‘8 தோட்டாக்கள்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

8-Thottakkal-Movie-Release-April-7-Poster - Copy

8-Thottakkal-Movie-Release-April-7-Poster

சென்னை நகரின் காவல் நிலையம் ஒன்றின் துப்பாக்கி, காவலர் ஒருவரின் பொறுப்பிலிருக்கும் போது களவாடப்படுகிறது. அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் 8 தோட்டாக்களின் சுவராசியமான பயணமே ‘8 தோட்டாக்கள்

ஒரு சாமானிய மனிதன் வாழ்க்கை முழுக்க தனக்கு நடக்கும் அநீதிகளைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஒரே ஒரு முறை தவறு செய்து அப்புறம் வாழ்ந்தது விடலாம் என்று முடிவெடுத்தால் என்ன ஆகும், அவன் எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டாலும் உடனிருப்பவர்கள் உணர்ச்சி சிக்கலுக்கு ஆளானால் எல்லோருக்கும் என்னவாகும் என்பதை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.

நாயகன் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம்தான்.  படத்தின் நாயகர்கள் எம் எஸ் பாஸ்கரும், வசனமும்தான்.   எம் எஸ் பாஸ்கர் மொத்த படத்தையும் சுமந்து செல்கிறார். மிக அழகாக தன்னுடைய பாத்திரத்தை செய்திருக்கிறார். அவருடன் கூட்டாளியாக வரும் இரண்டு நண்பர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.  நாசர் சொல்லவே வேண்டாம், மிக நேர்த்தி.

ஒரு பாடல் மிக நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளது.

நல்ல கதை. நல்ல முடிவு. படம் கொஞ்சம் மெதுவாக செல்வதை தவர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘8 தோட்டாக்கள்’ – குறி தவறவில்லை, சுட எடுத்துக்கொள்ளும் நேரம்தான் அதிகம். பார்க்கலாம்.

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

www.ParamanIn.com

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *