Tag Archive: சென்னை

சபாஷ் சென்னை மாநகராட்சி!

அண்ணா நகரின் வீதிகளில் காண்கிறேன். சென்னையில் பிற பகுதிகளில் வாழும் நண்பர்கள் மூலமும் அறிகிறேன். மாண்டஸ் புயலில் இரவு நிறைய மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் விழுந்து விட்டன. ஆனால், முக்கிய வீதிகளில் அதிகாலையே பணிகளைத் தொடங்கி மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை கூடுமானவரை இயல்புக்குக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது சென்னைப் பெருநகர மாநகராட்சி! 👏👏👏… (READ MORE)

Politics

, , ,

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

வெள்ள நீர் வடிகால் பணிகள் – சபாஷ்!

பாடி மேம்பாலத்திற்கு வடமேற்கேயுள்ள கொரட்டூர் போன்ற தாழ்நிலை பூமி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ‘எல்லா தெருவையும் தோண்டி தோண்டி போட்டுறாங்க. வண்டி போக முடியல’ என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால், சங்கதி வேறு. வெள்ள நீர் வடிகாலுக்காக பெரிய ஆழ் குழாய்கள் பதிக்கும் வேலை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவ்வளவு… (READ MORE)

Politics

, , ,

சிறந்த செயல்பாடு : வார் ரூம்!

மலர்ச்சி மாணவரொருவரின் குடும்பம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள அவர்களது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால்…. மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவர் ஒருவரோடு வந்து நிற்கின்றனர். முழு கவச உடை அணிந்த அந்த மருத்துவர், தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளியை வீட்டின் உள்ளேயே வந்து பரிசோதித்து, நிலையறிந்து அடுத்து செய்ய வேண்டியவற்றையும்… (READ MORE)

Politics

, , , ,

சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…

‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.  என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.  பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, , , ,

சென்னை நிலத்தடி நீர் உயர்வு…

அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,