Tag Archive: Paraman

wp-1686239896347.jpg

இப்படி தரலாமே திருமண பரிசுகள், அட…!

திருமணத்திற்கு வருவோர் மணமக்களுக்கு என்ன பரிசு பொருள் தருவர்? பேனா, கடிகாரம், நகை, பொன்னாடை, கண்ணாடி – பீங்கான் வேலைப்பாடுகள் கொண்ட அழகுப் பொருள்கள், சாமி சிலைகள், நூல்கள், இவைதானே? கோவையில் நடைபெற்ற நம் மலர்ச்சி மாணவர்கள் ஜவகர் சுப்ரமணியம் – பத்மாவதி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வர்ணபிரபா திருமணத்திற்கு சென்றிருந்த எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

wp-1684430993390.jpg

வளர்ச்சிப் பாதை – தொடர்ந்த வளர்ச்சி…

நம்மை நேரியத்தில் வைத்திருக்கும் ஓரிடத்தில், நமக்கு உற்சாகமும் தெளிவும் தரும் ஓரிடத்தில் நம்மை இணைத்துக்கொள்வது நமக்கு பெரும் வளர்ச்சியைத் தந்து நம்மை தொடர்ந்து வழி நடத்தும். மலர்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதமாக தொடர்ந்து வரும் ‘வளர்ச்சிப் பாதை’ அதை செய்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில், இந்த வாரம் புதுச்சேரியில் நிகழ்ந்த ‘வளர்ச்சிப் பாதை’கள் வந்திருந்த மலரவர்களுக்கு நிறைய… (READ MORE)

MALARCHI

, , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தகதக தகதகவென ஆடவா…

‘தகதக தகதகவென ஆடவாசிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.  1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , ,

wp-16545851418324918622564134180898.jpg

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு…

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு. மாணவர்களும் ஆசிரியனும் சேர்ந்து ஒருமித்து ஒருமுகப்பட்டு தங்களை தரும் தருணங்கள் அவை. ‘எந்திரன்’ படத்தில் சிட்டி ரோபோ செய்யும் ‘ஸிக்பி ப்ரோட்டோகால்’லையெல்லாம் கடந்தவொரு கடத்தும் பரிமாற்றம் அது. தேடல் உள்ள உள்ளத்திற்குள் மேலும் தூண்டல் உருவாக்கி தீண்டல் இல்லாமல் உள்ளே ஊற்றப்படும் ஒட்பம் அது. அதுவும் தன் மடியில் வந்தமரும்… (READ MORE)

MALARCHI, Paraman's Program

, , , , , , ,

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

Valarchipaathai - Copy

இந்த மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இயங்கலாம்!

  வாழ்வில் சில சங்கதிகள் ‘மேஜிக்’கானவை. எப்படி என்று விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அனுபவித்தவர்களால் உணர மட்டுமே முடியும். கல்லூரிப் பருவத்து செல்வ மகன் நித்தின் நன்பனொருவனது காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிர் துறந்தான். தாங்க முடியா இழப்பு, பெற்ற அந்தத் தாய் உடைந்து போனாள். அந்த நிகழ்வு அந்தப் பெண்மணியை தாங்க… (READ MORE)

Paraman's Program

, , , ,

சிசெல்சு தமிழ்மன்றத்தில் உரையாற்றினேன்…

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவுகளின் தேசமான சிசெல்சு தேசத்தின் தமிழ் மன்றத்தின் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘மகிழவே பிறந்தோம்’ என்ற தலைப்பில் மலர்ச்சி உரை ஆற்றினேன். தமிழர்கள் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள், தமிழ்ப்பள்ளி வழியே அடுத்த தலைமுறையிடம் தமிழ் வளர்க்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், ‘சார்… இந்த நாட்டுக்கும் நம்ம ஆளுங்களுக்கும் தேவையான விஷயத்தை சொன்னீங்க… (READ MORE)

Paraman's Program

, , , , , , ,

Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

  கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.   பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச்… (READ MORE)

Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , , , , ,

ஆறுமுகம் 1 (3) - Copy

“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?… (READ MORE)

Self Help

, , , , , , ,

‘கவலையா, அதெதுக்கு?’

