Tag Archive: மு பச்சைமுத்து

ரத்தினகிரி மலையடிவார அலங்கார்…

வேலூர் ஆர்யாஸ் காஃபி பற்றி நாம் பதிவிட்டதைப் பார்த்துவிட்டு அவரவர் ஊர் உணவகங்கள் தொடங்கி திருவரங்கம் ‘முரளி காஃபி’ வரை அன்புப் பரிந்துரைகள் அனுப்பித் தள்ளிவிட்டனர் அன்பர்கள். ‘ஆமாம்! கரெக்டா சொன்னீங்க!’ ‘இப்பல்லாம் அந்த அளவுக்கு இல்ல!’ ‘விலை அதிகம்!’ ‘நான் கால்டாக்சி டிரைவர், 5 முறையும் அங்கதான் சாப்ட்டேன்!’ என தனித் தகவல்கள் இன்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன். சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 35வது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (தை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை01.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

மு பச்சைமுத்து குருபூசை

🌸 இன்று மிருகசீரிடம் (மார்கழி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும், (சிதம்பரம்) புவனகிரி வள்ளலார் தரும சபையிலும், மு பச்சைமுத்து அவர்களின் குருபூசை நிகழ்வுகள், திருமுறை முற்றோதல், சிவனடியார்களை போற்றி உணவளித்தல் ஆகியவை… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

wp-1672893421062.jpg

அப்பா…

அப்பா… தவறு சரி பார்க்காமல்தன் பிள்ளைகளுக்காகஎதையும் செய்யும் சீவன் இதயத்திலிருந்து எழும்பும் அன்பைகழுத்துப் பகுதியில் கண்டிக்கும் வார்த்தையாக மாற்றியனுப்பும் கால எந்திரம் தனக்கிணை ஒருவரும் தரணியிலேயேயில்லையென்று தலைகனத்து இறுமாந்திருந்தாலும்தன் பிள்ளைகளிடம் தன்னையே பாரக்கும் முரண் பெற்றோர் வைத்த தன் பெயரை காலாகாலத்துக்கும் நிற்கும் படிபிள்ளைகளின் நெற்றியில் எழுதிப் போகும் தலை (தலைப்பெழுத்து) எழுத்தாளன் வானகம் புகுந்த… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 33வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஐப்பசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை11.11.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

ஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது…

ஒரு வேட்டியை எடுத்துப்  பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?  வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்?….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே!’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, ,

20201228_072125.jpg

17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…

பெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

wp-1603905485062.jpg

கண்ணே நீ கமலப்பூ…

‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

அமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! பரமன் பச்சைமுத்து 05.03.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,