Monthly Archive: July 2022

திருவருட்பா

நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது). முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்…. (READ MORE)

Spirituality, பொரி கடலை

யாரிடம் கேட்பேன் இதை?

குளித்து விட்டு, நகங்களை வெட்டலாமென பால்கனியைத் திறந்து கம்பித் தடுப்புக்கு அருகில் நின்று கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கினேன் இன்று காலை. எங்கிருந்தோ வந்து அருகிலமர்ந்தது ஒரு காக்கை. தின்னும் பண்டம் எதுவும் வைத்திருக்கிறேன் என்று நினைத்தது போல. ஆனாலும் இவ்வளவு நெருக்கமாக வராதே காக்கை.  உணவே வைத்தாலும் ஓரக் கண்ணால் பார்த்து பார்த்து… (READ MORE)

பொரி கடலை

, ,

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

வருந்துகிறோம்

அம்மாவுக்கு மருத்துவப் பரிசோதனை, அதிகாலையே புறப்படல்,அடுத்தடுத்த பரிசோதனைகள் என முழுநாளும் கழிந்ததில் நேற்று மிருகசீரிடம் என்பதை கவனிக்கத் தவறியுள்ளேன். மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மூலமாக மிருகசீரிடம் அன்று செய்யப்படும் மதிய உணவு வழங்கல் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தவறவிட்டுவிட்டேன். பெரிதும் வருந்துகிறேன். 🌸🙏 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை26.07.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1658727979233.jpg

நமக்கு நடை பயில்வித்தவளை…

நமக்கு நடை பயில்வித்தவளைநாம் நடத்திக் கூட்டிப் போவது ஓரனுபவம் இதையும் எதையும் நடத்தி வைப்பதே அவனென உணர்கையில் கிடைப்பது பேரனுபவம் இடரினும் தளரினும் உறுநோய் தொடரினும் உடன் நிற்பதுசிவம் – பரமன் பச்சைமுத்துகுளோபல் மருத்துவமனை,பெரும்பாக்கம்25.07.2022 ( Here for a check up ) #Amma #AmirthamPachaimuthu#MuPachaimuthuArakkattalai #Paraman #GlobalHospital

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நகர்ப்புற வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறதாம் அம்மாநில அரசு. இதை குறிப்பிட்டுப் பேசியிரிக்கிறார் பாமக ராமதாஸ். அதன் பிறகே இப்படியொரு திட்டம் இருக்கிறதென்று கவனிக்கிறேன்.  நல்ல திட்டமாச்சே! கொண்டு வரலாமே! – பரமன் பச்சைமுத்துபெரும்பாக்கம்25.07.2022

Uncategorized

குட்டி பையன் டு மாம்பலர் ஐயர் கேட்டரிங்

1991ல் கல்லூரி முடித்திருந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில்தேவ், அசாருதீன் கொண்ட இந்திய அணி – டேவிட்பூன் போன்றோர் கொண்ட ஆஸ்த்திரேலிய அணி, லாராவின் மே.இந்திய தீவு அணி ஆகியவை ஆடிய மேட்ச்களை மெத்த ஐயர் வீட்டின் மகாதேவ ஐயரின் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்திருந்தேன் மணக்குடியில். (ஐயர்கள் வீட்டுக்குள்ளும் போனேன் நான்!) அப்போது எங்கள்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

அவரவர்க்கான வால்

ஆட்டுக்கும் வாலை அளந்து கொடுத்தான் ஆண்டவன் அவரவர்க்கான வால் அவரவர் விழாமல் தகவு நிலை கொளவே அடுத்தவர் மூஞ்சியில் மூக்கினுள் விட அல்லவே தன்னிலை தடுமாறாமல் தடுக்கத் தந்த வாலை அடுத்தவர் நிலை மாற்றி தள்ள நீட்டினால் அறுத்தெறிவான் ஆண்டவனென்னும் ஆகச் சிறந்த அறுவை நிபுணன் அடுத்தவன் வாலில் நெருப்பு வைத்ததால் அழிந்தது தென்னிலங்கை அவரவர்… (READ MORE)

ஆ...!, கவிதை

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிசிசி கல்லூரி நண்பன்

‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படித்து விட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலமது. அதில் வரும் பாத்திரங்கள் வாழ்ந்த, நிகழ்வுகள் நடந்த இடங்களுக்குப் போய் வருவோம் என முகுந்தன், ராமு பெருமாளோடு 2004ல் என் அப்போதைய மாருதி 800ல் கோடியக்கரை சென்று குழகர் கோவிலையும் அதையொட்டிய காட்டையும் பார்த்து வந்தியத்தேவனையும் பூங்குழலியையும் நினைவு கூர்ந்து களித்து விட்டு… (READ MORE)

AVCCP

,

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் நெற்றியில் நாமம் – வழக்கு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரலாறை மறைக்கிறார்கள் என்று சொல்லி மணிரத்னம், விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சுபாஷ் கரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஒருவர் என்ற தலைப்புச் செய்தியை பார்த்ததும் அதியசமாக இருந்தது. ‘இன்னும் படமே வரலியே! அதுக்குள்ள வரலாற்றை மாற்றினார்கள் என எப்படி சொல்ல முடியும்!?’ என்ற கேள்வியோடு செய்தியை தொடர்ந்து கவனித்தால், சமீபத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, பொரி கடலை

, , , , ,

காமராஜர் பிறந்த நாள்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்ற பெயரில், மணக்குடி கிராமத்தின் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் / ஆங்கில அகராதி / உணவு பாத்திரம் என எதையாவது தந்து மகிழ்ந்து கொண்டாடுவது என் தந்தையின் வழக்கம். அவர் தொடங்கியதை தொடரும் முயற்சியாக, மணக்குடி பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள், சிதம்பரம் பலகாரம்.காம்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்…. எனது பெயரை மாற்றிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அதற்கான அரசு அலுவலகத்திற்குப் போனேன் இன்று காலை. நீண்ட காலமாக ‘பேரை மாத்தனும், இதோ இப்போ செய்யலாம், இப்போ செய்யலாம்!’ என்றே எண்ணிக்கொண்டிருந்ததை… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆளை ஈர்க்கும் ஆல் : இரும்பை

மரங்கள் எப்போதுமே எனை ஈர்க்கின்றன. சில மரங்களைக் கண்டதும் தொடத் தோன்றும், சிலதை வெறுமனே பார்க்கத் தோன்றும், இந்த மரத்தையும் அதனடியில் இருந்த கல்லிருக்கையையும் பார்த்ததும் அதில் அமரலாமெனத் தோன்றியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலுப்பை மரங்களாலான காடுகளாக இருந்து ‘இலுப்பை’ என்று வழங்கப்பட்டு, மருவி இன்று ‘இரும்பை’ என்றாயிருக்கிறது. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…

‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே, என் கழுத்துக்கு மூணு முடிச்சுப் போடச் சொன்னாரே!’ சில பாடல்கள் மிகச் சாதாரணமானவையாக எளிமையானவையாக இருக்கும், ஆனால் முதல்முறை கேட்கும் போதே ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பாடல் இது. ரஹ்மானின் ‘என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்’, இளையராஜாவின் ‘காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,