Tag Archive: வாழ்க்கை

வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’ பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு. கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

o-LIFE-AFTER-DEATH-facebook

உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன்…

வாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.

Self Help

, , , , , ,

Theeranathi

தீரா நதி

காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.   காலையில் கடைசி ஊர்வலமாம்.   கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும்.   வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம்  மெதுவாகப்… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,