காஃபி ஒரு பானமல்ல
காப்பிக்காக அல்ல,காப்பி பருகும் போது கொள்ளும் தருணங்களுக்காக! காப்பி பானமல்ல,காரணம்! காஃபி வித் அம்மா@சரவணபவன் பரமன் பச்சைமுத்து28.04.2022 Amirtham AmirthamPachaimuthu ParamanAmma Paraman
காப்பிக்காக அல்ல,காப்பி பருகும் போது கொள்ளும் தருணங்களுக்காக! காப்பி பானமல்ல,காரணம்! காஃபி வித் அம்மா@சரவணபவன் பரமன் பச்சைமுத்து28.04.2022 Amirtham AmirthamPachaimuthu ParamanAmma Paraman
மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது. வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து… (READ MORE)
‘அத்தை! இது என்ன சட்னி!?’ என் மனைவியின் அம்மாவான, என் அப்பாவை அண்ணன் என்று விளித்த அத்தை, பைபாஸ் சர்ஜரி, கல்லீரல் செயலிழப்பு காரணங்களால் மாமா இறந்ததிலிருந்து எங்களோடுதான் வசிக்கிறார். அத்தைக்கு வயது 75. என் வீட்டில் அதிகாலைப்பறவைகள் என்றால் நானும் அத்தையும்தான். மற்றவர்கள் எழும் முன்னே எழுந்து ‘மெட்ராஸ் மில்க் ஏ2 மில்க்’ பாட்டிலை… (READ MORE)
‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)
அதிகாலை 05.50க்கு அருகில் வந்து ‘சிவா, ஆ… காட்டு! வாயத் தொற!’ என்று ஊட்ட வருகிறார் அம்மா. சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய். தயிர் நிறைந்த பெரிய பானையை வைக்கோல் பிரி சிம்மாடில் வைத்து, தரையில் தண்டாசனம் இட்ட… (READ MORE)
என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை! ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!? மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று,… (READ MORE)
சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து. ‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா…… (READ MORE)
நீச்சல் மட்டுமல்ல உலகமே தெரியாத சிறுபிராயத்தில், வெள்ளமென நிறைந்திருக்கும் நீர்நிலையில், குப்புற விழுந்து மூச்சு முட்டி பிரஞ்ஞையிழந்து வாழ்வின் விளிம்பிற்குப் போய் வந்திருக்கிறீர்களா? நான் போய் வந்திருக்கிறேன். தவறுதலாக நீருக்குள் குப்புற விழுந்து மூச்சு முட்டி நினைவு தப்பும் நிலையில் பிட்டம் தெரிய மிதந்த என்னை முதலில் பார்த்து அஞ்சலாட்சி அம்மாதான் வாய்குழறி கத்தி தெரியப்படுத்தினார்…. (READ MORE)
10 ஆண்டுகள் முன்பு இதே நாளில் ராமு – ராதை – முகுந்தன் – ப்ரீத்தியிடம் விடை பெற்று பெங்களூரிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தேன். வேலூரில் நடந்து கொண்டிருந்த தாயம் பேட்ச் 2, பேட்ச் 3 வகுப்புகளுக்கிடையில் பெங்களூரு மந்த்ரி உட்லண்ட்ஸ் வீட்டைக் காலி செய்து சென்னை ஆர் ஏ புரத்திற்கு குடிவந்து விட்டு என்… (READ MORE)
‘ஐயே, அறிவு இல்ல உனக்கு. நல்ல தீனிதானே திங்கற, இல்ல பீயத்திங்கறியா? சொல்லிட்டே இருக்கன். கேக்க மாட்டேங்கறே!’ வள்ளியம்மைப் பாட்டியின் குரல் உரத்து இப்படி வந்தால் வீட்டின் பின்புறத் தொழுவத்தில் நின்று பசுமாட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள். மனிதர்களிடம் பேசுவது போலவே மாட்டிடம் பேசிக் கொண்டிருப்பார், சில நேரங்களில் உரிமையாக கோபத்தில் திட்டியும் தீர்ப்பார்… (READ MORE)
ஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்?….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே!’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என்… (READ MORE)
‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன். மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)
அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)
ரேடியேஷன் டிபார்ட்மெண்ட்,Dr வனிதா கிருஷ்ணமூர்த்தி அறை: ‘அமிர்தம் அம்மா, இந்த ஸ்கேன் படத்தப் பாருங்க. உள்ள எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கீங்க. சர்ஜரி பண்ணி ரேடியேஷன் மருந்து குடுத்து ஸ்கேன் பண்ண எல்லாருக்கும் ஒரு ரேடியேஷன் ட்ரீட்மெண்ட்டாவது குடுக்கற மாதிரி வரும். உங்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை.உங்களுக்கு வந்த கட்டிய சர்ஜரி பண்ணி எடுத்த… (READ MORE)
கருவமரத்து சாலை பனஞ்சாலைசோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள் மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு தூளியிலிருந்த பிள்ளையைதூக்கையில்தரை வழுக்கிய போதும்தம்பியை விடாமல் தாங்கியதில்தடம் பிசகி மடங்கின கால்கள் சில நாட்கள் சங்கடம்சில வாரங்கள் பறந்தோடும்சீக்கிரமே குணம் வரும் ஒரே இடத்தில் நீவீடு… (READ MORE)
‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’ சில பாடல்கள், அவை இடம் பெற்ற திரைப்படங்களை நாம் பார்க்க வில்லையென்றாலும், நம்மை வேறு சில நினைவுகளுக்கு கூட்டிப் போய் விடுகின்றன. அந்தப் படங்களைப் பார்த்திருந்தால் படக்காட்சிகளின் நினைவுகள்தான் வரக்கூடும், பார்க்காததாலேயே நம் வாழ்வின் நிகழ்வுகள் நினைவில் வருகின்றன என்ற வகையில் பார்க்காததே வரம்தான். பகலில் பொதுவெளியில்… (READ MORE)
‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)
‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’ வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா). இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக… (READ MORE)
‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)
வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல், நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)
பாம்புகள் என்றதும் என்ன தோணும் உங்களுக்கு? ‘வீட்டுக்குள்ள வந்துது, அடிச்சித் தூக்கிட்டோம்!’ நீண்ட கழியொன்றின் நுனியில் ஒரு பாம்புக் குட்டியை மாட்டித் தூக்கிக் கொண்டு வந்தார் எதிர் வீட்டு முருகதாஸ். ‘என்ன பாம்பு இது?’ ‘சாரை, குட்டி!’ தெருவில் தரையில் கிடத்தப்பட்டது பாம்பு. ‘செத்துப் போச்சி, தூக்கிப் போட வேண்டியதுதான்!’ ‘ஆமாம், செத்திடுச்சி!’ ‘திடீர்னு இப்படி… (READ MORE)
அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)
பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)
‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)