Yearly Archive: 2015

தண்ணீர் கஷ்டம் – உள்ளே, வெளியே

‘ஏங்க பவர் வராதாம். தண்ணியே இல்லை!’ உள்ளிருந்து மனைவி சொன்னதை கேட்டான் வெளியே முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவன்! ‪#‎சென்னை‬ தெருக்களில் ‪#‎வெள்ளம்‬ – பரமன் பச்சைமுத்து

பொரி கடலை

,

‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)

Self Help, பொரி கடலை

, ,

அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு…

தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘உப்புக்கருவாடு’ (மிக வித்தியாசமான தரமான ரசனைக்கான படம்) படத்தில் ஒரு காட்சி. இளம் இயக்குஞர் ஒருவர் தன் படத்தை எடுக்க தொடங்குவதற்கு முன்பே ஒரு சில சாதி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து ரகளையில் ஈடுபடும். ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்னு சொல்லிட்டு எடுக்கவே உட மாட்டறீங்களே. தப்பா… (READ MORE)

Politics

, ,

பள்ளி – மழை

பள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன், விடுமுறை விட்டால் வெயிலடிப்பேன் ‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க! வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது சென்னை வானம்! -பரமன் பச்சைமுத்து

Uncategorized

naanum rowdythaan2

‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்

தாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும்? காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து? அதுதான் இல்லை.  அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ‘காமெடிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

M2

அடுத்தவருக்கு காட்ட நினைத்து…

  அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே செயல்புரிபவன், உள்ளே சமநிலை இழப்பான், விழுந்து அடிபட நேரிடும். அடுத்தவருக்காக அல்ல, உங்களுக்காக செயல் புரியுங்கள்.  உன்னதம் தேடி வரும் – பரமன் பச்சைமுத்து

Self Help

, , , ,

wpid-20151022_120149.jpg

விஜயதசமியாம்…

அப்போதெல்லாம் விஜயதசமியில் பள்ளியில் சேர்ப்பார்கள். ‘பர்த் சர்ட்டிஃபிகேட்ஸ்’ எல்லாம் இல்லாத அந்நாளில், கையை தலைக்கு மேல் வைத்து காதைத் தொடச் சொல்வார்கள். அப்படித் தொட்டால், ஐந்து வயதென்பது அப்போதைய கணக்கு. ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்து ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா…’ ஆரம்பித்து விடுவார்கள் (டீச்சர் கிள்றான் டீச்சர் எல்லாம்… (READ MORE)

Uncategorized

செலவை குறைக்க செலவு…

சில நேரங்களில் செய்யப்படும் சில செலவுகள், தொடர் பெருஞ்செலவுகளைக் குறைக்கும். செலவுகளைக் குறைக்க செலவு செய்யவேண்டியிருக்கிறது என்பதே உண்மை. இங்கே செலவென்பது முதலீடு! News:  Govt. Distributes 2 crores LED bulbs to replace CFLs and saves Rs. 1,000cr a year – பரமன் பச்சைமுத்து

Uncategorized

அனைத்து நாளும் ஆயுதபூஜையே…

செய்தொழிலை சீர்பட ‘புனிதமாய்’ செய்பவனுக்கு, செல்வம் வந்து சேரும், சிறப்பு வந்து கூடும்! உற்ற தொழிலை உயர்வாய் எண்ணுபவனுக்கு, அனைத்து நாளும் ஆயுதபூஜையே! – பரமன் பச்சைமுத்து #AyuthaPooja

Uncategorized

Nadigar Vishal 2

ரீல் ஹீரோ vs ரியல் ஹீரோ!

முப்பதாண்டுகளாக நடிகர் சங்கம் தன் வசம் என்று வைத்திருந்த ராதாரவியை, அரசியல் ஆள் பலமுள்ள கிட்டத்தட்ட அசைக்கமுடியாத சக்தியாக இருந்த சரத்குமாரை, இளம் விஷால் அணி வீழ்த்தியிருப்பது விழி விரியச்செய்கிறது. தனிப்பட்ட நபர்களை குறிவைத்துத் தாக்குதல், வாக்குப் பதிவின் போது நடந்த தள்ளு முள்ளு, ‘கமல்ஹாசனால என் பேண்ட்ட கூட கழட்ட முடியாது’ என்று ராதாரவி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

nadigar-sangam-elction1

நம் ஞாயிறு நடிகர் சங்கத்திற்கல்ல…

நடிகர்கள் வாக்களிக்க வருவார்கள், ஊடகங்கள் இடைமறித்துக் கருத்துக் கேட்டு ஒளி பரப்பும், ரஜினி கருத்திற்கெதிராக கமல் கருத்தென்பார்கள், இரண்டு மார்க்கெட் இல்லாதவர்களை அழைத்து விவாதிப்பார்கள், விளம்பர இடைவேளை தருவார்கள், இதையேப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் ஞாயிறு தீர்ந்து விடும். மாலை முடிவு எப்படியும் தெரியும், ஞாயிறை இதில் வீணடிக்காமல் உங்கள் நாளை பயனுள்ளதாக்குங்கள்! … வாழ்க!… (READ MORE)

Manakkudi Talkies, Self Help, பொரி கடலை

, , , , ,

martian1 - Copy

‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து

‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து பயணித்துச் சேர்வதற்கே பல மாதங்கள் ஆகும் தூரத்திலிருக்கும், உயிர்வாழக் காற்று, உணவு, உயிர்கள் என எதுவுமில்லாக் கிரகத்தில் ஒருவன் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? உயிர்வாழ இருக்கும் உணவும் சொற்ப நிலை, தொலைத் தொடர்போ அற்ப நிலை என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? ‘திரும்பிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

