Tag Archive: கீழமணக்குடி

மெத்த வூடு – சாரதா அம்மா

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க எதேச்சையாக அக்கா உமாவும் கூட வர, உமா – சிவா – சாரதா அம்மா என்ற கோர்வையால் பல பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. …. ‘மெத்த வூடு’ என்றால் என்ன தோன்றும் உங்களுக்கு? மணக்குடியில் இருந்தவர்களுக்கு காய்ச்சார் மேட்டின் பாலதண்டாயுதம்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

குஞ்சய்யர்

அதற்கு முன்னால் அது மணக்குடியில் நடந்திருக்கிறதாவென தெரியவில்லை.  குஞ்சய்யரும் பலராம ஐயரும்தான் ‘ஏ சிவா! வாடா!’ என்று என்னை அதற்கு அழைத்துவிட்டு முன்னே நடந்து போனார்கள். அந்தி சாய்ந்ததும் வீடு திரும்புவார்கள், பெண் குழந்தைகள் அலங்கரித்துக் கொள்வார்கள், மணக்க மணக்க சமையல் செய்வார்கள், விளக்கு வைத்ததும் உண்பார்கள், ஊரே சீக்கிரம் உறங்கி விடும் என்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , ,

டைலர் கட அல்லது தீபாவளி…

இரவும் பகலுமென எல்லா நேரமும் இயங்கும் ‘டைலர் கடை’.  ஆயத்த ஆடைகளை வாங்கி அணிவதென்பது அவ்வளவு பழக்கத்திலில்லா அந்நாட்களில் துணியெடுத்து தையல் கடைக்கே வந்தனர் மக்கள். கந்தசாமி டைலர்மொத்த மணக்குடிக்கும் மட்டுமல்ல பக்கத்து ஊர்களான குறியாமங்கலம், ஆயிபுரம் என சுற்றுப் பகுதிகளின் எல்லா வீடுகளுக்கும் எல்லோருக்குமான ஒரே தையல்காரர். கந்தசாமி டைலர் என்பது அவர் பெயரென்றாலும்,… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை ‘சிவ்வழிபாட்டு மாலை’நோக்கம் ஒன்று நிறைவேறுகிறது

மு பச்சைமுத்து அவர்களின் முதல் குருபூசையில் மு பச்சைமுத்து அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூல் ‘சிவ வழிபாட்டு மாலை’. மணக்குடி (மணியார் வீட்டு) நடராஜன் ஐயரின் மகள் வயிற்றுப் பேரன் சென்னை சைதாப்பேட்டையில் இந்த நூலிலிருந்து சிவபுராணம் கற்றிருக்கிறான். எல்லோரையும் சிவபுராணம் சொல்லச் சொல்லும் அப்பா, இதோ இதைத்தான் விரும்பியிருப்பார்! இந்நூலின் நோக்கம் என்று அதன் முன்னுரையில்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

வல்லாரைத் துவையல் ஆசிய பண்ணலாமே

வல்லாரைத் துவையல் எளிதாக செய்யலாம், இதோ வழி! உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. ….. பாப்பாக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடமேற்குக் கண்ணியின் பெருவரப்பில்சிறுவனாக அப்பாவோடு நடந்த போதெல்லாம் பாட்டையோரத்து கீரையைக் காட்டி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று குனிந்து கை நிறைய பறித்து, வலது பக்க கண்ணியின் நீர்முள்ளைக் கவனமாகக்… (READ MORE)

Food

, , , ,

wp-1614525167039.jpg

காமுட்டி விழா

‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , ,

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

20201228_072125.jpg

17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…

பெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

அமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! பரமன் பச்சைமுத்து 05.03.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

20170507_184158.jpg

தந்தையை இழந்த தனயனாக

வந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது. சென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை –… (READ MORE)

Uncategorized

, , , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,