Monthly Archive: June 2018

வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்…

🌸🌸 வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்… #ValarchiTamilMonthly Facebook.com/MalarchiPage

Uncategorized

images-7.jpeg

பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்

குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை. ‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , ,

ஷாவோலின் – திரைப்படம்

மதம் பிடித்த யானை புகுந்த ஒரு வாழைத்தோட்டம் போல ஒரு பெரும்போரில் மிதிபட்டு நசுங்கி கிடக்கும் ஊரின் இடிபாடுகளிலிருந்து சடலங்களை கண்டெடுத்து அப்புறப்படுத்தி புத்தரின் பெயரால் சேவை செய்கிறார்கள் அவ்வூருக்கு வெளியே இருக்கும் ‘ஷாவோலின்’ கோயிலின் சீடர்கள். குவிந்து கிடக்கும் சடலங்களுக்கிடையே கொஞ்சம் முக்கலும் முணகலும் கேட்க, ‘ஹேய், இங்க ஒருத்தன் உயிரோட இருக்கான்!’ என்று… (READ MORE)

Uncategorized

இணைப்பில் இல்லாதபோதே பார்த்ததும் சார்ஜ்…

‘இன்னைக்கு என்னவோ நடந்திருச்சி. வளர்ச்சிப்பாதையில ரெண்டு எடத்துல உள்ளுக்குள்ள அப்படியே ஒரு உதறல் வந்துடிச்சி! இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் விட இந்த வளர்ச்சிப்பாதை வேற ஆழம்!’ – திருவண்ணாமலையில் வளர்ச்சிப்பாதை முடிந்தவுடன் பாபு பகிர்ந்தது. ‘இன்னும் க்ளாஸ் வைக்கலியே. ஏம்மா எப்பம்பா க்ளாஸுன்னு எல்லாருகிட்டயும் ஃபோன் பண்ணி கேட்டுகிட்டே இருந்தேன். பரமன், வாரம் ஒரு வீடியோ… (READ MORE)

Uncategorized

சாலைப்பயணத்தோடு நிலா

திருவண்ணாமலையில் வகுப்பெடுத்துவிட்டு வளைந்து வளைந்து செல்லும் பாதையில் பயணிக்கிறேன். வேலூருக்கு என் கூடவே வருகிறது நிலாவும். – பரமன் பச்சைமுத்து 21.06.2018 பாகாயம் Facebook.com/ParamanPage

Uncategorized

வெள்ளியை விதைத்தாயிற்று

குழந்தைகள் மிக எளிமையானவர்கள், விதைப்பதை பட்டென்று உறிஞ்சி உள்ளே பதித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். நாம் வெகு இயல்பாய் செய்யும் எதை எப்போது பிடித்துக் கொள்வார்கள் என்பது தெரியாது. ஒரு மலர்ச்சி மாணவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் இரு வாரங்களுக்கு முன்பு. உரையாடி மகிழ்ந்து விடைபெற்று வெளியே வந்து காரேறும் போது அவ்வீட்டின் சிறுமியிடம் வானத்தைக்… (READ MORE)

Uncategorized

அட…தாரை கருவி

ஊதல், தூம்பு, உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, எக்காளம், குழல், கொம்பு, சங்கு, நமரி, நாதசுவரம், திருச்சின்னம், தாரை என பாரம்பரிய ஊது(காற்று) இசைக் கருவிகள் பற்றி பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று, ஈரோட்டில் நம் மாணவர்கள் லதா – ராமலிங்கம் – ராஜேஷ் இல்லத்திருமணத்தில் தாரை இசைக்கருவியை அருகிலிருந்து அனுபவிக்க முடிந்தது.”தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் பாக்கலியோ?’… (READ MORE)

Uncategorized

ஈரோடு தினமலரில் நம் எழுத்து

நாம் போகும் ஊரில் நம்மை நம் எழுத்து வரவேற்றால்… மகிழத்தானே செய்வோம்! பிரித்தானியர்களை எதிர்த்து போரிட்ட திப்பு, தீரன் சின்ன மலை ஆகியோர் வசமிருந்த மண் கோட்டை இருந்த பகுதியில், நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டு எண்ணூற்றியைம்பது ஆண்டுகளாக வழிபடப்படும் ஆருத்ர கபாலீஸ்வரர் ஆலயம் அருகில், நமது எழுத்தைத் தாங்கி நிற்கும் ஞாயிறு தினமலரை ஏந்தி மகிழ்கிறேன்… (READ MORE)