வீட்டில் இப்படி இருக்கிறது நாட்டில் இப்படி நடக்கிறது உலகம் இப்படிப் போகிறது என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் கவலைகள் ஊறிப் பெருகும் இந்தக் காலவெளியில், பெரிய மனிதர்களும் ‘வல்லான்’களுமே கவலைகளில் கனத்துப் போகும் நிலையில், கவலைகளை அப்படிச் சட்டெனக் கடந்து போகும் ஒரு சாமானிய மனிதரைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும்தானே! இவரிடம் கற்றுக்கொள்ள சங்கதி இருக்கிறது… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

‘சிவகாமியின் சபதம்’ : நாடகம்

ஏழாம் நூற்றாண்டுக்கே போய் இருந்துவிட்டு வந்த திகைப்பு வந்தது எனக்கு நேற்று மாலை. ‘ராஜராஜசோழன்’ எடுத்து முடித்த வெற்றிக்களிப்பில் சிவாஜியை வைத்து உமாபதி எடுக்க விரும்பியதும், தானே தனது சொந்தத் தயாரிப்பில் எடுக்கிறேன் என்று எம்ஜியார் விரும்பி அறிவித்து எடுக்கமுடியாமல் போனதுமான, அமரர் கல்கியின் மூன்று முத்தாய்ப்பான படைப்புகளில் ஒன்றான ‘சிவகாமியின் சபதம்’ புதினத்தை மூன்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , ,

8-Thottakkal-Movie-Release-April-7-Poster - Copy

‘8 தோட்டாக்கள்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்னை நகரின் காவல் நிலையம் ஒன்றின் துப்பாக்கி, காவலர் ஒருவரின் பொறுப்பிலிருக்கும் போது களவாடப்படுகிறது. அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் 8 தோட்டாக்களின் சுவராசியமான பயணமே ‘8 தோட்டாக்கள்’ ஒரு சாமானிய மனிதன் வாழ்க்கை முழுக்க தனக்கு நடக்கும் அநீதிகளைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஒரே ஒரு முறை தவறு செய்து அப்புறம் வாழ்ந்தது விடலாம் என்று முடிவெடுத்தால்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

kaatru-veliyidai

‘காற்று வெளியிடை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நண்பர்களோடு கதைத்தல் அன்னை தந்தையரோடு அளவளாவுதல் வானவெளியில் பறத்தல் மருத்துவமனையில் சிகிச்சை மறுத்தல் என வாழ்வின் எல்லா இடங்களிலும் தனது இன்பம் தனது துன்பம் என்று தனது உணர்ச்சிகளை மட்டுமே முக்கியமாய் கொண்டு அடுத்தவரின் வலிகள் உணர்வுகள் பற்றி சட்டையே செய்யாத, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மூர்க்கனுக்கும், அடுத்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Mohammaed koya

‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

பத்தாயிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்!’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா… (READ MORE)

Media Published, Self Help

, , ,

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வேய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)

பொரி கடலை

, , , ,

horse_dog_swimming - Copy

என்ன கொடுத்தாலும் என்ன செய்தாலும் ஈடு செய்யமுடியவதில்லை…

செல்வி வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தும் நாற்பத்தியிரண்டு வயது பெண்மணி. தனது கணவனோடு ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருக்கிறார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்விக்கு மூக்கினுள்ளே குடைச்சல் ஏற்பட்டு அலறி எழுந்து உட்காருகிறார். விடியும் வரை வலி பொறுக்க முடியாதென்று அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு ஓடுகிறார்கள். விசாரித்து கேட்டு பரிசோதித்து ‘மூக்கு உள்ள சதை வளர்ந்திருக்கும்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

