Monthly Archive: February 2024

வலசைக்கு வந்த ஃப்ளெமிங்கோ

பிசி, எக்ஸ்டி, ஏடி என கணிப்பொறிகள் பயன்பாட்டில் இருந்த எண்பதுகளின் இறுதியிலான என் கல்லூரிக் காலங்களில் ஃப்ளாப்பி டிஸ்க்கள் கோலோச்சின. 360கேபி(கிலோ பைட்ஸ்) அளவு சேமிக்கும் கொள்ளளவு கொண்ட டிடிகே அல்லது ஆம்க்கிட் தயாரிப்பு ஃப்ளாப்பி டிஸ்க்களை நாங்கள் பயன்படுத்தினோம். பேசிக், ஃபோர்ட்ரான் போன்ற நிரல் மொழிகளை இயக்க அன்று அது போதுமானதாக இருந்தது. உள்ளடக்கத்தை… (READ MORE)

பொரி கடலை

பிரார்த்தனை என்பது…

பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து

Spirituality

, , ,

ராமலிங்கம் பிள்ளை உடல் விட்டார்

இறந்தவரின் ஆன்மா வேறு தற்காலிக உடல் தரப்பட்டு எம பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 12 நிமிடங்களில் திரும்பவும் சடலம் இருக்கும் இறப்பு வீட்டிலேயே கொண்டு வந்து விடப்படுவதாக சைவ சமயக் குறிப்புகள் சொல்வதை எண்ணிய படியே குயப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவில் அக்கா வீட்டு வாசலில், நேற்றிரவு உடலை விட்டு அமரராகிப் போன ராமலிங்கம் பிள்ளையை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில்…

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது. எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது. ‘டீ குடிக்கறீங்களா?’ ‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’ ‘சாப்பாடு இப்ப தருவாங்க… (READ MORE)

பொரி கடலை

, , , ,

சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்?

கேள்வி: சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்? பதில்: அமிதாப் பச்சன், எம்ஜியார் இதை செய்தார்கள். இப்போது விஜய் வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்துவது சிறந்த செயல் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கட்சி தொடங்கிய பின்பு எம்ஜிஆர் நடித்த ‘உலகம்… (READ MORE)

பொரி கடலை

, , ,