Monthly Archive: August 2017

தினமெழுந்தமர்ந்தால்…

அதிகாலை தினமெழுந்து கண்மூடியிருக்கும் தவம் பயிலப் பயில, குறிப்பிட்ட நேரம் வருகையில் தானாகவே தயாராகும் உடலையும் உள்ளத்தையும் உணர்ந்தல் இனிது. 30.08.2017

Self Help, Spirituality

, , , ,

wp-image-60849838..jpg

எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது…

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே. எப்படி விளையாடினோம் என்பது பார்க்கத்தக்கது. தோல்விதானது என்றாலும் இரண்டு மணி நேரமாகியும் இறுதி வரைப் போராடிய பாங்கு மகிழ்வையே தந்தது. வாழ்த்துக்கள் சிந்து! கோபிசந்த் மீது மரியாதை கூடுகிறது. வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 27.08.2017 Www.ParamanIn.com

Uncategorized

, , , , , , ,

Subconscious programing

😯😯 Happened to see a small clip of Mersal movie audio launch where Director Atlee speaking while praising Vijay… ‘ இனிமே இப்படி ஒரு நடிகரோட நான் வொர்க் பண்ண முடியாது! இனிமே இப்படி ஒரு படம் நான் பண்ண முடியாது! ‘ Why he speak like… (READ MORE)

Uncategorized

அனுபவப் பகிரல் என்பது அதிகம் நல்லதையே செய்யும் என்றாலும் …

அனுபவப் பகிரல் என்பது அதிசயங்கள் செய்யக் கூடியது.  அறியாமையால் அடுத்த வர இருந்த தவறுகளை இங்கிருந்தே களையச் செய்து ஏற்றம் தரக்கூடியது. வாழ்க்கைப் பாதையில் பயணித்து ஒரு நிலையை கடந்து நிற்கும் ஒருவனிடம் துவக்க நிலையில் நிற்கும் ஒருவன் செவிமடுக்கும் போது செய்யப்படும் அனுபவப் பகிரல் அசாத்திய விளைவுகளை அவனுள் ஏற்படுத்தி அவனை தூக்கி விட்டுவிடும்…. (READ MORE)

Media Published, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , ,

Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

  கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.   பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச்… (READ MORE)

Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , , , , ,

basheer

சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?

‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

அறிவு முதிர்ச்சியென்பது…

அறிவு முதிர்ச்சியென்பது எல்லாவற்றையும் பகுத்துப் பார்ப்பது, எதற்கும் ஒரு கருத்து கொண்டிருப்பது மட்டுமல்ல… சில இடங்களில் கொண்டிருக்கும் கருத்தை தள்ளி வைப்பது, அறிவைத் தாண்டிய அனுபவம் கொள்வது. – பரமன் பச்சைமுத்து 23.08.2017

Uncategorized

சென்னை - Copy

வாழ்க சென்னை!

    நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும், நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.   மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி   வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி, ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு, பெருமாளின் பெயர் சொன்னாலுருகும்… (READ MORE)

கவிதை, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , ,

பாயும் மீன்கள்…

இப்படி ஒரு நதியில் படகில் பயணித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எத்தனைப் பெரிய மீன்கள், எப்படித் துள்ளிப் பாய்கின்றன அவை? பாருங்கள் – பரமன் பச்சைமுத்து

Uncategorized

உடலை இலகுவாக்கும் சில ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் முடித்து அதிகாலையில் கண் மூடி கிடப்பது ஒரு அனுபவம். அந்நேரங்களில் உச்சந்தலையில் ஏற்படும் விளக்கவொண்ணா இணைப்பும் பரவும் உயிராற்றலும் ஓர் அனுபவம். 21.08.2017

Uncategorized

wp-image-1446808128.jpg

‘Jeyippathu Nijam’ @Kanchi

காஞ்சியில் நடைபெறும் ஒரு பயிலரங்கில் சென்னையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும் வருவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்! பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள். ‘சார்! பர்மிஷன் குடுக்கல சார் ஸ்க்கூல்ல. லீவ் போட்டுட்டு பையன கூட்டுட்டு வந்திட்டன் சார். இந்த நிகழ்ச்சிக்காவே மதுரைலேருந்து பையன… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

