Tag Archive: மழை

குளித்து முடித்து நிற்கிறது மரம்

குளித்து முடித்து சொட்ட சொட்ட நிற்கிறது மரம் குளிப்பாட்டிய மழையன்னைவேறு எங்கோ சென்றுவிட காற்றண்ணனோசூரிய அப்பனோ துவட்டிவிட வரட்டுமெனகாத்திருக்கிறது மரம் – பரமன் பச்சைமுத்துசென்னை19.07.2020

கவிதை

,

மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா, ‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே, மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே, தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள். மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே, மாரியை அம்மனாக வழிபட்ட மூத்தோரே, மன்னிக்கவும். மழை என்றால் ‘சங்கடம்’ என்றே பதம் கொள்ளும்… (READ MORE)

கவிதை

, , ,

மழைநேர மனசு

‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட அதிகாலையில் எழுந்து பல்கூடத் துலக்காது சிரத்தையாய் செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை. ‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’ …. சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும் சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது… (READ MORE)

ஆ...!

, , , , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

தீபாவளி மழை

பட்டாசு நமுத்துப் போய் விடுமே… வெடிக்குமா வெடிக்காதா, வியாபாரம் நன்றாய் நடக்க வேண்டுமே, பட்டுப் புடவை கிடைக்குமோ கிடைக்காதோ, இதில் எப்படிப் பேருந்துப் பிடித்து ஊர் போய் சேர்வது, சே! தலையை அடகு வைத்தே தலை தீபாவளி… இந்தக் கவலைகள் எல்லாம் அப்புறம். முதலில் நரகாசுரன் வதமே நடக்குமா நடக்காதா என்று  கவலைப்படுமளவிற்கு விடாமல் பேய்… (READ MORE)

ஆ...!

, ,