Tag Archive: spirituality

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

தியானம் போதையல்ல…

தியானம் போதையல்ல, ‘தியானத்தில் அமர்கிறேன் நான்’ என்றுக் காட்ட முயற்சிப்பது போதை. விபூதியும், குறிப்பிட்ட நிறத்தை அணிவதும், சின்னங்கள் தரிப்பதுவும் கூட போதையை ஊற்றி வளர்ப்பவைதானே. ஆன்ம பயிற்சி செய்கிறேன் நான் என்று எவர்க்கு காட்டவேண்டும், எதற்கு காட்ட வேண்டும்! பரமன் பச்சைமுத்து 15.10.2017

Spirituality

, , , , ,