Uncategorized

அடுத்து செய்ய வேண்டியது

முன் குறிப்பு : உடல் நலத்தை பெரிதும் கவனித்துக்கொள்ளும் நண்பரொருவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது சில மாதங்களுக்கு முன்பு. வருத்தியெடுத்த அந்த துன்பம் அதோடு போகவில்லை, டைஃபாய்டு அவர் குடலில் செய்துவிட்டுப் போன கோளாறுகளால் இன்னும் தொடர்கிறது துன்பம். குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் நோய்த்தொற்றுக்கே காரணம் என்பது பிறகே கண்டுபிடித்தார்கள். உள் நுழையும் மொத்த வாட்டருக்கும்… (READ MORE)

Uncategorized

,

தவம்

ஆழ் தியானம் ஒரு சாதகருக்குள் கொண்டு வந்து ஊற்றும் சக்தியை எந்த புரத பல்நுண்சத்து பானங்களாலும் தர முடியாது. தியானம் ஒருவரின் உடலையும் உடலைத்தாண்டிய சங்கதிகளையும் உயிர்ப்படைய செய்து விடுகிறது. – பரமன் பச்சைமுத்து 28.11.2023

Uncategorized

, ,

எந்த கல்லூரி டாப் ?

கேள்வி: பரமன், எந்த கல்லூரி சிறந்தது? பரமன்: நான் ஆகச் சிறந்த கல்லூரியில் படிக்கவில்லை. சுமாரான கல்லூரியில் படித்தவன். கல்வியின் தரம், ஆய்வுக் கூடம், படித்து வெளியேறியவர்கள் பெற்றிருக்கும் வேலை மற்றும் வளர்ச்சி, கல்வி முடித்து எந்த அளவுக்கு உலகிற்கு தயாராகி வருகிறார்கள் என பல அளவுகோல்களை வைத்து விகடன் பெரும் சர்வே ஒன்றை செய்தது…. (READ MORE)

Uncategorized, பொரி கடலை

wp-1682706185115.jpg

பொன்னியின் செல்வன் 2′ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சுந்தர சோழரே பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார் என்று பேச்சுகள் நிகழும் வேளையில் சுந்தர சோழரால் ஈழத்திலிருக்கும் இளவல் அருண்மொழியை சிறை செய்து வர கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அப்படி வந்த கலம் புயலில் அடிபட்டு உடைந்து  அருண்மொழி கடலில் மூழ்கினார் என்பதோடு முடிந்த ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ன் தொடர்ச்சியாக விரிகிறது இப்போது வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

wp-16787896261027067601127805240161.jpg

போற்றி என் வாழ்முதலாகிய பொருளே…

கொற்கை பாண்டியர்கள் எல்லாம் முடிந்து காலம் உருண்டு மதுரை பாண்டியர்கள் செழித்திருந்த 9 ஆம் நூற்றாண்டு. பாண்டிய நாட்டை சிறப்புறச் செய்யவும் பாதுகாப்பு கருதியும் ஒரு முக்கிய முடிவு எடுத்து அமைச்சரை அழைத்தார்.…. (கொஞ்சம் இருங்க. 9 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலேருந்து அப்படியே பிரிட்டிஷ் இந்தியா காலத்துக்கு போய், ஒண்ண சொல்ல… (READ MORE)

Uncategorized

, , , , , , , , ,

wp-16770425222136412632115368106978.jpg

துபாய் டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி)

துபாய் – டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி) வாகனங்கள் நிறைந்த துபாயின் சாலையோரங்கள், சங்கர் படத்தின் பாடல் காட்சிகளில் வருவது போல வண்ண வண்ண மலர்களும் மலர்க் கொத்துகளும் நிறைந்து மிக அழகாக காணப்படும்.  உற்றுக் கவனித்தால், ‘வேரில்லாமல் எப்படி இவை!’ என்று அதிர்வீர்கள்.  வேறொரு இடத்தில் தோட்டத்தில் பூச்செடிகளை வளர்த்து, மலர்க்கொத்துகளை மட்டும் வெட்டிக்… (READ MORE)

Paraman Touring, Uncategorized, அரேபிய அனுபவங்கள்

, , , , , , ,

வெள்ளாடு vs கருப்பு ஆடு

ஓர் ஆடு நான்கு கால்களில் இருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி பின்னங்கால்களை தரையில் ஊன்றி இருத்தி ஒரு குதிரையைப் போல மெலெழும்பி முன்னங்கால்களை காற்றில் நிறுத்தினால்… இரண்டு காரணங்கள். ஒன்று – மகிழ்ச்சியாகவும் அதீத சக்தியோடும் இருக்கிறது. இரண்டு – வேறோர் ஆட்டை சண்டைக்கு அழைக்கிறது. (புதிர்: படத்தில் இருக்கும் அந்த ஆடுகள் என்ன வகை… (READ MORE)

Uncategorized

wp-1663333498208.jpg

‘கார்கி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தானுண்டு தன் ஆசிரியப் பணி உண்டு என்று வாழும் இன்னும் சில நாட்களில் திருமண நிச்சயம் செய்து கொண்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தைத்தொடங்கப்போகும் ஓர் எளிய குடும்பத்து மகளொருவள் பணிக்கு சென்ற தந்தையைக் காணோமெனத் தேடிப் போகையில் கிடைக்கும் செய்திகள் கேட்டு பதறி, குஞ்சைக் காக்க வல்லூரையே எதிர்க்கத் துணியும் கோழியாய் தவித்து எழுகிறாள்.  உலகமே… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

அறுவை சிகிச்சையென்றாலும் அசராமல் மீண்டு அண்ணாநகர் பூங்காவில் அதிகாலை நடைப்பயிற்சி செய்து அசத்துகிறார் இந்த (என்) அம்மா! – பரமன் பச்சைமுத்து 30.08.2022

Uncategorized

wp-1660918674005.jpg

‘ராக்கெட்ரி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை மதிப்பிற்குரிய விக்ரம் சாராபாய் ஆரம்பித்து நிர்வகித்து வந்த தொடக்கக் காலத்தில் அவரது நேரடி செல்லப் பிள்ளைகளாக வளர்ந்த சில விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன், நிறைய சாகசங்கள், மேற்படிப்பு, ஆராய்ச்சி, மேல்நாட்டு விஞ்ஞானியிடம் நேரடி கற்றல் என பலதையும் செய்து திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ராக்கெட்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , ,

காவிரி தென்பெண்ணை பாலாறு

பாரதி அதை எழுதும் போது ஒருவேளை கோவை – சேலம் – விழுப்புரம் – சென்னை வழித்தடத்தை மனதில் வரித்துதான் எழுதியிருப்பாரோ, ‘காவிரி தென்பெண்ணை பாலாறு’ என்று வரிசைப்படுத்தியிருக்கிறாரே! – பரமன் பச்சைமுத்துவிழுப்புரம் புறவழிச்சாலை15.08.2022

Uncategorized

மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நகர்ப்புற வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறதாம் அம்மாநில அரசு. இதை குறிப்பிட்டுப் பேசியிரிக்கிறார் பாமக ராமதாஸ். அதன் பிறகே இப்படியொரு திட்டம் இருக்கிறதென்று கவனிக்கிறேன்.  நல்ல திட்டமாச்சே! கொண்டு வரலாமே! – பரமன் பச்சைமுத்துபெரும்பாக்கம்25.07.2022

Uncategorized

wp-16513788072136417922580023823367.jpg

அல்ஃபோன்ஸா மாம்பழம் வாங்குகிறீர்களா?

அல்ஃபோன்ஸா என்றதும் ‘ஏக் ஹி சான் ஹே ராத் கேலியே!’ என்றவரின் பின்னிருந்து வந்து ‘ஒரேயொரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்… ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்!’ என ‘பாட்ஷா’ படத்தின் பாடலில் இடையை காட்டி வரும் நடிகையே மனதில் வருவார் முன்பு எனக்கு. இனி, ஒரு அட்டைப்பெட்டி நிறைய ரத்னகிரியிலிந்து வரவழைக்கப்பட்ட இந்த பழங்களை அனுப்பி வைத்த… (READ MORE)

Uncategorized

, , , ,

‘பரமன், உங்க அப்பா பேர்ல இருக்கற அறக்கட்டளையிலேருந்து மாதாமாதம் அன்னதானம் பண்றே. அத எதுக்கு ஃபோட்டோ எடுத்து போடறே?’ ‘பாரு பரமன், செய்யற உதவி வெளிய தெரியாம பண்ணனும். இல்லன்னா புண்ணியம் கெடையாது’ ஒவ்வொரு மாதமும் பலரும் எனக்கு சொல்பவை இவை. எந்த பதிலும் சொல்வதில்லை நான்.… 27.04.2022 சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், கர்நாடக பெங்களூருவின்… (READ MORE)

Uncategorized

wp-16493315866315944067076977724616.jpg

செக்யூரிட்டி செக்கின்

மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி  நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது. வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

