Tag Archive: யோகா

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1627654482828.jpg

மாலை மஞ்சள் வெயிலும்…

மாலை மஞ்சள் வெயிலும்நீள நீல வானும்அறுவடை முடிந்த அன்னவயலும்ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்ஆளரவமே இல்லா வெளியில்ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் எனவாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்! பரமன் பச்சைமுத்துமணக்குடி30.07.2021 Manakkudi Keezhamanakkudi Vayal Chakrasana Yoga

பொரி கடலை

, , ,

wp-16242665057132283860693803501635.jpg

ஓகத்தை கொண்டாடுகிறேன்

ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி, தசையை உறுதியாக்கும் எடை பயிற்சி, நீச்சல் பயிற்சி என பலவற்றை மாற்றி மாற்றி செய்து பழகுபவன் நான். யோகப்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் அந்த ஒரு நிலையை வேறெந்த உடற்பயிற்சியும் தருவதில்லை என்பதை உரக்கவே சொல்வேன். உடலையும் உள்ளத்தையும் ஒரு நிலையில் ஒன்றினைக்கும் என்பதால் அது ‘ஓகம்’, அதற்கான பயிற்சிகளுக்கு ‘இருக்கை’… (READ MORE)

Uncategorized

, , , , , ,

20210526_174658

ஆசனங்கள் தரும் பலன் அட்டகாசம்தான்

ஒரு புறம் உறுதி – ஒரு புறம் வளையும் தன்மை என்ற இரு நேர் எதிரெதிர் சங்கதிகளைத் தருவதில் ஆசனப் பயிற்சிகளே சிறந்தவை. இல்லையா! #Workout #Excercise #Yoga #ParamanPachaimuthu #LockDownWorkOuts – பரமன் பச்சைமுத்து 26.05.2021

பொரி கடலை

, , ,

யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்! வியந்து போகிறேன்! – பரமன் பச்சைமுத்து 23.08.2019

Uncategorized

, , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,