Manorama - Copy

ஜாம் பஜார் ஜக்கு…

  ‘ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு!’ என் அப்பா பாடினார், சிறுவனான நான் கேட்டு வளர்ந்தேன்.   ‘ட்ரியோனா… ட்ரியோனா… ட்ரியோனானா னானா, மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன்!’ நான் பாடினேன், என் மகள்கள் கேட்டனர்.   நாளை என் மகள்கள் அவர்கள் பிள்ளைகளுக்குப் பாட? ‪ #‎RIP‬  Manorama aachi

பொரி கடலை

,

Bangalore-to-Chennai - Copy

வாழ்க்கை வழிப் பயணம்…

இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார் குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , , , ,

mAAYA2

‘மாயா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பணம் தந்துவிட்டு பயப்படத் தயாராக இருப்பவர்களை, எவ்வளவு பயம் காட்டி அனுப்புகிறார்கள் என்பதை வைத்தே பேய்ப் படங்களின் வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. ஆரம்பத்தில் இழுவையாக இருந்தாலும், சில சீன்கள் சரியாக இருந்தால் போதும் படம் தூக்கி நிறுத்தப்படும் என்ற லாஜிக் படி வந்திருக்கும் படம் ‘மாயா’. ஒதுக்குப் புறமான வீடு, அதைத் தேடி வந்து பேயிடம்… (READ MORE)

Manakkudi Talkies, Media Published

, , , ,

மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து

மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். … மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , ,

Masinagudi2 - Copy

‘யானை, மனிதன் – யார் தவறு?’ – யானை புகுந்த ஊரில்…:

‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், பயிர்கள் நாசம்’ என்று அடிக்கடி செய்தியில் வருவதை பார்க்கிறோம். பாதிக்கப் பட்ட இடத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் பந்திப்பூர் – முதுமலை வனச்சரகத்தில், மசினகுடியை ஒட்டியமைந்துள்ள கிராமங்கள் தொட்டலிங்கி, பொக்காபுரம், தெப்பக்காடு. … காட்டு முயல்களும், கடைமான்கள் என்று சொல்லப்படும் சாம்பா மான்பளும், புள்ளி மான்களும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

Kakka muttai - Copy

‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு! சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

Lee quan yu2

எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே

இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

,

அதிக ஆசைகள் கொண்டவன் நான்…

அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால்,  ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய,  யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)

பொரி கடலை

Ulley oru

உள்ளே ஒரு மாணவன்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’  போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)

Self Help

, , , , ,

Backbiting - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5

பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)

Media Published, Self Help

, ,

IMG-20150214-WA0013

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

  அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.   ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.   அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு.   அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

Self Help, ஆ...!, கவிதை

, ,

Shamitabh - Copy

‘Shamitabh’ – Movie Review : Paraman Pachaimuthu

பிறவி ஊமையாய் பிறந்தபோதும், பிறவி எடுத்ததே பெரும் நடிகனாக வேண்டும் என்பதற்காகவே என்றிருக்கும் இளைஞனொறுவனும், என் அடிக் குரலின் வசீகரம் அத்தனைபேரையும் கட்டிப் போடும் என்று இறுமாப்பில் இருக்குமோர் முதியவனும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், பெயர், பணம், புகழ், இவற்றோடு போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்று போகும் (‘மைக் மோகன் – எஸ் என் சுரேந்தர்’… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

Formal dress

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)

Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, ,

எதைப் பார்க்க வேண்டும்

கண்ணுக்கு முன்னே பரந்து விரிந்த அலையடித்து ஆர்ப்பரிக்கும் அழகுக் கடல், காலுக்கு சில அடி தூரத்தில் சகதி. இப்போதைக்கு இங்கே எதையும் மாற்ற முடியாது என்ற நிலையில், எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்த்தால் உங்களுக்கு நன்மை என்று முடிவு செய்து செயல்படுங்கள். வாழ்க! வளர்க!  –  Paraman Pachaimuthu Facebook.com/MalarchiPage

Uncategorized

I - Copy

‘ஐ’ – Movie Review – பரமன் பச்சைமுத்து

வாழ்வின் குறிக்கோளே வடிவழகு, உடற்கட்டு காப்பதுதான் என்று வாழும் ஒருவன், புற அழகை வைத்துப் புகழ் பொருள் சேர்க்கும் ஒரு புதிய உலகத்திற்குள் வரும்போது, கனவிலும் நினையாக் காதலும் கைகூடும் வேளையில், வாழ்வாய் நினைத்த வடிவமே சிதைந்துபோனால்… என்னவாகும்? ‘உடலழகை தாண்டி உள்ளத்தழகு பார்க்கப்படுமா?’ (‘அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா!’ என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Bhogi1 - Thumbnail

போகி என்றொரு பெயரில்…

  போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்!   புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும்.   அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)

Self Help, ஆ...!

, , , ,

Taken3 - Copy

‘Taken 3’ – Movie review

திரைக்கதை சரியாய் இருந்தால் யார் நடித்தாலும் படம் மின்னும், சரியான பாத்திரத்தில் கூடவே, சரியான ஆளும் அமைந்தால்…பட்டையைக் கிளப்பும். அதுதான் நடக்கிறது இப்படத்தில். ‘போர்ன் ஐடென்டிடி, சுப்ரிமசி’ வரிசை படங்களுக்கப்புறம், ‘இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சி!’ என்று நினைக்கச் செய்யும் படம். மகளுக்காக எதையும், எதையுமென்றால் எதையும் செய்யும், முந்தைய ‘டேக்கன்’… (READ MORE)

Manakkudi Talkies

Thiruppugazh - Copy

ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்

  ‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!

Religion, Spirituality

, ,

Nataraja - Copy

திருவாதிரை திருநாள் இன்று!

அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality

, , , ,

aalumai3.jpg - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

Media Published, Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , , , , , , , , , ,