Monthly Archive: December 2018

kanaa 1

கனா : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து :

வாழ்வின் பேரிழப்பு ஒன்றின் போது கூட கிரிக்கெட் ஆர்வத்தைக் துறக்க முடியா ஈர்ப்பு கொண்ட, காவிரி வள குளித்தலை பகுதியின் பெரும் விவசாயி முருகேசனின் கிரிக்கெட் பேரார்வம் அவரது மகள் கௌசல்யாவிற்கு கடத்தப்பட்டு, இந்திய நாட்டிற்காக விளையாடி வெற்றி வாங்கித் தரவேண்டும் என்ற ‘கனா’வாக மாறினால்? தேசத்தின் ஒரு மூளையில் இருக்கும் குளித்தலையிலிருந்து எதுவும் தெரியா… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

seethakathi_151607775300

‘சீதக்காதி’: திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும், மற்றவர்கள் எவரும் தொடக் கூட அஞ்சும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு முயற்சித்துப் பார்க்கும் அந்த துணிச்சலுக்காகவே ஒரு பூங்கொத்துத் தரலாம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும். ஐம்பது நிமிடத்திற்குக் குறைவாக வந்தாலும், நிறைவாக நிதானமாக கேட்டதை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி ‘எந்தப் படத்தில் எந்த ரோலில்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது…

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது. பொறிஞன், தொழில் நுட்பம் தெரிந்தவன் என்றாலும் வெட்கம் பிடுங்கித்தின்னும் நடுத்தர வர்க்கத்துப் பையனாகவே இருந்து அடியிலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் முக்கியக் கதவுகள் திறந்தது பெங்களூருவில்தான். சென்னை ‘ஆஃபீஸ் டைகர்’ (இன்றைய ‘ஆர் ஆர் டொனாலி’) ப்ராஜெக்ட்டில்… (READ MORE)

Uncategorized

மார்கழி மாலை

சென்னை நகரில், காற்றோட்டமான அமைப்பு கொண்ட வீடுகளில் பகல் நேரங்களில் மின்விசிறிகள் ஓடவில்லை. வயதானோர் இருக்கும் வீடுகளில் மாலை நான்கரை மணிக்கு சன்னல்கள் அடைக்கப்படுகின்றன, வேகமாய் வீசும் காற்றில் குளிரெடுக்கிறது அவர்களுக்கு என்பதால். அதிகாலையில் மெதுவாய் எழுந்து பின்பு தடதடவென்று புறப்பட்டு எட்டரைக்கு மேல் வீட்டுக்கு வெளியே வரும்படியான வாழ்வு முறையைக் கொண்ட நகரத்து மக்கள்,… (READ MORE)

Uncategorized

aquaman-movie-poster

திரை விமர்சனம் : ‘அக்வா மேன்’ : பரமன் பச்சைமுத்து

    நாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தின் காப்பாளரின் கண்களில், கரையில் அடிபட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பெண் அகப்படுகிறாள். அன்பும், அரவணைப்பும், மருந்தும் புகட்டப்பட்டு  சுயநினைவு பெற்று அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவள் வேறு ஓர் உலகத்தை சேர்ந்தவள் என்றும், கடலின் அடியில் இருக்கும் அட்லாண்டிஸ் தேசத்தின் ராணி ‘அட்லாண்டா’ அவள் என்றும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இறைவா நன்றி!

கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் இருக்கும் மலர்ச்சி மாணவர் ஒருவரோடு திருவான்மியூர் ஹாட்சிப்சில் காபி அருந்தி விட்டு எதிர்ப்புறம் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மிகப்பெரிய’ கடையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். ‘பரமன் சார்… எப்படி இருக்கீங்க! இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது!’ என்று… (READ MORE)

Uncategorized

சிட்னி ஷெல்டனின் காட்சிகளை தமிழ்ப்படுத்தி கண் முன்னே நிறுத்தியவர் ரீ.கி. ரங்கராஜன்.

ஆங்கில நாவல் உலகில் அடித்து ஆடியவர் சிட்னி ஷெல்டன். அக்காலங்களில் அதிகம் விற்றது அவரது நாவல்கள்தான் என்று சொல்வோர் உண்டு. ஆங்கிலமறியாமல் இருந்த அந்த இளம்பிராயத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை என்னுள் போட்டு, அந்தக் கதாபாத்திரங்களோடு என்னை உலவ விட்டவர் ரா.கி. ரங்கராஜன். ‘குமுதம்’ வார இதழில் வரும் ‘ட்ரேஸி விட்னி’க்காக வாரம் முழுக்கக் காத்திருந்து… (READ MORE)

Uncategorized

பாரதி விருது – தினமணி அசத்தல்

பாரதியின் பெயரால் ஒரு விருது வேண்டும், பாரதியைப் பற்றி ஆய்வு செய்வோர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அவ்விருதையும், ஒரு லட்சம் ரூபாயும் அளித்து வெகுமதி செய்ய வேண்டும் என்று கவியரசு கண்ணதாசன் கண்ட பாரதி கனவு இத்தனையாண்டுகள் கழித்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது. ‘மேல் நாடுகளில் ஷெல்லிக்கு ஒரு கூட்டமென்றால், ஷேக்ஸ்பியருக்கு ஒரு கூட்டமென்றால் மக்கள் கூட்டம் வருகிறது…. (READ MORE)

Uncategorized

‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி

‘அரிசிதான் உங்களது உடல் பருமன், சர்க்கரை என எல்லா நோய்களுக்குமான காரணம்!’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு!’ என்று பாரம்பரிய ரக நெல்களை மீட்டுத்தந்து இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தவர் ‘நெல்’ ஜெயராமன். 174… (READ MORE)

Uncategorized

எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது என்றொரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் அசல் ‘பட்சிராஜன்’ஆகிய சலீம் அலியை அந்நாட்களில் தனது எழுத்துக்களின் மூலம் எனக்கு அறிமுகம் செய்தவர் எஸ்ரா. என்னுள்ளே பல சன்னல்களை திறந்து விட்ட எழுத்தாளர்களில் எஸ்ராவும் ஒருவர். ‘நூலைப் படித்துவிட்டு ஒரு வாசகன் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதே எழுத்தாளனுக்குப் பெரிய அங்கீகாரம்!’… (READ MORE)

Uncategorized

Gaja Cyclone

காவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான வழி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கிராமம் இரண்டு லட்சம் மரங்களை இழந்து நிற்க, அதே ஊரின் விவசாயி சீனு மட்டும் ஒரு பாதிப்புமின்றி நூற்றுக்கணக்கான தென்னைகளோடு நிற்கிறார். ஊரின் எல்லா வீடுகளையும் கலைத்துப் போட்ட ‘கஜா’ இவரது வீட்டை மட்டும் விட்டுவிட்டது எப்படி? குறைந்த சேதாரங்களோடு நிற்கிறார் விவசாயி சீனு. ‘கஜா புயல் கடலூருக்கும்… (READ MORE)

Media Published

, , , , , , , , , ,