Monthly Archive: January 2021

திரை விமர்சகனை கூப்பிட்டார்கள்

சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு. ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’ ………. சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன். எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன்… (READ MORE)

Uncategorized

The book of Mirdad

‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு… (READ MORE)

Books Review

டீசல் கக்கும் பழைய வண்டிகள்…

குறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம். மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை… (READ MORE)

Uncategorized

எருக்கூர் மக்களுக்கு வணக்கம்

பணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள். காரை பாதி வழியில் நிறுத்தி விட்டுநகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க? இங்க என்ன… (READ MORE)

Uncategorized

wp-1611759628982435312528921141961.jpg

நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்

காஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும், அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம… (READ MORE)

பொரி கடலை

, , , ,

11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸🌸 இன்று தை – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ளவர்கள், வடபழனியில் வழக்கமாக செய்யும் இடம் என இரண்டு இடங்களிலும் மதிய உணவு தரப்பட்டது. 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை25.01.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

கண்ணப்ப மாலை

🌸 கபாலியை வணங்கி விட்டு ஐயர் தந்த சாமந்தியையும் வில்வத்தையும் கையில் வைத்துக்கொண்டு உள்பிரகாரத்தை சுற்றி வர நடக்கிறேன். ‘பெருமிழலைக் குரும்ப நாயன்மார்’ சிலையை இன்னைக்கு பாத்துடனும்!’ என்ற நினைப்புடனே நடக்கிறேன். திருநீலகண்டர் தொடங்கி வரிசையாய் அறுபத்து மூவரும் இருக்குமிடத்தில் ஒரு மனிதர் நிற்கிறார். சுவரில் இருக்கும் நாயனார்கள் சிலைகளுக்கும் அவருக்கும் இடையில் வெண்கல வண்ண… (READ MORE)

Uncategorized

wp-1611081883996.jpg

முழுமலர்ச்சி பேட்ச் 50

வானின் நீல நிற சட்டையும், யானை பழுப்பு நிற கோட்டும் அணிந்து கொண்டு ராயப்பேட்டை மேம்பாலத்தின் அருகிலிருந்த அந்த ஹோட்டலின் பேங்கொயட் ஹாலுக்குள் நுழைந்ததும், விஜய் சிவா படிகளில் என்னைப் படம் பிடித்ததும், சுதர்சனா, குத்தாலிங்கம், ராஜலட்சுமி, ஜெயகாந்தன், பூர்ணிமா நீத்து, பாலாஜி, அனீஷ் அன்பரசன், ஜெயந்தி, முத்துக்குமார், மோகன்குமார், கார்த்திகேயன், தனுஜா, சக்திவேல், அருள்பிரகாசம்,… (READ MORE)

Paraman's Program

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்… கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால்… (READ MORE)

பொரி கடலை

wp-1610987970972.jpg

‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தன் கடந்தகால வாழ்க்கையின் கசப்புகளால் குடிபோதையில் மூழ்கி எதையும் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமல் வாழும், ஆனால் மிகச்சிறந்த அறிவும் ஆற்றலும் உள்ளே கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர் தண்டனையாக சில காலம் ஒரு பள்ளிக்கு பொறுப்பேற்று வரும்போது,  இன்னும் இத்தனை நாட்களை கழித்து விட்டு போய்விடுவேன் என அதே மேம்போக்கு அசிரத்தையில் அங்கும் வாழும்போது, அவரது … (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , ,

மாற்றுமத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்

ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் 700 கோவில்களின் வழிபாட்டு சிலைகள் உடைத்து துண்டாக்கப் பட்டுள்ளன. பவன் கல்யாணும், தெலுங்கு தேசமும், பாஜகவும் ஆளும் குரல் கொடுத்ததால் விசாரணை நடந்தது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சியினரையும் பாஜகவினரையும் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில்,‘ஆமாம் நான்தான் 699 இந்துக்கோயில்களின் சிலைகளை உடைத்தேன். கோவிலில் இருந்த அந்த ராமர் சிலையையும்… (READ MORE)

Uncategorized

wp-1610776537905.jpg

வளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…

திருப்பூர் பகுதியின் குன்னத்தூர் காவல் நிலையத்தில், காலை காவலர்கள் கூடும் போது பணி பொறுப்பு பிரித்தளிக்கப்படும் தினசரி நிகழ்வில், நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் வாசிக்கப் படுகிறதாம்.  சுழற்சி முறையில் தினம் ஒரு காவலர் ‘வளர்ச்சி’ இதழின் ஒரு கட்டுரையை வாசிக்கிறார்கள். நாளின் தொடக்கத்தை மலர்ச்சி இறைவணக்கப் பாடலோடும், வளர்ச்சி கட்டுரையோடும் தொடங்குகிறார்கள். அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , ,

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

போகி – முதல் மாற்றம்!

பெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும்  மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம். கர்நாடக பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன்.  விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை… (READ MORE)

பொரி கடலை

பயிர்கள் அழுகுகின்றன

தீபாவளியின் போது வெளுத்துக்கட்டும் மழை பொங்கல் நேரங்களில் இருப்பதில்லை. நெற்கதிர்கள் விளைந்து பொன்னிறமாக மாறி அறுவடைக்குத் தயாராகும் வேளையில், நிற்காமல் அடித்து ஊற்றுகிறது மழை. பயிர்கள் படுத்துவிட்டன. எல்லா நெல்லும் நாசம். விவசாயிகள் உயிர் போனதாக குமைந்து வருந்தி தவிக்கின்றனர். அவரவர்க்கு தெரிந்த புரிந் த வகையில் இறையை இறைஞ்சுகின்றனர். மணக்குடி கோபாலகிருஷ்ண ஐயர், குழவியில்… (READ MORE)

Uncategorized

ஏவிசிசி – பெங்களூரு மீட்

 Bengaluru – Meet நண்பர்களை சந்திப்பது போல எதுவுமில்லை உலகில். அதுவும் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த வகுப்புத் தோழர்களை, தோழிகளை! பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா?’ என்று கேட்டிருந்தேன். மூவரும் ‘நிச்சயமாக!’ என்றார்கள். அதிகாலை நான் விமானத்திலிருக்கும்… (READ MORE)

AVCCP

வாசிப்பு பெருகட்டும்

செய்தித்தாள்களைக் கூட வாசிக்காமல் வெறும் மீம்ஸை படித்துவிட்டு பேசும் இளசுகளாக இருக்கிறார்களே, வாசிப்புப் பழக்கமே குறைகிறதே என்று கவலைப்படுவோர்க்கு ஒரு சிறு புள்ளி வெளிச்சம் தந்திருக்கிறது தமிழ்நாட்டு அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம். சமீபத்தில் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இளைஞர்களை கலை பண்பாடு நோக்கி நகர்த்தும் முயற்சியாக ‘வேள் பாரி’ புதினம் பற்றியும்… (READ MORE)

Uncategorized

wp-1609937883562.jpg

‘மழைப்பாடல்’ – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

பள்ளிப் பாடங்களில் காந்தாரம் பற்றி காந்தாரக் கலை பற்றிப் படித்திருப்போம், பாகிஸ்தானுக்கு அடுத்த பெருமணல் வெளி பாலையைக் கடந்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று அறிந்திருப்போம், மகாபாரதக் கதையில் திரிதராஷ்டிரனுக்கு மனைவியாக கண்ணைக் கட்டிக் கொண்டு வரும் காந்தாரி பற்றியும் கதைகள் கேட்டிருப்போம்… இவையெல்லாம் ஒரே இடத்தை குறிக்கின்றன, ஆப்கன் நாட்டிலிருந்து வந்த இளவரசி வசுமதியே காந்தார… (READ MORE)

Books Review

, , , , , , , , , , , , , , , ,

கோதாவரி ஆற்றில் சிலீர் அனுபவம்

ஆந்திரா செழித்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தியாவின் இரண்டாவது நீண்ட ஆறான கோதாவரி. தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களின் முக்கிய படபிடிப்புப் பகுதியான ராஜமுன்ட்றியில் கோதாவரியில் இறங்கி மார்கழி மாதத்தின் ஜஸ் நீரில் காலாற நிற்கும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று. சாளுக்கிய மன்னன் ராஜ மகேந்திரன் ஆண்ட இடம் என்பதால் ‘ராஜமகேந்திரவரம்’ என்று… (READ MORE)

Uncategorized

உப்புமா பெஸ்ரெட்டு @ஆந்திரா

ஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான்! ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ஓராண்டிற்குப் பிறகு விமானம்

சரியாக ஓராண்டிற்குப் பிறகு விமானமேற வருகிறேன். ‘டிக்கெட் தேதோ, ஐடி கார்ட்..’ என்று முரட்டு இந்தி இங்கிலீஷில் சொல்லி வாங்கி பார்த்துத் தரும்வாயிற்காவலர்கள், இப்போது இரண்டையும் தொடாமல் பார்க்கிறார்கள். ‘மாஸ்க் டவுன்..’ என்கிறார்கள் புதிதாய் முகம் பார்க்க. செல்ஃப் செக்இன் இயந்திரங்கள் கூடுதலாக உள்ளன என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலே அதிகம் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும்… (READ MORE)

Uncategorized

wp-16094981284213745354058379905676.jpg

நல்ல ஆண்டாக அமையும் 2021

🌸 ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, மலர்ச்சியின் புத்தாண்டு நிகழ்ச்சி 400 பேர்களுக்கு என்று நடத்தியே வழக்கம். நோய்த்தொற்றிலிருந்து உலகம் மெதுவாக மீண்டு கொண்டிருந்தாலும்,வழக்கமான பெரிய அரங்கு எடுத்து மலர்ச்சி உரை நிகழ்த்த நிறைய கட்டுப்பாடுகள். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர் என்பதால் அவர்களுக்காகமலர்ச்சி அரங்கிலேயே இம்முறை நிகழ்ச்சியை வைத்தோம். அறிவித்த… (READ MORE)

Uncategorized

, , , , ,