Monthly Archive: July 2023

எம்எல்ஏ பெஸரேட்

எம்எல்ஏவாக இல்லாமலேயே ‘எம்எல்ஏ பெஸரேட்’ சாப்பிடலாம்! விஜயவாடாவிலிருந்து காக்கிநாடா பயணித்த போது ஒரு முறை மலர்ச்சி மாணவர்கள் வலுக்கட்டாயமாக வாங்கித் தந்து சுவைக்கச் செய்தது ‘எம்எல்ஏ பெஸரேட்டு’. ‘அது என்ன எம்எல்ஏ பெஸரேட்டு? இந்த ஊரு எம்எல்ஏக்கி அது ச்சால இஷ்டமோ?! ஏமிரா… ஏமிரா… ஏய் ஏமிரா அது?’ என்று ராஜமௌலி பட வில்லன்கள் போல… (READ MORE)

பொரி கடலை

பறவை சூழ் உலகு…

பறவைகள் என்று மொத்தமாய் சொன்னாலும் எல்லா பறவைகளும் ஒன்றல்ல. தரைக்கு மேலே வானுக்குக் கீழே என்ற வெளியில் வசிப்பவை பறவைகள் என்றாலும் உற்றுக் கவனித்தால் நிலைகள் புரியும். மிக மிக உயரத்தில் மட்டுமே பறக்கும், உயரத்தில் மட்டுமே கூடு கட்டி வசிக்கும் பறவைகள் (செங்கழுகு, கருங்கழுகு), அதற்கு அடுத்த நிலையில் பறக்கும் வசிக்கும் பறவைகள் (நாரை,… (READ MORE)

பொரி கடலை

திருவானைக்காவல்

இருபதாண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வாழ் இந்தியா டாட் காம் பொறிஞனாக இருந்த போது என் மகள்களைத் தூக்கிக் கொண்டு திருச்சியில் காவிரியில் இறங்கிக் குளித்து, வயலூருக்கும் திருவானைக்கா கோவிலுக்கும் போயிருந்தேன். இன்று இறை பற்றிய புரிதலும் நம்பிக்கையும் வேறு வடிவம் பெற்றிருந்தாலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு உரையாற்ற திருச்சி வந்ததும், வண்டியை திருவானைக்காவிற்கு விட்டேன்…. (READ MORE)

பொரி கடலை

ஒன்லி காஃபி

‘விமானமேறும் முன் முடித்துவிடுவோமே!’ என்று ஒதுங்குமிடத்திற்குள் ஒதுங்க நுழைகையில், முகப்கில் யாரிடமோ செல்லிடப் பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை நிறுத்திவிட்டு நம்மிடம் வருகிறார். ‘பரமன் சார்!?’ ‘எஸ்!’ ‘சார்… நான்….!’ ‘அடடா! ஆகா!’ ‘கத்தார்லேருந்து எறங்கி கோவை போறேன்!’ ‘வாங்க! அதே ஃப்ளைட்லதான் நானும்!’ நான் எழுதிய ‘உண்மையான மகளிர் தினம்’ என்ற கவிதையை மிகப்பெரிய பலகையில்… (READ MORE)

பொரி கடலை

(தென் துருவ)சந்திரனைத் தொட்டது யார், நாம்தானே, அடி நாம்தானே!

சந்திரனில் 1 நாள் பொழுது என்பது பூமியின் பொழுதில் எத்தனை நேரம் என்று கேள்விப்பட்டீர்களா? (விடை – கடைசியில்) இருட்டும் உறைய வைக்கும் அதீத மைனஸ் 200 டிகிரி குளிரும் கொண்ட இதுவரை யாருமே நுழையாத நிலவின் தென் துருவத்திற்குள் இறங்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறது நம் சந்திரயான் – 3.  தற்போது வானவெளியில் பயணித்துக்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1689002721486.jpg

‘மாமன்னன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

முன் குறிப்பு 1: ‘மாமன்னன்’ சொல்லும் அரசியல், அதன் பின்னே இருக்கும் வேறு செய்திகள் என நிறைய பகிரப்படும் வேளையில் இந்த விமர்சனத்தை எழுதுகிறோம். திரையில் பார்த்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை மட்டுமே குவியமாகக் கொண்டு செய்யப்பட்ட விமர்சனம் இது. படத்திற்கான விமர்சனம்!  நன்றி! முன் குறிப்பு 2: இப்படமே உதயநிதியின் கடைசிப் படம் என்று பேச்சு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

புவனகிரி நினைவுகள்

புவனகிரி நினைவுகள்: நெடுஞ்சாலைப் பயணத்தில் இருக்கிறேன். பண்பலையில் ‘ஏய்ய்ய்…. உன்னைத்தானே!’ பாடல் ஒலிபரப்பாகிறது. எஸ்பிபியை வித்தியாசமாக வெளிப்பட வைத்த இளையராஜாவின் சூப்பர் இசைப் பாடல். புவனகிரி பள்ளி, பத்தாம் வகுப்பு, ஏகே சீனிவாசன், கோவிந்தராஜூலு சன்ஸ் ஜோ, போலீஸ்காரர் மகன் பரமகுரு, பாலு, இலைக்கடை சங்கர், மணக்குடி பாலசரவணன், பாளையக்காரத் தெரு செந்தில், அவல்பட்டறை சோலையப்பன்… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

wp-1688555464473.jpg

‘போர்த் தொழில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

புலன் விசாரணை பற்றி புத்தகங்களில் மேய்ந்த ஏட்டுச்சுறைக்காய் சிறுசும், ரத்தமும் சதையாக துண்டு துண்டாய் வெட்டி மசாலா தூவி கறி சமைத்து சமைத்து கைகள் காய்ப்பு காய்த்த கதையாக அனுபவம் கொண்ட பெருசும் விருப்பம் இன்றி இணைந்து ‘சைக்கோபாத்’  தொடர்கொலைகளில் துப்பு துலக்க போகிறார்கள். கயிறு பிடித்து கண்டறிந்தார்களா, கண்டறிந்தார்களா என்பதை சிறப்பான படமாக தந்தால்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

wp-1688525934247.jpg

தலைவா! #Thalaiva #Wimbledon

விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ஃபெடரர் கௌரவிக்கப்பட்டதும், மனைவியோடு எழுந்து நின்று அவர் அதை ஏற்றதும் சிறப்பான தருணங்கள். ஆனால், அதைத் தாண்டியவொரு தருணம் காண்கிறேன் நான் இப்போது! ‘வாட்! அட! ஒஓஓஒ! ஊவ்!’ என்று நிற்கிறேன்! ‘பாட்ஷா’ திரைப்படத்து இடைவேளை பின்னணி இசை ஓடுகிறது மனதில். எத்தனை பேர் வந்தாலும் ரோஜர் ஃபெடரெர்தான் இன்று வரை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

சென்னை காவல்துறை இந்தியாவில் முதல்முறையாக…

சென்னை காவல்துறை செய்திருக்கும் இந்த முன்னெடுப்பு, வரப் போகிற பல முன்னேற்றங்களுக்கு புதிய மைல் கல் ஆக இருக்கும். இந்தியாவில் முதன் முயற்சியாக சென்னையில், மிக நுட்பமான கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பம் காவல் கண்காணிப்பு பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகத்தை கண்டறியும் (‘ஃபேஸ் டிடெக்டிங் கேமாரா’) தகவமைப்பு  கொண்ட கேமராக்கள் என்பதால் பல… (READ MORE)

பொரி கடலை