Monthly Archive: February 2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 36வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (மாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வைக்கோல் உருளை

‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்தெல் என்று யானை கட்டிப் போரடித்த…’ என்று சங்கப்பாடல் குறித்தது போய், ‘ஆட்கள் வைத்துப் போரடித்தால் அல்லோலகல்லோலப்படுவோமென எந்திரம் வைத்து நெல்லறுக்கும் காலமிது!’ என்றாகிப் போனது இன்று. மணக்குடி போன்ற ஊர்களில் இரு வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன நெல் அறுவடைக்கு. வளர்ந்த கதிர்களை அப்படியே அறுத்து உள்ளிழுத்து சுழற்றியடித்து  நெல்மணிகளை… (READ MORE)

பொரி கடலை

முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும்… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16770425222136412632115368106978.jpg

துபாய் டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி)

துபாய் – டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி) வாகனங்கள் நிறைந்த துபாயின் சாலையோரங்கள், சங்கர் படத்தின் பாடல் காட்சிகளில் வருவது போல வண்ண வண்ண மலர்களும் மலர்க் கொத்துகளும் நிறைந்து மிக அழகாக காணப்படும்.  உற்றுக் கவனித்தால், ‘வேரில்லாமல் எப்படி இவை!’ என்று அதிர்வீர்கள்.  வேறொரு இடத்தில் தோட்டத்தில் பூச்செடிகளை வளர்த்து, மலர்க்கொத்துகளை மட்டும் வெட்டிக்… (READ MORE)

Paraman Touring, Uncategorized, அரேபிய அனுபவங்கள்

, , , , , , ,

அரேபிய அனுபவங்கள்

‘டீ ஒரு ரூவா, பெட்ரோல் ரெண்டு ரூவா, ஆனா தண்ணி ரெண்டரை ரூவாயா!!’ துபாயில் இறங்கியதும் இப்படி அதிர்வீர்களென்றால், துபாய் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவே வேண்டும்! ….. ஏழு நாடுகள், ஏழுக்கும் ஏழு மன்னர்கள், ஏழு ஆட்சிகள். ஆனால் ஏழு நாடுகளுக்குள்ளும் ‘ஒரே ரத்தம்’ சொந்தம். எழுநாட்டுக் குடிகளுக்கு தங்கு தடையில்லை. அபுதாபி, துபாய்,… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள்

குடியேற்றம் நுழைவு

நுழைவு அனுமதி பெற குடியேற்றம் எனப்படும் இமிக்ரேஷன் துறையில் நுழையும் போது பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு நாடுகளைப் பொறுத்து. கமல்ஹாசன் போன்ற நடிகரையே நான்கு மணி நேரம் கனடாவில் உட்கார வைத்தது உண்டு. அமெரிக்காவின் கதவு வரை போய்விட்டு அனுமதி கிடைக்காமல் ‘நோ’ என்று முத்திரை குத்தப்பட்டு விமானத்தில் திருப்பியனுப்பப் பட்டவர்களும் உண்டு. மருத்துவத்திற்காக… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள், பொரி கடலை

மாறிவிட்டது மயிலாடுதுறை. ஆனால்…

மயூர நாதர் கோவில், மகாதானத் தெரு, மணிக் கூண்டு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய் தொட்டு விட்டு திரும்பவும் இக்கரைக்கே ஒரே மூச்சில் வந்துவிடலாம் என்னுமளவிற்கான 100 அடி சாலையை விட சிறிய காவிரி ஆறு, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 400 நாட்கள் ஓடிய அந்த திரையரங்கம், வாழ்வில் முதன் முதலில் ‘ஸ்டோன்வாஷ் பேண்ட்’ வாங்கப் போன… (READ MORE)

AVCCP

, ,

போய் வாருங்கள் பாடகியே

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்தரிக்கா…’என் தந்தை போகிற போக்கில் பாட அவர் வழியாகவே அந்தப் பாடலை முதன் முறை கேட்டதாக என் நினைவு. ரேடியோவும் இசைத்தட்டுகளுமே இருந்த டேப் ரெக்கார்டர் இன்னும் வந்திராத அந்த மணக்குடி காலங்களில், இந்தக் குரல் கேட்டே வளர்ந்தோம். மஞ்சள் நீராட்டு, திருமணம் என நற்காரியங்களில் பந்தலிட்டு,… (READ MORE)

பொரி கடலை

,

அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன். சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 35வது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (தை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை01.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,