Uncategorized

காவிரி வருகிறது

கேரள வயநாடுப் பகுதியில் பெருமழையைத் தந்ததன் மூலம் கர்நாடக கபினியை நிரம்பச் செய்து தமிழகத்துக்கு நீரைத் திறக்கச் செய்து, எல்லாருக்கும் மேலே நானிருக்கிறேனாக்கும் என்று கூறி இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கிறது பெரும் இயற்கை! பெரும் சக்தியைப் போற்றுதும்! – பரமன் பச்சைமுத்து சென்னை 15.06.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

‘கலகக் கலைஞன்’ – ஜெயகாந்தன் – கவிஞர் வைரமுத்து கட்டுரை

தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை கவிஞர் வைரமுத்து வாசிக்கும் நிகழ்ச்சிக்கு உடல்நலம் குன்றிய எழுத்தாளர் சிவசங்கரி இருமல்களுக்கிடையே தலைமையுரை ஆற்றும் போதே புரிந்தது, ‘பரமன், இந்த ஆளுமை செய்யும் இந்தப் பகிர்வுகள் தவறவிடக்கூடாதவை. நல்லவேளை நீ வாய்க்கப் பெற்றாய்!’ என்று பல்லி கத்தியது மண்டைக்குள்ளே. ‘வடகிழக்கு – வடக்கு இந்தியாவின் இலக்கியத்தோடு என்னை… (READ MORE)

Uncategorized

20180613_175723.jpg

லேனா… ஆ…ஆ!

நாம் பார்த்து பார்த்து பெரும் உவமையாகக் கொண்டு வளர்ந்த ஆளுமைகளை, வாழ்க்கை திடீரென்று நம் முன்னே நிறுத்தினால் மகிழ்வில் திளைக்கத்தானே செய்வோம்! கூடவே எதிர்பாரத வகையில் அவர்களுக்கு நம்மைத் தெரிந்திருக்கிறதென்று வேறு அறிந்தால்… அதிர்ந்து போகத்தானே செய்வோம் இன்பத்தில்! கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரையாற்றும் ஜெயகாந்தன் பற்றிய நிகழ்ச்சிக்கு அரங்கம் நோக்கி் நடக்கையில், அரங்கத்தின் வாயிலுக்குள்… (READ MORE)

பொரி கடலை

, ,

plastic

பிளாஸ்டிக் தடை – நல்ல செய்தி!

வரும் ஜனவரி முதல் குறிப்பிட்ட சில பயன்பாடுகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. நல்ல செய்தி! சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லுயிர்ச்சூழல் கெடாது காக்கப்படலாம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கி வயிறு சரிந்து மாயும் யானைகளும், பிளாஸ்டிக்கால் வதைபடும் குரங்குகளும், மீன்களும், மனிதர்களும் மற்ற பிற உயிர்களும் கொஞ்சம் காக்கப்படும். அப்படியே… கர்நாடாகாவிலும், இலங்கையிலும் இருப்பதைப்… (READ MORE)

பொரி கடலை

kaala-3600x2025-rajnikanth-karikaalan-tamil-telugu-hindi-4k-2018-8104

‘காலா’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

    சிவப்புத் திலகம் தீட்டிக்கொண்டு ‘தூய்மை மும்பை, ஒரே மும்பை’ ‘டிஜிட்டல் மாநிலம்’ என்று இயங்கும் ராமனை துதிக்கும் அதிகார வர்க்கத்தினர், அவர்களது கண்ணிற்கு கருப்பாக அழுக்காக தெரியும் ராவணனையும் அவனது மக்களையும் அழித்து அவர்களது நிலத்தை கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற களத்தில் திரைக்கதை பின்னி  ரஜினியையும் நானா படேகரையும் வைத்து ப.ரஞ்சித் தந்திருக்கும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,