ompuri-1

கமல்ஹாசன் சொல்வதுபோல அவர் இன்னும் மறையவேயில்லை…

    தொண்ணூறுகளின் இறுதியில் வந்து இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் நான் பார்க்க நேரிட்டு என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் ( நடிகர் சிரஞ்சீவியையும் இது மிகவும் கவர்ந்து விடவே, இந்த நல்ல படத்தின் கதையையும் சில காட்சிகளையும் அப்படியே எடுத்து மசாலா தடவி எண்ணையில் போட்டு வதக்கி பாடல்கள் சண்டைகள் என நிறைய சேர்த்துத்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

dangal-poster-large-listicle

‘டங்கல்’ : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தன் ஊனில் ஊறிப்போயிருக்கும் பெருங்கலையான மல்யுத்தத்தை தனது வாரிசுக்குத் தந்து அதன் வழியே தனது நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு தகப்பனின் வாழ்நாள் போராட்டத்தை உணர்ச்சிப் பீறிட திரைப்படம் செய்து தந்திருக்கிறார்கள்.   ஆரம்பமே அதிரடியாக இருக்கும் ‘ரஜினி’ பட வகை, மிகச் சாதாரணமாக தொடங்கி (திருவல்லிக்கேணி… (READ MORE)

Manakkudi Talkies

, ,

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

man

அனுபவங்களால் ஆனவன் மனிதன்

வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்விலேயும் எண்ணற்ற பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் வெளிச்சம் பெறாமலேயே போய் விடுகின்றன. அந்த நிகழ்வுகள் மனிதர்களை என்ன செய்கின்றன, அந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பனவற்றைக் கொண்டே சிலசமயம் அவர்களது வாழ்வு மாறிவிகிறது. ஒவ்வொரு மனிதனும் சில பல அனுபவங்களால்… (READ MORE)

பொரி கடலை

,

wpid-wp-1479018568328.jpg

‘அச்சம் என்பது மடமையடா’ – திரை விமர்சனம் 

தூங்கி நண்பர்களோடு ‘மாவு’ மாதிரி பொழுதைக் கழிக்கும் ஒருவனது வாழ்வில் திடுமென இனிமையான சில விஷயங்களும் கூடவே ‘வலி’மையான சில விஷயங்களும் நடந்தேறுகின்றன. வாழ்க்கை என்பது இந்தப் புள்ளியில் தொடங்கி அந்தப் புள்ளியில் போய் சேரும் நேர்க்கோடாய் எல்லா நேரங்களிலும் இருந்துவிடுவதில்லை. அது எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத இன்பத்தையும் அதிர்ச்சியையும் அள்ளித் தெளித்துவிடக் கூடியது. அப்படி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

nathi

நதி போல ஓடிக் கொண்டிரு… தொடர் 

​‘லுக் அட் திஸ்! ஹீ கேன் குக் வாட் ஹீ வாண்ட்ஸ் அட் ஹிஸ் வொர்க் டெஸ்க்!’ சிவநெறித்தேவனின் மேசையைக் காட்டி ஜப்பானிலிருந்து வந்திருக்கும் பெரும்நிறுவன வாடிக்கையாளப் பெண்மணியிடம் சொன்னார் நிறுவன இயக்குனர். ‘ஆய்… ஆய்…!’ என்று மாடு ஓட்டி வாய் பிளந்து பார்த்தாள் அவள். ‘சிவா! ஜப்பான்காரி அப்படிப் பாக்குறா உன்ன. ப்ராஜெக்ட் வந்தா… (READ MORE)

Media Published

, , , ,

iraivi

‘இறைவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

குலதெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய ‘இறைவி’களின் உன்னதம் உணராமல், அவமதித்து, தங்களது சுய உணர்ச்சி ஆதாயங்களுக்காக நெறி பிறழ்ந்தும் கூட எதையும் செய்யும், கொஞ்சம் கொஞ்சமாய் ‘இறைவி’களின் வாழ்வை விற்றுவிடும் ‘நெடில்’ கொண்ட ‘ஆ’ண்களின் கதை. விமர்சனம் செய்பவர்கள் கதையை சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளதால், இதற்குமேல் சொல்லவில்லை. மூலக்கதை சுஜாதாவுடையது… (READ MORE)

