Monthly Archive: November 2019

சிங்கத்தின் கோட்டையில்..

கடல் மட்டத்திலிருந்து 4320 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வந்து ஏறுவதற்குக் காரணம், முக்கிய நிகழ்வுகள் திருப்புமுனைகள் நடந்த வரலாற்றுச் சின்னமிது என்பதால் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மலையேற்றத்தைப் போலல்லாமல் எவ்வளவு ஏறினாலும் உடல் நடுங்கினாலும் மூச்சிறைத்தாலும் வியர்க்கவே வியர்க்காத வெப்ப நிலை, இந்த உயர்ந்த மலையைச் சுற்றி எல்லா… (READ MORE)

Uncategorized

யோகாவைத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்

‘யோகப் பயிற்சியை தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நான் அடிக்கடி சொல்வதற்குக் காரணம் அது மதமோ கடவுளோ தந்தது எனும் பொருள் கொண்டு அல்ல, அது கொடுக்கும் உணர்வையும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கண்டு அசந்து சொல்வது அது. நாள் தவறாது தினம் யோகப்பயிற்சி செய்யும் தந்தையைப் பார்த்தே வளர்ந்தவனாகையால், அதன் பால் கொண்ட ஈர்ப்பு… (READ MORE)

Uncategorized

images.jpeg

ஷாருக்கான் நேர்காணல் நன்று

‘நான் டெல்லிப் பையன். என் அம்மாவிற்கு மூன்று பெண்கள் அப்புறம் நான். இவர்களுக்கு யாருமில்லையேயென்று என்னை அம்மா தத்துக்கொடுத்து விட்டார்கள். நான் பெங்களூருக்கு அனுப்பப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவிற்கு ஏக்கம் வர நான் திரும்பவும் அழைக்கப்பட்டேன்’ ‘வரிசையாப் படங்கள் எல்லாம் ஊத்திகிச்சி. அதான் ரொம்ப நாளாவே படமே பண்ணாம சும்மா இருக்காரு!’ என்று உலகம்… (READ MORE)

பொரி கடலை

, ,

சன்னல்கொத்தி

இரண்டு நாட்களுக்கு முன்பு என் பால்கனிக்கு வெளியே மாமரக்கிளையை கொத்திய மரங்கொத்தி, இன்று காலை என் அடுக்கக் குடியிருப்பின் மூன்றாம் தளத்து வீடொன்றின் சன்னலைக் கொத்தியது. ‘அப்பா… அப்பா, அங்க பாரு!’ என்று என் மகள் அன்று காட்டிய போது மாட்டாத அந்த மஞ்சள் அழகி, இன்று காலை ஓட்டப்பயிற்சி முடித்துவிட்டு வந்து பாதாம் மரத்தடியில்… (READ MORE)

Uncategorized

பாலாறு

தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிலோ மீட்டர் அளவு அகலம் கொண்ட ஓர் ஆற்றைக் கடக்கிறோமென்றால், அதிக பட்ச வாய்ப்பு அது பாலாறாக இருக்கலாம். சென்னைக்கும் – இடைக்கழிநாடு, காத்தான்கடை மரக்காணம் பகுதிக்கும் இடையே எப்போதும் மணல்வெளியாகவே காட்சி தரும் பாலாற்றில் இன்று நீர் இருப்பதைக் கண்டு இறங்கி விட்டேன். ஆந்திரத்திலிருந்து வந்து ஓடும்… (READ MORE)

Uncategorized