‘ஜெயிப்பது நிஜம்…’ – காஞ்சி மாநகரில்

‘செய் தொழிலில் நேர்த்தி’ பற்றிய ஒரு நாள் மலர்ச்சி வகுப்பு நாளை காஞ்சி மாநகரத்தில், ‘ஜெயிப்பது நிஜம்’ என்ற பெயரில். மலர்ச்சி மாணவர்களுக்கு இது வேண்டியிருக்காது என்று எவ்வளவு முறை கூறிய போதும், ‘எதாவது ஒரு பாயிண்ட் சர்ருன்று உள்ள எறங்கும், புது உத்வேகம் வரும் நாங்க வர்றோம்பா, பரவாயில்ல!’ ‘ தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வரோம்,… (READ MORE)

Uncategorized

Daily Thanthi Agamum Puramum Review

தினத்தந்தி புத்தக மதிப்புரை – ‘அகமும் புறமும்’

சென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்?’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது. ‘பல்வேறு… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , ,

Agamumpuramum

அமெரிக்க நண்பர் ‘அகமும் புறமும்’ நூல் பற்றி

அதிகாலை வேளையிலேயே அமெரிக்க தேசத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து ஒரு பதிவு ‘அகமும் புறமும்’ நூல் அருமையென்று. நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கட்டாயம் படிக்கவும் என்று பரிந்துரைக்கிறேன் என்று. படித்து பரவசப்பட்ட மென்பொருள் பொறிஞர் நண்பர் கட்செவியஞ்சலின் குழுமத்தில் பரிந்துரைத்து பதிவிட்டிருந்தார். அமேசான் கிண்டில் தொழில் நுட்பத்திற்கு நன்றி! வாழ்க! வளர்க! பரமன் பச்சைமுத்து 17.08.2017

Self Help

, , , , ,

அலாதித் தருணங்கள்

கை விரல்கள் கனத்து மெதுவே கண் விழிக்கும் வேளையில் நமது உடலே வெறும் உடலாகத் தெரிந்து கலைந்து போகும் அந்த சில விநாடிகள் அலாதியானவை! #தியானம் – பரமன் பச்சைமுத்து 17.08.2017 Www.ParamanIn.com

Self Help, பொரி கடலை

, , , , , ,

wp-image-14074033.jpg

பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’…

ஆழ்நிலையில் அமிழத் தொடங்கும் முன்னே கண்ணுக்குத் தெரியா சிறு சிறு வயர்கள் வழியே உடலோடு ஏற்படும் இயற்கை இணைப்பை உணர்ந்திராமல் ‘பண்டோரா’ கிரகத்து ‘மதர் ஈவா ட்ரீ’ பற்றிய அந்தக்காட்சிகளை எழுதியிருக்கவோ படமாக்கியிருக்கவோ முடியாது ஜேம்ஸ் கேமரூனால்! #அவதார் Facebook.com/ParamanPage

Self Help, பொரி கடலை

, , , , ,

அதிகாலை வானம்

ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விடச் சிறந்திருக்கும் அதிகாலை வானத்தைக் காணாதவர்கள் அதிகம் இழக்கிறார்கள். – பரமன் பச்சைமுத்து, 16.08.2017

பொரி கடலை

,

images.jpg

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே உத்வேகம் தந்தவனே. ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான். இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள் உன்னத வீரனே, போய்… (READ MORE)

Self Help, கவிதை

, , , ,

karkai-nandrey-original-imaewgye3scbkrf2

‘Karkai Nandrey’ Book authored by PARAMAN PACHAIMUTHU available in Amazon.in, Flipkart.com now…

‘Karkai Nandrey’ authored by Paraman Pachaimuthu Published by Emerald Publishers is avaiable in amazon and Flipkart : Flipkart: https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Emerald Publishers: http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/   Flipkart https://www.flipkart.com/karkai-nandrey/p/itmewk6fhnnj997z?pid=9788193454336 Amazon http://www.amazon.in/dp/8193454332 Website http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/

Karkai Nandrey - Book, Media Published

, , , , , , , , ,

Karkai Nandrey - Copy

“கற்கை நன்றே” – : எனது ஆறாவது நூல் : ‘வாழ்வின் மாணவனாகிய நான்… ‘

      வாழ்வின் மாணவனாகிய நான்… ‘…. ….. …இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது……. (READ MORE)

Karkai Nandrey - Book, Media Published

, , , ,

bigboss

‘நூறு கண்கள்’ கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’

இத்தனை நாள்கள் இருந்து ஆக வேண்டும் என்ற குறிப்போடுதான் அனுப்பி வைக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நாம் விரும்பும் வண்ணமே அவர்கள் அமைவதில்லை. தவறை ஏற்றுக் கொள்ளாத ஆரவ்களையும் சக்திகளையும், தவறென்றாலே ‘தவறுதான் சார்… தவறுதான் சார்!’ என்று எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு முறை கூட உள்ளே உணராமல்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,