Monthly Archive: September 2018

‘இடக்கை’ – எஸ் ராமகிருஷ்ணன்

மன்னர்களின் நினைவுகள் மட்டுமே திரும்பத் திரும்ப காலங்களைக் கடந்தும் கடத்தப்பட்டாலும், வரலாறு என்பது சாமான்யகளாலும் ஆனதுதானே. பாரத கண்டத்தின் பெரும் பாதுஷா இறக்கும் தருணங்களிலிருந்து ஆஜம்கான், பகதூர்ஷா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஹேஸ்டிங், பென்டிங் வரும் வரையில் சாமானயர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை புனைவு செய்து கண் முன்னே விரிக்கிறது இந்நாவல்.ராணிகள், ஆசை நாயகிகள், சேவகர்கள், பணியாளர்கள்… (READ MORE)

Uncategorized

புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?

‘தேசனே தேனாரமுதே சிவபுரனே!’ பக்தியில் திளைத்து இதை மாணிக்கவாசகர் பாடும்போது, புற்றுத் தேனின் சுவையின் நினைவில் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது இன்று எனக்கு. ‘உன் பேரைச் சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே’ என்ற கார்த்திக் ராஜாவின் இசையில் வந்த ‘டும் டும் டும்’ படப் பாடல் வரியைப் போல, புற்றுத் தேன் என்று எழுதும் போதே… (READ MORE)

Uncategorized

நம்மால் இல்லை, நம் வழியே

எழுத்து என்பது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வெளி வருவது.  ஒரு அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று இருக்கும் போது, அதுவாக உருவெடுத்துக் கொண்டு எழுதுபவனின் உள்ளக்கிடக்கையில் காலங்காலமாகப் படிந்து கிடங்கும் படிமங்களை ஒட்டிக் கொண்டு வெளிவருகிறது. பல நேரம் அதுவாக வரும், சில நேரங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அது வருவதில்லை.  நாளை காலைக்குள் இத்தனைப்… (READ MORE)

Uncategorized

Chekka-Chivantha-Vaanam-Movie-Posters

‘செக்கச் சிவந்த வானம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆளு, அம்பு, சேனை குவித்து ஊரையே ஆளும் தாதா பெரியவர் சேனாதிபதியின் மெத்துமெத்தென்ற பெரிய இருக்கையில் உட்கார்ந்து கொள்ள ஒவ்வொருக்கும் உள்ளூர ஆசை. வல்லிய பெரியவரைச் சாய்த்து விட தாக்குதல் நடக்கிறது. பெரியவரைக் கொல்ல முயன்றது யார்? உள்ளூரின் போட்டி தாதா சின்னப்பதாசா, இல்லை வெளியூரில் இருக்கும் பிள்ளைகளா, பெரியவரைக் கொன்றால் யாருக்கு ஆதாயம் என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Boys2

கடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே…

மதுரை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி உரையாற்ற பாண்டியன் எக்ஸ்ப்ரெஸில் டிக்கட் போட்ட  போது திருநெல்வேலியில் இறங்கி குறுக்குத்துறை சென்று தாமிரபரணியில் குளிப்போம் என்றேன். குமரன், கார்த்திகேயன், ராமசாமி, நான் என நால்வரும் திருநெல்வேலியில் இறங்கி ‘நாடார் மெட்டல்ஸ்’ என்ற ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும் அந்தத் தெருவில் இருந்த ‘போத்தீஸ்’ஸின் உள் நுழைந்து… (READ MORE)

பொரி கடலை

images-202454794691736318737..jpg

‘இமைக்கா நொடிகள்’ : திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘ஒரு சிங்கம் பார்த்துப் பார்த்து திட்டம் போட்டு வேட்டையாடுச்சாம். எங்கிருந்தோ திடீர்னு வந்த கழுதைப்புலி மான் கறிய தின்னுட்டுப் போயிடுச்சாம். அந்த சிங்கத்துக்கு எப்படி இருக்கும்? கோவத்துல, அவமானத்துல பழி வாங்க அது துடிச்சதாம்!’ என்று கதாபாத்திரத்தின் குரல் வழியாகவே மொத்தத்தையும் சொல்லிவிட்டு அதை ஒரு நல்ல த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர். நல்லவராகத் தெரிபவர் உண்மையில்… (READ MORE)

Manakkudi Talkies

செம்பியன் மாதேவியின் மண்ணை…

திருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக… (READ MORE)

Uncategorized

இலங்கை மங்கலக் குத்து விளக்கு தெரியுமா!?

முதல் முறை இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் மங்கலக் குத்து விளக்கைக் கவனித்தேன். கொழும்புவின் பம்பலப்பிட்டி பகுதியின் சரஸ்வதி ஹால் மக்களால் நிரம்பியிருந்தது. நம் இலங்கை நண்பர்களின் ஏற்பாட்டில் நடக்க இருந்த ‘உறவுகளில் உன்னதம்’ மலர்ச்சி உரை தொடங்க இருந்த நேரத்தில், அறிவிப்பாளர் ‘ஐங்கரனைத் தொழுது மங்கல குத்து விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி’ என்று சொல்லி முக்கிய… (READ MORE)

Uncategorized

நிறைவுற்றது – ‘அச்சம் தவிர்…ஆளுமை கொள்!’ தொடர்

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒன்பது மாதங்கள் (முப்பத்தியைந்து வாரங்கள்) பறந்தோடி விட்டன. வாராவாரம் படித்ததை செயல்படுத்தி, ஓடிவந்து மின்னஞ்சல் மூலமும், ஈரோடு – திருச்சி – திருவண்ணாமலை – வேலூர் பகுதிகளில் நிகழ்ச்சிக்குச் சென்ற சில இடங்களில் அடையாளம் கண்டு அருகில் வந்து செய்த பகிர்வுகளின் மூலமும், வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி. ‘சார்… நான்… (READ MORE)

Uncategorized