16: புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம் ( ‘பரமன், புவனகிரியில் ஏதோ சமீபத்திய அதிசயம் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டு அதை அப்படியே விட்டுவிட்டீர்களே?’ சரி, இந்த பதிவில் எழுதி விடுவோம்!) … சுமாராக 150 ஆண்டுகள் கொண்ட புவனகிரி… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

, , , ,

புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்

8 புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்  (புவனகிரி பள்ளியின் இதயமான ‘க்ரவுண்ட்’ பற்றிய நம் முந்தைய பதிவைப் படித்து விட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரும் முனைவருமான சரவணன் (புவனகிரி பள்ளி மாணவர்) தமது வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார். முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘அசோக மரமும் பச்சைப் பைப்பும்’ பதிவைப் படித்துவிட்டு,… (READ MORE)

Uncategorized, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சென்னை – நூர் மேலாண்மை

பொன்னையன், இளங்கோவன்! கேள்விகளுக்கு நன்றி. எனக்கு எந்த கட்சியையும் சார்ந்திருக்கவோ எதிர்த்து நிற்கவோ அவசியம் ஏற்படவில்லை. சிவன் அதை எனக்கு ஏற்படுத்த மாட்டான் என்று நம்புகிறேன். நல்லதென்றால் எவராக எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்டுவேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலாக நான் எழுதும் இந்தப் பதிவும் அப்படியே. கட்சிகள் தாண்டி அரசியல் இல்லாமல் கொஞ்சம் பேசுவோம்…. (READ MORE)

Uncategorized

சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட

சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட அவர்களைப் பற்றிய உணர்வுகள் உயிரோடே உள்ளன நம்முள்ளே. புதுச்சேரி ஜிப்மரைக் கடக்கையில் அம்மாவிற்குள்ளும் எனக்குள்ளும் தனித்தனியே ஆயிரம் நினைவுகள். கடந்து வந்து காப்பி குடித்த பின்னும் கடக்க முடியா நிகழ்வுகளை நினைவு கூர்கிறோம். அப்பா இருந்த போதே போற்றிக் கொண்டாடியவன், இல்லாத போது Miss பண்ணுவேன்தானே! #MuPachaimuthu #AmirthamPachaimuthu

Uncategorized

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்!

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்! ஆண்டு தோறும் ‘மகாகவி நினைவு நாள்’ என்று மக்களை எட்டயபுரத்துக்கு வரவைத்து, விழா எடுத்து, பாரதி ஆய்வாளர்களுக்கு காசோலையும் விருதும் தரும் பணியை செய்த தினமணி நாளிதழ் நிச்சயம் திக்குமுக்காடியிருக்கும், இவற்றையும் இன்னும் பலதையும் சேர்த்து அரசு சார்பாகவே செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதைக் கண்டு. செப் 11 –… (READ MORE)

Uncategorized

, , , , ,

என் வழி கிருஷ்ண ஜெயந்தி

சைவநெறி குடும்பம் சைவ வெறி மூதாதையர் என்பதால் பொதுவாக வைணவ கிருஷ்ண ஜெயந்தி பழக்கத்தில் இல்லை எங்களுக்கு. காலையிலிருந்து மதியம் வரை 75 பேருக்கு 4 மணி நேரம் நின்று ‘Sales Excellence’ பயிற்சி வகுப்பு, மதியம் முழுக்க குழுவோடு அமர்ந்து வளர்ச்சி இதழ் வடிவமைத்து திருத்தி முடித்து அச்சேற்ற… என கழிகிறது இந்நாள் –… (READ MORE)

Uncategorized

நிறைய நல்லது செய்ய முனையும் ஸ்டாலின் அவர்களின் அரசு இதை கவனிக்க வேண்டும்.

நீட் தேர்வு பற்றிய சர்ச்சையும் வழக்கும் போராட்டமும் வெகுநாட்களாக நடக்கின்றன என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் என்ற திட்டங்களை செயல்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்தது முந்தைய அரசு. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்குவோம் என்று தேர்தலில் சொல்லி ஆட்சிக்கு வந்த… (READ MORE)

Uncategorized

அணில் அல்ல

அணிலால் பவர் கட் வரலாம்தான். ஆனா, இவ்ளோ பவர் கட்டுன்னா காரணம் வேற ஏதோ ‘பெருச்சாளிகள்!’தான் போல! – மணக்குடி மண்டு28.06.2021

