Tag Archive: தமிழ்

புலம் பெயர்ந்தோர் நலம்

பிழைப்பிற்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு என திட்டங்கள் அறிவித்து அசத்தியிருக்கிறது தமிழக அரசு! வாழ்க!  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கற்றுத்தருதல், அங்குள்ள ஆசிரியர்களை தமிழ் கற்ற ஊக்கப்படுத்துதல் என்பன மிகச் சிறப்பானவை. அதே மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் மொழித் தொடர்பு அற்றுப் போன அந்த சந்ததியினருக்கு… (READ MORE)

Politics

, ,

பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகட்டும்

சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, இனியும் வாழும் என்பதற்கான காரணம் தொடக்கக் கல்வி தொடங்கி மேல்நிலை வரை தாய் மொழிக் கல்வியாக தமிழ் இருக்கிறது.  என்னதான் நூல்கள், இலக்கியத்துறை என பார்த்துப் பார்த்து செய்தாலும், அடுத்த தலைமுறை தாய்மொழியை கைவிட்டால் அம்மொழி நலிவடைந்து விடும். இளம் தலைமுறை தாய்மொழியை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே கொண்டால், அவர்களின்… (READ MORE)

Politics

, , , , , ,

தமிழாராய்ச்சி தரவகம்…

உலகம் முழுதும் நடந்துள்ள தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை ஒரே தரவகத்தில் வைக்க ஏற்பாடு என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். எழுந்து நின்று வரவேற்கிறேன். ProjectMadurai.Orgயைப் போல இன்னும் பெரிதாய் இயங்கட்டும் இது. பேரறிஞர்களின் தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் அனைவருக்கும் காணக் கிடைக்கட்டும். கட்சிகள் கடந்த தமிழாராய்ச்சி தரவமாக இது இருக்கட்டும். வாழ்க! வளர்க! Facebook.com/ParamanPage

பொரி கடலை

, , , , ,

யாதும் தமிழே…

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் (தினமணி முன்னாள் ஆசிரியர்), வில்லிசைச் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி, கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா, திண்டிவனத்து தமிழ்ப்பள்ளி பேராசிரியர் ஆகியோர்க்கு இந்து தமிழ் நாளிதழ் ‘தமிழ் திரு’ விருதுகள் தந்து கௌரவித்தது அட்டகாசம். குடவாயில் பாலசுப்ரமணியம் சொன்ன தமிழக நீர் மேலாண்மையைப் பற்றிய அரிய தகவல்கள் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

தேடலும், தேர்வும்

நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம்,  ‘என்ற’ ‘என்னும்’  வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

, , ,