Manakkudi Talkies

,

24 one

’24’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்த மணித்துளியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரம் முன்னும் பின்னும் பயணிக்க வைக்கும் ஒரு கால எந்திர கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை களவாடி கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள ஒருவன் முயற்சித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இருபத்தியாறு வருடங்கள் கழித்து இருவர் சரி செய்யும் முயற்சியில் பின்னோக்கிப் பயணித்தால்… எப்படி இருக்கும்? அந்த ’24’லிருந்து ’26’ என்பதே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

TheManWhoKnewInfinity_Trailer

திரை விமர்சனம் : ‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ : பரமன் பச்சைமுத்து

  கணிதத்தின் அறிந்துகொள்ள முடியா பெரு முடிச்சுகளின் ஆதாரங்களை அவிழ்த்துப் போடும் சூத்திரங்களை உள்ளே வைத்துக் கொண்டு, அதை நிரூபிக்க வெளியே தினம் தினம் போராடிய நம் தமிழ் மண்ணின் கணித மேதை ராமானுஜத்தைப் பற்றிய ஹாலிவுட் படம். (‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘முடிவிலியை முன்பே கண்டவன், முன்னமே அறிந்தவன்’ !!!?) சிறுவயதிலேயே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

aram1

ஆழ்ந்து அசந்து போக வைத்த எழுத்து – ஜெயமோகன்

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

Theri - Copy

‘தெறி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு ‘நிர்பயா’ இறக்கும் தருவாயில் ‘அண்ணே’ என்று சொல்லி உயிர் விட, அண்ணனாக பொறுப்பேற்ற நாயகன் அந்த அபலையின் சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து அதேவிதமாகத்  தண்டிக்க, அதனால் வெகுண்டெழுந்த அவனது பெரும்புள்ளி அப்பா பதிலுக்கு என்னவெல்லாம்  செய்கிறார், எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதைச் சொல்லும் கதைக் களம். விஜய்யின் உடையலங்காரம் மிக… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

london_has_fallen_2015_movie-wide - Copy

‘லண்டன் ஹேஸ் ஃபாலன்’ – திரை விமர்சனம்

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையும், அதிலிருக்கும் அதிபரும் அவர்களது பெருமை. தேசியக்கொடியை உள்ளாடையில் பிரிண்ட் செய்து போடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளும் அவர்கள், வெள்ளை மாளிகைக்கோ, அமெரிக்க அதிபருக்கோ அந்நிய தேசத்தால் ஒரு கரும்புள்ளி வருவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலத் திரைப்படம். பிரித்தானிய பிரதமரின் மறைவிற்கு இரங்கல் செலுத்த ஏகப்பட்ட… (READ MORE)

Manakkudi Talkies

, ,

Sethupathi - Copy

‘சேதுபதி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வீட்டில் ஒரேயடியாய் குதூகலம், டூட்டியில் ஒரேயடியாய் விறைப்பு என்று இருக்கும் முறுக்கு மீசை போலீஸ்காரர் ஒருவரின் வாழ்க்கையில் ஆள்-அம்பு-சேனை என்று வாழும் எதற்கும் பயப்படாத தாதா ஒருவர் குறுக்கிட்டுவிட்டால் என்னவாகும், அவர்களிடையே நடக்கும் மோதல்கள் என்ற ‘மூன்று முகம்’ காலத்தைய, எல்லா ஹரி படத்திலும் பார்த்த கதைதான். ஆனால் கொடுத்த விதத்தில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

visaranai2 - Copy

‘விசாரணை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

  ஆட்டோ ஓட்டும் ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டெழுதிய ‘லாக்கப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படமாம். நாவல் எழுதியவரை உலகத் திரைப்பட விழாவிற்கே கூட்டிச் சென்றும், படத்தில் பெயர் போட்டும்  கௌரவித்து விட்டார் இயக்குநர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கும் உயர் அதிகாரம் கொண்டவர்களுக்கு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

கருந்துளைகளைத் தாண்டி கணக்கிட முடியா பெரியவன்’ :

அறிவியல் உலகம் ஆர்ப்பரிக்கிறது. ஊடகங்கள் உற்சாகத் தலைப்புகளிட்டு செய்திகள் தருகின்றன. வானியல் அறிவியலில் அடுத்த கட்டம் இது என்கிறார் டேவிட் ரிட்ஸ், லிகோ அமைப்பின் திட்ட செயல் இயக்குநர் (லேசர் இன்ட்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல்-வேவ் ஆப்சர்வேட்டரி). இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நினைவுக்கு வருகிறது சிலருக்கு. ‘சூரியனைப் போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள்… (READ MORE)

Uncategorized

, , , ,

stills - Copy

‘இறுதிச் சுற்று’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

சாதனை எதுவென்பது வாழ்வின் நிலையைப் பொறுத்து மாறிவிடுகிறது. விளையாட்டு வீரனாய் இருக்கும்போது அவனது சொந்த வெற்றி சாதனை. ஆசிரியனாய், பயிற்சியாளனாய் மாறும்போது, மாணவனின் வெற்றியே சாதனை! முந்தைய நிலையில் அரசியல் காரணங்களால் விட்ட வெற்றியை பிந்தைய நிலையில் பிடிக்க முயற்சிக்கும், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் தெனாவெட்டு கொண்ட, அதைவிட அதிகமாய் குத்துச் சண்டை விளையாட்டு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

wpid-images.jpg

அம்மாவின் தவம்…

சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு,  வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு. தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது… (READ MORE)

Self Help

, , ,

Ethuvum nirpathillai yenbathey - Copy

ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , , , , , , , , ,

தண்ணீர் கஷ்டம் – உள்ளே, வெளியே

‘ஏங்க பவர் வராதாம். தண்ணியே இல்லை!’ உள்ளிருந்து மனைவி சொன்னதை கேட்டான் வெளியே முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவன்! ‪#‎சென்னை‬ தெருக்களில் ‪#‎வெள்ளம்‬ – பரமன் பச்சைமுத்து

பொரி கடலை

,

‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)

Self Help, பொரி கடலை

, ,

naanum rowdythaan2

‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்

தாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும்? காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து? அதுதான் இல்லை.  அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ‘காமெடிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

M2

அடுத்தவருக்கு காட்ட நினைத்து…

  அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே செயல்புரிபவன், உள்ளே சமநிலை இழப்பான், விழுந்து அடிபட நேரிடும். அடுத்தவருக்காக அல்ல, உங்களுக்காக செயல் புரியுங்கள்.  உன்னதம் தேடி வரும் – பரமன் பச்சைமுத்து

Self Help

, , , ,

martian1 - Copy

‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து

‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து பயணித்துச் சேர்வதற்கே பல மாதங்கள் ஆகும் தூரத்திலிருக்கும், உயிர்வாழக் காற்று, உணவு, உயிர்கள் என எதுவுமில்லாக் கிரகத்தில் ஒருவன் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? உயிர்வாழ இருக்கும் உணவும் சொற்ப நிலை, தொலைத் தொடர்போ அற்ப நிலை என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? ‘திரும்பிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

Manorama - Copy

ஜாம் பஜார் ஜக்கு…

  ‘ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு!’ என் அப்பா பாடினார், சிறுவனான நான் கேட்டு வளர்ந்தேன்.   ‘ட்ரியோனா… ட்ரியோனா… ட்ரியோனானா னானா, மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன்!’ நான் பாடினேன், என் மகள்கள் கேட்டனர்.   நாளை என் மகள்கள் அவர்கள் பிள்ளைகளுக்குப் பாட? ‪ #‎RIP‬  Manorama aachi

