பதிந்து போகின்றன இந்தப் பாத்திரங்கள்.   நம் உள் மன ஆசையின் பிரதிபலிப்பாய் அவை அமைந்து விடுவதாலோ, ‘அசாதாரண சூழலில்’ அவை தங்களை வெளிப்படுத்தும் விதத்தாலோ, அவை கொண்டிருக்கும் பெரும்  எளிமையினாலோ… கொஞ்ச நேரமே நம் கண்களுக்கு முன்னால் அவை வந்தாலும், உள்ளே ‘பச்சக்’கென்று ஒட்டிக் கொள்கின்றன. 
இந்த வரிசையில் இப்போது புதிதாய் ஒரு பாத்திரம்…
“பன்னீர் செல்வம்!” 

-பரமன் பச்சைமுத்து 

சென்னை 

05.02.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *