Tag Archive: பரமன்

ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில்…

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது. எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது. ‘டீ குடிக்கறீங்களா?’ ‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’ ‘சாப்பாடு இப்ப தருவாங்க… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

புத்தகத்தை மூடி வைத்தேன், அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப் பட்டிருக்கும்

தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும்…

ரயில் பயணம் ஒரு சுகம். பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறுவிதமாகவும் தெரியும் காடுகளைப் போலவே ரயிலும் இரவில் வேறு வடிவம் கொண்டுவிடுகிறது. பகல் முழுக்கத் தட தடவென்று உற்சாக குவியலாக ஓடிய அதே ரயில் இரவில் ஒரு தொட்டிலைப் போல வடிவெடுத்து விடுகிறது. ஆடியாடி மிதந்து செல்லும் ஓர் ஓடத்தில் உறங்குவதைப் போன்றதொரு உணர்வைத்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர்…

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம். பரமன் பச்சைமுத்து 15.09.2017

Spirituality

, , , , , , ,

நல்லழுகை…

வெறுமனே கிடந்த நிலையிலிருந்து மீண்டெழும் முன் உயர்த்திய கைகளின் வழியே பாய்ந்து கைகளை இறுக்கி முகத்தை தலையை நிறைக்கும் அந்த பிணைப்பு சில சமயம் கதறியழ வைத்துவிடுகிறது. அழுகை… நல்லழுகை! பரமன் பச்சைமுத்து 14.09.2017

Spirituality

, , , , ,

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’…

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

வைரமுத்துவின் உவேசா பற்றிய கட்டுரை அனுபவம்…

எழுத்தாளனை ஆழமாய் தெரிந்து கொள்ளும் போது முன்பு படித்த அதே அவனது எழுத்துக்கள் இன்னும் ஆழமாய் புரியும். அதே எழுத்துக்களை எழுதுபவனே படிக்கக் கேட்க இன்னும் சிறப்பாக விளங்கும், உள்ளே இறங்கும். சிறப்பாய் எழுதவும் அதை வாசித்து வெளிப்படுத்தவும் தெரிந்தவராயிருந்தால்… கிடைக்கும் அனுபவம் ஒரு கொண்டாட்டம். வைரமுத்துவின் ஆழமான ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை அவர் வாயாலேயே படிக்கக்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

wp-image-889211178.jpg

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது. ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , , , , , , ,

தகப்பன் மனசு

‘காலேஜ் ஃபெஸ்ட்’டாம் மலையாள ஓணம் விழாவாம் தலைக்கு ஸ்பா செய்து சேலையுடுத்தி நிற்கின்றன செல்லக்கிளிகள்! ‘இங்க பாரு பொட்டு வச்சிக்கோ, கையில வளையல போடு!’ பரபரக்கிறது அம்மாக்காரியின் மனசு. ‘வளர்ந்து விட்டோம் நாங்களென்று சேலை கட்டி நின்னாலும் குழந்தைகளாத்தான் தெரிகிறார்கள்’ என்கிறது என் தகப்பன் மனசு. 08.09.2017 சென்னை www.ParamanIn.com

பொரி கடலை

, , ,

dunkirk1 - Copy

‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

      அண்டப் பெருவெளியின் அடையமுடியா கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு புகுந்து வெளியேறும் அதிபுத்திசாலி நாயக நாயகியர்களைப் பற்றியும், உறங்கச் செய்து கனவுக்குள் மூழ்கி அதன் வழியே அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து உள்ளே ஆழ்மனதை சரி செய்துவிட்டு தனது கனவுக்குத் திரும்பி வட்டத்தை முடித்து மெதுவாக உறக்கத்திலிருந்து வெளியேறி விழித்து உட்காரும் புத்திசாலி நாயக நாயகி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

surya-singam3-photos-600x591

‘ சி 3’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நல்லூர் மளிகைக் கடையிலிருந்து சென்னை நகரத்திற்கு, அப்புறம் கடல் தாண்டி ஆப்பிரிக்க தேசத்திற்கு என்று தொடர்ந்து இப்போது ஆந்திராவிலிருந்து ஆஸ்த்ரேலியாவிற்கு என்று ஒரு திரைப்படம் மூன்று தொடர் பாகங்களாக வெளிவருவது தமிழுக்குப் புதிது.   ஹரி படம் என்றாலே வில்லன்கள் கேமராவை பார்த்துக் கத்துவார்கள், பரபரவென்று ஷாட்கள் நகரும், நாயகன் ஒரு குத்து குத்தினால் ஆட்கள்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

screenshot_20170206-124034.jpg

நதி போல ஓடிக்கொண்டிரு – 7

7.  ‘உடனிருக்கும் ஒவ்வொருவரும் முக்கியமானவரே!’ ‘ஈசனருள் இருந்தால் இடி விழுந்தவனும் எழுந்து போவான்,  ஈசனருள் இல்லையென்றால் இடறி விழுந்தவனும் இறந்து போவான்!’ என்று தனது ‘பாண்டவர் பூமி’ நூலில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி.   யாரோ எங்கிருந்தோ திடீரென வந்து நம்மை நாம் எதிர்கொள்ளவிருந்த ஆபத்திலிருந்து கைபிடித்து அல்லது குரல் கொடுத்து நம்மை நகர்த்தி காத்து… (READ MORE)

Media Published

, , ,

பசு

கோ மாதாவாம்… குல மாதாவாம்…

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’ இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள்.  இல்லை.  மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை…

வந்தோர் அனைவரும் வரிசையாய் அமர்ந்து கண்மூடி மௌனமாய், ஒரு வித தியான நிலையில்… அட… ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை கண் மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள், இரண்டு சொட்டு மருந்து போட்டு! #கண்மருத்துவமனை  :பரமன் பச்சைமுத்து சென்னை 07.12.2016 Www.ParamanIn.com

பொரி கடலை

,

o-LIFE-AFTER-DEATH-facebook

உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன்…

வாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.

Self Help

, , , , , ,

TheManWhoKnewInfinity_Trailer

திரை விமர்சனம் : ‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ : பரமன் பச்சைமுத்து

  கணிதத்தின் அறிந்துகொள்ள முடியா பெரு முடிச்சுகளின் ஆதாரங்களை அவிழ்த்துப் போடும் சூத்திரங்களை உள்ளே வைத்துக் கொண்டு, அதை நிரூபிக்க வெளியே தினம் தினம் போராடிய நம் தமிழ் மண்ணின் கணித மேதை ராமானுஜத்தைப் பற்றிய ஹாலிவுட் படம். (‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘முடிவிலியை முன்பே கண்டவன், முன்னமே அறிந்தவன்’ !!!?) சிறுவயதிலேயே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

exclamation

வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , ,

aram1

ஆழ்ந்து அசந்து போக வைத்த எழுத்து – ஜெயமோகன்

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

Marathinayam - Copy.jpg

மரத் தியானம்…

தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது.  தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)

Self Help, Spirituality

, ,

Backbiting - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5

பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)

Media Published, Self Help

, ,

aalumai3.jpg - Copy

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

Media Published, Self Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்

, , , , , , , , , , , ,

2014-12-23 23.38.38

தினமணி – “கம்ப ராமாயணம் படித்தால் கடவுளை உணரலாம் – பரமன் பச்சைமுத்து”

      கம்பன் கழகம், திருப்பத்தூர்    First Published : 07 September 2014 04:04 AM IST கம்ப ராமாயணத்தைப் படித்தால் கடவுளை உணரலாம் என திருப்பத்தூர் கம்பன் விழாவில் பரமன் பச்சைமுத்து பேசினார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் சார்பில் 36ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில்… (READ MORE)

Media Published

, ,

இப்படிக்கு, இக்கால மனிதன்…

நேற்று, ஓடி ஓடி உழைத்து, வேளா வேளைக்குப் பசியார உணவுண்டேன், உடல் நலம் கண்டேன். இன்று, ருசியார உணவு கண்டு, கண்ட வேளையில் உண்டேன், உடல் கெட்டேன், ஓடி ஓடி உழைக்கிறேன், நலம் பெற. இப்படிக்கு, இக்கால மனிதன் By – பரமன் பச்சைமுத்து [இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

,

Theeranathi

தீரா நதி

காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.   காலையில் கடைசி ஊர்வலமாம்.   கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும்.   வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம்  மெதுவாகப்… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

தேடலும், தேர்வும்

நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம்,  ‘என்ற’ ‘என்னும்’  வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

, , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

செப்டம்பர் 17

சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டு தள்ளி நின்று சிரிக்கிறது காலம்… ‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும், ‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும் ஒரே நாளில்  பிறந்தார்கள்! # பெரியார், #மோடி, #செப்டம்பர் 17 : பரமன் பச்சைமுத்து

Politics, ஆ...!

, , , ,

வாரும் மகாபலி…

வாரும் மஹாபலி! தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன்,  சில காலம் மண்ணில் வாழ்வான். தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான். அசுரனே என்றாலும் அன்பினால் ஆட்சி செய்தவனை அவன் மக்கள் கொண்டாடுவார்கள்! வாரும் மஹாபலி, வளம் பல தாரும் மஹாபலி! என்… (READ MORE)

Religion, ஆ...!, கவிதை

, , , ,

தலைவன்

‘பெரிதாய் பேசுகிறவர்கள் செயல் திறனிலும் சிறப்பாயிருப்பார்கள், பேசாமலே இருப்பவர்கள் பெரிதாக எதையும் செய்யமாட்டார்கள்,’ என்றெண்ணி இறங்கிய தலைவன் இழப்பது அதிகம். தலைவனுக்கழகு திறன் அறிந்து நடத்துதல்.   – பரமன் பச்சைமுத்து

ஆ...!

, ,

தந்தை மனம்

செல்வ மகள் எழுதிய ஆங்கிலக் கவிதை தேர்வாகி பிரசுரமாயிற்று பள்ளி அறிவிப்பு பலகையில். இரை  தவிர்த்து  இறை  தேடி ஓடும்  நாயன்மாரைப் போல் ஓடினேன் இறைக்க இறைக்க. கண்ணாடிக் கூண்டின் வெள்ளைத்தாள் வரிகளில் விரைகையில் வாய் சொன்னது ” கவிதை எழுதிய கவிதை!” :பரமன் பச்சைமுத்து

கவிதை

, ,