பொரி கடலை

,

Bangalore-to-Chennai - Copy

வாழ்க்கை வழிப் பயணம்…

இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார் குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , , , ,

mAAYA2

‘மாயா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பணம் தந்துவிட்டு பயப்படத் தயாராக இருப்பவர்களை, எவ்வளவு பயம் காட்டி அனுப்புகிறார்கள் என்பதை வைத்தே பேய்ப் படங்களின் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. ஆரம்பத்தில் இழுவையாக இருந்தாலும், சில சீன்கள் சரியாக இருந்தால் போதும் படம் தூக்கி நிறுத்தப்படும் என்ற லாஜிக் படி வந்திருக்கும் படம் ‘மாயா’. ஒதுக்குப் புறமான வீடு, அதைத் தேடி வந்து பேயிடம்… (READ MORE)

Manakkudi Talkies, Media Published

, , , ,

மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து

மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். … மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , ,

Masinagudi2 - Copy

‘யானை, மனிதன் – யார் தவறு?’ – யானை புகுந்த ஊரில்…:

‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், பயிர்கள் நாசம்’ என்று அடிக்கடி செய்தியில் வருவதை பார்க்கிறோம். பாதிக்கப் பட்ட இடத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் பந்திப்பூர் – முதுமலை வனச்சரகத்தில், மசினகுடியை ஒட்டியமைந்துள்ள கிராமங்கள் தொட்டலிங்கி, பொக்காபுரம், தெப்பக்காடு. … காட்டு முயல்களும், கடைமான்கள் என்று சொல்லப்படும் சாம்பா மான்பளும், புள்ளி மான்களும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

Ulley oru

உள்ளே ஒரு மாணவன்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’  போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)

Self Help

, , , , ,

I - Copy

‘ஐ’ – Movie Review – பரமன் பச்சைமுத்து

வாழ்வின் குறிக்கோளே வடிவழகு, உடற்கட்டு காப்பதுதான் என்று வாழும் ஒருவன், புற அழகை வைத்துப் புகழ் பொருள் சேர்க்கும் ஒரு புதிய உலகத்திற்குள் வரும்போது, கனவிலும் நினையாக் காதலும் கைகூடும் வேளையில், வாழ்வாய் நினைத்த வடிவமே சிதைந்துபோனால்… என்னவாகும்? ‘உடலழகை தாண்டி உள்ளத்தழகு பார்க்கப்படுமா?’ (‘அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா!’ என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Bhogi1 - Thumbnail

போகி என்றொரு பெயரில்…

  போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்!   புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும்.   அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)

Self Help, ஆ...!

, , , ,

Thiruppugazh - Copy

ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்

  ‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!

Religion, Spirituality

, ,

Nataraja - Copy

திருவாதிரை திருநாள் இன்று!

அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality

, , , ,

aalumai3.jpg - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

Media Published, Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , , , , , , , , , ,

PK - Copy

‘PK’ – Movie review

வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் கடவுளின் சக்தி வாய்ந்த ரிமோட்டை சிங்காரச் சென்னையில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், என்னாவாகும்? ‘அறை எண் 305ல் கடவுள்’ இருப்பார். வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் வேற்றுகிரகவாசி ஒருவனின் சக்தி வாய்ந்த ரிமோட்டை ராஜஸ்தான் பாலைவனத்தில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவன் தலைநகர் தில்லிக்குப் போனால், என்னவாகும்? அவனது தேடலும், அவனது விகல்பமில்லா… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

Xmas1 - Copy

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே…   வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்!   தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே…   எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே…   முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

, , , , , ,

K Balachander - Copy

மின்பிம்பங்களுக்கு உயிர் தந்தவர், மின் எரியூட்டலுக்கு உடல் தந்துவிட்டார்!

  நன்னிலம் பகுதியில் பிறந்தவர், நானிலம் போற்ற வாழ்ந்தவர், தமிழ் நிலம் தவிக்கப் போய்விட்டார்! ஏஜீஸ் ஆஃபீஸில் நாடகத்தை தொடங்கியவர், நேற்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். பல பாத்திரங்களுக்கு வாழ்வளித்து ஏற்றிவிட்டவர், தன் பாத்திரங்களை மட்டும் உலகிற்கு விட்டுவிட்டு உலகை துறந்து விட்டார். காலத்தை மீறிய படங்களைத் தந்தவர், காலதேவனிடம் போய் சேர்ந்துவிட்டார். அடடா,… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

Happy Birthday

ரஜினி என்னும் மனிதனே…

    மனிதனே… அந்த வயதில், ‘‘இந்தப் பீடி முடியறதுக்குள்ள உன் தலைவன முடிக்கிறேன் பாரு!’ என்று சொல்லி தீக்குச்சித் தெறிக்கப் பத்தவைத்து நீ சண்டையிட சென்றபோது, சண்டை போடுவதற்கு முன்பே எங்களை ஜெயித்தாய். … ‘கண்ணா நாம வாங்கனத எப்பவுமே வச்சிக்கமாட்டோம், திருப்பிக் குடுத்திடுவோம், இப்புடுச் சூடு,’ என்று கூறி புரட்டியெடுத்த போது தியேட்டரில்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

சிதம்பரத்தில் - Copy

சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது!

நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது. சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, ,

Kaaviyaththalaivan

‘காவியத் தலைவன்’ – Movie review

  தன்னுடன் இருப்பவனுக்கு பெயரும் புகழும் வருவது கண்டு பொறுக்காது, சூழ்ச்சிகள் பல செய்து, சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அவனை வெளியேறச் செய்யும் மேடை நடிகனின் கதை. வெளியே ஊர் உலகத்திற்கு என்னதான் கதை சொல்லி நம்ப வைத்தாலும், உள்ளத்தினுள்ளே ஓர் நாள் உண்மை வந்து உறுத்தும் என்று முடிகிறது. வெள்ளையர்களை வெளியேறச் செய்ய வேண்டுமென்ற விடுதலை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

Thumbnail - Poojaiyarikkurangu - Copy

பூஜையறைக் குரங்கு…

வயிற்றுப் பசி தீர்க்க திறந்திருந்த பால்கனி வழியே எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து, ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே, அடுத்த அறையிலிருந்து வந்த அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது. பசிக்கு வழி தேடி பால்கனி… (READ MORE)

Religion, ஆ...!

,

sachin

சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்

வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப்… (READ MORE)

பொரி கடலை

, , ,

மழைநேர மனசு

‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட அதிகாலையில் எழுந்து பல்கூடத் துலக்காது சிரத்தையாய் செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை. ‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’ …. சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும் சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது… (READ MORE)

ஆ...!

, , , , ,

Rajini Award

உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…

இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

Theeranathi

தீரா நதி

காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.   காலையில் கடைசி ஊர்வலமாம்.   கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும்.   வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம்  மெதுவாகப்… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

Naan Mangalyaan Feb1st

நான் மங்கல்யான், செய்வாய் கிரக விண்கலம் பேசுகிறேன்…

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,” என்றுப் பாடிப்போன வள்ளலார் வாழ்ந்திருந்த பகுதிகளில் வளர்ந்ததாலோ என்னவோ, வயல், வரப்பு, விவசாயம் என்றால் ஒரு தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் என்னுள்ளே. பச்சைப் பசேலென்று தலை நிமிர்த்தியோ அல்லது நன்றாய் விளைந்து, தங்க நிறத்தில் நெல்மணிகளின் கனத்தில் தலைசாய்த்தோ நிற்கும் நெல்வயல்களினூடே நடந்து போயிருக்கிறீர்களா? புல்மூடிய… (READ MORE)

Media Published, Self Help

, , , , ,

People will behind you - infinithoughtsJuy2014

Yes, People will speak behind you

[ Published in ‘infinithoughts’ July,2014 ] Yes, People will speak behind you – Paraman Pachaimuthu Dear Vini, I understand how one would feel when people around us speak badly about us.  Feel like earth should break, open wide and feel… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , , , , , , , ,

