புதுச்சேரி வழி காட்டுகிறது!

புதுச்சேரி வழி காட்டுகிறது!

மொத்த விமான நிலையத்தையும் சூரிய சக்தி மின்சாரத்தால் வெற்றிகரமாக இயங்கவைத்து அசத்தி உள்ளனர். இப்படி முழு நிலையமும் சூரிய சக்தியால் இயங்குவதில் இந்தியாவின் முதல் நிலையம் புதுச்சேரிதானாம்!

மாதத்திற்கே 10,00,000/- ரூபாய் மிச்சமாம். இதைவிட முக்கியமான நம்மை ஈர்த்து மகிழ்விக்கும் சங்கதி – இந்த அளவுள்ள ஒரு விமானநிலையம் இயங்க என்எல்சியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்திருந்தால் 5,570 மெட்ரிக் டன் கார்பன் துகள்கள் கலந்து வளி மாசு ஏற்பட்டிருக்கும். அதை சரிகட்ட 32,850 மரங்கள் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள். இந்த வளிமாசு தவிர்க்கப் பட்டுள்ளது.

புதுவை அரசா, மத்திய அரசா, விமானத் துறையா எவர் எடுத்த முன்னெடுப்பு என்று தெரியவில்லை. எந்த பொறியாளர் எந்த அதிகாரி  இந்த திட்டத்தை பரிந்துரைத்தாரோ, அவர் வாழ்க!

பள்ளிச் சிறுவர்களுக்கு காலையுணவு, இப்போது சூரிய சக்தியில் விமான நிலையம் என்று
புதுச்சேரி வழி காட்டுகிறது.

– பரமன் பச்சைமுத்து
07.10.2020

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *