Books Review

நீலம் – நாவல் வடிவில் பாகவதம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக படித்தும் செவி வழி கதைகள் கேட்டதுமன்றி பாகவதத்தை முழுதுமாக இதுவரை வாசித்தில்லை நான். பாகவதத்தை உள்வாங்கி நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் நண்பர் மதுவின் பரிசாக நம் வாசல் வந்து சேர, பாகவதம் விரிகிறது என் முன்னே என்னுள்ளே. சில அத்தியாயங்கள் படித்ததுமே வியப்பில் உறைந்து கீழ்வருவனவற்றை சொல்கிறேன்:… (READ MORE)

Books Review, பொரி கடலை

நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை. வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை… (READ MORE)

Books Review, பொரி கடலை

, , ,

wp-1627152148127.jpg

‘வால்காவிலிருந்து கங்கை வரை’ : ராகுல சாங்கிருத்தியாயன் – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

8000 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பயணித்து, விலங்குகளை வேட்டையாடி அப்படியே கடித்து பச்சை மாமிசத்தை உண்ட குகை மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, கிபி 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ஃபாஸிஸ்ட் போர் விமானங்களை குறி வைக்கும் பாட்னாவின் மனிதன் ஒருவனின் காலம் வரையிலான நிகழ்வுகளை 20 புனைவுக் கதைகளின் வழியே விவரித்துப் போகிறது இந்நூல். ‘இது உண்மையல்ல’… (READ MORE)

Books Review

, , , , , , , , , ,

wp-1619008359356.jpg

‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ – தமிழ்மகன் : பரமன் பச்சைமுத்து

ஆதியில் அண்டப் பெருவெளியில் நிகந்த பெரு வெடிப்பின் (‘பிக் பாங்’) பின் நிகழ்ந்த மாற்றங்களில் இந்தப் பிரபஞ்சம் உருவானது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் உருவானபோதே இன்னும் சில பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம், இந்த உலகில் இப்போது நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதைப் போலவே, அங்கும் ‘இணைப் பிரபஞ்சம்’ எனப்படும் பேரலல் யுனிவர்ஸ்ஸிலும் இருவர் பேசிக்கொண்டிருப்பர் என்பது அறிவியலாளர்கள்… (READ MORE)

Books Review

, , , , , , , , ,

wp-1618410412075.jpg

மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’  என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று  வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE)

Books Review

, , , , , , , , , , ,

wp-1613978192362.jpg

‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள். அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில்… (READ MORE)

Books Review

, , , , ,

The book of Mirdad

‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு… (READ MORE)

Books Review

wp-1609937883562.jpg

‘மழைப்பாடல்’ – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

பள்ளிப் பாடங்களில் காந்தாரம் பற்றி காந்தாரக் கலை பற்றிப் படித்திருப்போம், பாகிஸ்தானுக்கு அடுத்த பெருமணல் வெளி பாலையைக் கடந்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று அறிந்திருப்போம், மகாபாரதக் கதையில் திரிதராஷ்டிரனுக்கு மனைவியாக கண்ணைக் கட்டிக் கொண்டு வரும் காந்தாரி பற்றியும் கதைகள் கேட்டிருப்போம்… இவையெல்லாம் ஒரே இடத்தை குறிக்கின்றன, ஆப்கன் நாட்டிலிருந்து வந்த இளவரசி வசுமதியே காந்தார… (READ MORE)

Books Review

, , , , , , , , , , , , , , , ,

wp-1605512815279.jpg

‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ.  ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே.  ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர… (READ MORE)

Books Review

, , , ,

wp-16029283386754784143118184582684.jpg

‘முதற்கனல்’ – வெண்முரசு – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

நூலைப் பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு பெரும்வியப்பை முதலில் வெளிப்படுத்திவிடுவோம். 2014ல் தொடங்கி 7 ஆண்டுகளில் 26 பாகங்களாக 25,000 பக்கங்களில் தமிழின் ஒரு பெரும் நாவலை (உலகின் பெருநாவல்களில் ஒன்று என்கிறார்கள், சரியாகத் தெரியவில்லை நமக்கு) வடித்துத் தள்ளியிருக்கும் நூலாசிரியர் ஜெயமோகனை எண்ணுகையில், ‘ஒரு பாகத்தை சரியாக ஆழ்ந்து வாசித்து முடிக்கவே இவ்வளவு நாள்களாகிறதே… (READ MORE)

Books Review

, , , , , , ,

சாயாவனம் – சா கந்தசாமி : காலச்சுவடு பதிப்பகம்

பிழைப்புக்காக பிறந்த ஊரை விட்டு இலங்கையின் மலையகத்துத் தேயிலை தோட்டத்துக்கு சிறுபிள்ளையோடு ஓடி வந்த தாய் அம்மை வார்த்து குளிர்ந்து (இறந்து) போய் விட, அன்னையின் சவத்தையே பார்த்தபடி நிற்கும் சிறுவன் சிதம்பரத்தை கருப்பு உபதேசியார் சர்ச்சுக்கு அழைத்துப் போகிறார். அவனன்னை கோதிவிட்ட நீண்ட சிகை சிரைக்கப்பட்டு வெள்ளைப் பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்று டேவிட் சிதம்பரமாக… (READ MORE)

Books Review

, , , ,

wp-15986362771258330977967652512003.jpg

‘சஞ்சாரம்’ – எஸ் ராமகிருஷ்ணன் : நூல் விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

‘முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது. பதினெட்டு படிகள் கொண்ட சூலக்கருப்பசாமி கோவிலின் முன்னாலிருந்த சிமெண்ட் திண்டில், வெளிறிய ஆரஞ்சு நிற சால்வையை விரித்து உட்கார்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்த ரத்தினம் திடுக்கிட்டு நிமிர்ந்த போது, ‘தாயோளி நிறுத்துறா! சாமிக்கு யாரு வில்லு குடுக்கறதுங்கற பிரச்சினையே இன்னும் முடியல. அதுக்குள்ள வாய்ல வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க!… (READ MORE)

Books Review

, , ,

wp-15870241563715704037430440531192.jpg

ஜெயகாந்தனின் – ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – நூல் மீள் வாசிப்பு : பரமன் பச்சைமுத்து

வேட்டியை இடுப்பில் கட்டாமல்  போர்வையைப் போல் மேலுக்குப் போர்த்திக் கொண்டு கோவணத்துடன் திரியும் பல மனிதர்களையும் சில தெருக்களையும் கொண்டபேருந்து கூட நுழையாத ஒரு படு சிற்றூருக்கு நடை உடை வண்ணம் வடிவம் வாழ்க்கை முறை என அந்த ஊருக்கு எதிலுமே சம்பந்தமுமில்லாத வகை மனிதனொருவன் வருகிறான்.   அவன், ஒரு மணியக்காரர் வீடு, போஸ்ட்(ஆஃபீஸ்) ஐயர்… (READ MORE)

Books Review

, , , , , , ,