தேடலும், தேர்வும்

நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம்,  ‘என்ற’ ‘என்னும்’  வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

, , ,

மனைவி படிக்கிறாள்

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். மர்ச்சனட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்…. (READ MORE)

ஆ...!, கவிதை

,

போகி என்றொரு பெயரில்,

போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பை எதையாவது போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி பெரியவர்கள் மூச்சுத்திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! ‘அகம்’ என்றால் வீடு என்றொரு பொருள் உண்டென்று நமக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு, புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை,… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

பவர்…

கடைத்தெருவில் மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி வீடு வந்ததும் சொன்னாள், “முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ, உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க!” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும்! எப்படி இருக்கும் எனக்கு! நிஜமாகவே இன்னும் கொஞ்சம் பவர் கூடியதுபோல இருந்தது. சரி… சாயந்திரம், கண் டாக்டரைப் போய்ப்… (READ MORE)

ஆ...!, கவிதை

,

இலங்கையில் பிறந்து தமிழர்கள் இதயத்தில் வாழும் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்… தமிழ் சினிமாவிற்கு நேச்சுரல் லைட்டிங் பார்க்கப் புதிய கண்களைத் தந்தவனே, நீ செல்லுலாய்டில் எழுதிப் போனது, தமிழ் சினிமாவின்  ‘அழியாத கோலங்கள்’, கமல், ஶ்ரீதேவி, அர்ச்சனா, ஷோபா,  பாலா, வைரமுத்து, சசிகுமார், தனுஷ், வெற்றிமாறன்… என்று தேசியவிருது குவிப்போர் அனைவரும், உன்னோடு கைகோத்தோர் அல்லது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

ஸெல்ஃப் மேட் மேன்…

“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,” என்று கரவொலிக்கிடையில்  மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் , மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்” மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்” மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு… (READ MORE)

ஆ...!, கவிதை

, , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

Soorasamharam

இன்று சூரசம்ஹாரம்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும். நாள் முழுக்க… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

தீபாவளி மழை

பட்டாசு நமுத்துப் போய் விடுமே… வெடிக்குமா வெடிக்காதா, வியாபாரம் நன்றாய் நடக்க வேண்டுமே, பட்டுப் புடவை கிடைக்குமோ கிடைக்காதோ, இதில் எப்படிப் பேருந்துப் பிடித்து ஊர் போய் சேர்வது, சே! தலையை அடகு வைத்தே தலை தீபாவளி… இந்தக் கவலைகள் எல்லாம் அப்புறம். முதலில் நரகாசுரன் வதமே நடக்குமா நடக்காதா என்று  கவலைப்படுமளவிற்கு விடாமல் பேய்… (READ MORE)

ஆ...!

, ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,

குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்

குளிர்காலக் காலையிலும் குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால், ஒன்று, வெளியே வானிலையில் குறைந்தழுத்த மண்டலம் உருவாகிள்ளது அல்லது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று அறிக!   :பரமன் பச்சைமுத்து

ஆ...!

,

தீபாவளி புடவை வாங்கும் படலம்

கண்ணெதிரே கையருகே எத்தனை நல்லது இருந்தாலும், தூரத்திலிருப்பதைப் பார்த்து வேண்டுமென ஆசைப்படுவது புடவைக் கடையில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்திப் போகும் மனித இயல்பு! #தீபாவளி புடவை வாங்கும் படலம் #மனைவியோடு கடையில்

ஆ...!, கவிதை

, ,

செப்டம்பர் 17

சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டு தள்ளி நின்று சிரிக்கிறது காலம்… ‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும், ‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும் ஒரே நாளில்  பிறந்தார்கள்! # பெரியார், #மோடி, #செப்டம்பர் 17 : பரமன் பச்சைமுத்து

Politics, ஆ...!

, , , ,