Tag Archive: திருவண்ணாமலை

ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில்…

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது. எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது. ‘டீ குடிக்கறீங்களா?’ ‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’ ‘சாப்பாடு இப்ப தருவாங்க… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ஆரஞ்சு வண்ண கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்?

ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்? கோலி சோடா பாட்டில்களே வித்தியாசமாக இருக்கும். லெகர் போன்ற கம்பெனி சோடா பாட்டில்கள் காக்கைகள் என்றால், கோலி சோடா பாட்டில்கள் அண்டங்காக்கைகள் போன்று வித்தியாசமானவை, கொஞ்சம் அழகானவையும் கூட. வெள்ளை வண்ணத்தில் பளிங்கு போல வரும் சோடா, கருப்பு வண்ணத்தில் வரும் கலர் சோடா என… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

வந்தவாசி தம்பதிகள் சொல்லும் சங்கதி…

கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!! 40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

ராமசாணிக்குப்பம் பள்ளிக்கு பாராட்டுகள்

அரசுப் பள்ளி மாணவர்களால் ஒரு சிறு காடு உருவாக்கப்பட்டு பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டது என்றால் பாராட்டுவீர்கள்தானே! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி வியப்பிலாழ்த்துகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நில்லாமல் பானைகளையும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் போத்தல்களையும் நீள்குழல்களையும் வைத்துக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் செடிகள் வளர்க்கத் தொடங்கி… (READ MORE)

Uncategorized

, , ,