Uncategorized

wp-16242665057132283860693803501635.jpg

ஓகத்தை கொண்டாடுகிறேன்

ஓட்டப் பயிற்சி, நடைப் பயிற்சி, தசையை உறுதியாக்கும் எடை பயிற்சி, நீச்சல் பயிற்சி என பலவற்றை மாற்றி மாற்றி செய்து பழகுபவன் நான். யோகப்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் அந்த ஒரு நிலையை வேறெந்த உடற்பயிற்சியும் தருவதில்லை என்பதை உரக்கவே சொல்வேன். உடலையும் உள்ளத்தையும் ஒரு நிலையில் ஒன்றினைக்கும் என்பதால் அது ‘ஓகம்’, அதற்கான பயிற்சிகளுக்கு ‘இருக்கை’… (READ MORE)

Uncategorized

, , , , , ,

மாநில வளர்ச்சிக் குழுவில் மருத்துவர் சிவராமன்!

👏👏 ‘மாநில வளர்ச்சிக் கொள்கை குழு’ அறிவிக்கப் பட்டு அதில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் பெயரும் அறிவிக்கப் பட்டுள்ளது. 👏👏👏👏 பாரம்பரிய மருத்துவம், நவீன அறிவியல் என இரண்டையும் மதிக்கும் இரண்டுமே தேவை என்று குரல் கொடுக்கும் சிவராமன் அவர்களை பொறுப்பில் வைத்ததை மிகச் சிறப்பானது என எண்ணுகிறேன். அரசுக்கு நன்றி!சிவராமன் சார் வாழ்த்துகள்!… (READ MORE)

Politics, Uncategorized

,

தமிழ் எழுத்துலகிற்கு…

‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் அரசும் பொதுவெளியும் மரியாதை தருகிறது. தமிழில் சினிமா தாண்டி கலை குறிப்பாய் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை. வாடகை வீட்டில் சேகரித்த நூல்களோடு செத்துப் போகிறான் எழுத்தாளன். எழுத்தாளர்களை உயர்த்தி தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வழி செய்யுங்கள், வரலாற்றில் நிற்பீர்கள்’ என்று குமுதத்தில் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்… (READ MORE)

Uncategorized

wp-1622621401566.jpg

உதவலாமே!: வீதியோர மனிதர்களுக்கு மதிய உணவு

இன்று ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் மதிய உணவு விநியோகம். ‘உதவலாமே!’ – ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு வழங்க மலர்ச்சி மாணவர் நற்சங்கம் முன்னெடுப்பு. உதவி செய்த அனைவருக்கும் பிரார்த்தனைகள்! பரமன் பச்சைமுத்துவாலண்டையர் –மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கம்02.06.2021 Udhavalaamey LockDown LockDiwnTimes FoodForPeople Food Malarchi MalarchiMaanavargal Facebook.com/ParamanPage

Uncategorized

, , , ,

images-18.jpeg

நெல்லி மோர் – அடிச்சி குடிங்க!

‘இங்க பாரு! சென்னை 37 டிகிரி, வேலூர் 39 டிகிரி… ஆனா ஊட்டி 21 டிகிரி’ ‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் இந்த வெய்ய கொறையுதா பாரேன்!’ ….. கோடை அலாதியான பழங்களை கொடையாகத் தருகிறது என்ற போதும் உடற்சூடு, அதீத வியர்வை வெளியேற்றம், வியர்க்குரு, சிறுநீர் சுருக்கம், கண் எரிச்சல், பார்வை மங்கிய உணர்வு என… (READ MORE)

Food, Uncategorized

, , , , , , ,

நல்ல தொடக்கம்

நடந்ததை ஏற்றுக் கொண்டு ‘அடுத்தது செய்ய வேண்டியது என்ன?’ என்ற மனப்பான்மையில் இயங்குகிறார் மக்கள் நீதி மய்யத்தின் கமல் என்று எண்ணுகிறேன்.  முதல்வர் ஸ்டாலினின் வீடு தேடிப் போய் வாழ்த்து சொன்னதை இப்படியே ‘பார்க்க விரும்புகிறேன்’. ‘பயந்துட்டாரு! ச்சும்மா போய் பாத்து வச்சிக்கறாரு, நாளைக்கு பிரச்சினை ஏதும் வந்துடக்கூடாதுன்னு!’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கலாம். (அரசியல்… (READ MORE)

Uncategorized

உறுதியோடு உயர்வோம்

திமுக முன்னிலை என்று ஊடகங்கள் செய்தி வெளியிடும் இவ்வேளையில், வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியில் வாழும் நிலையில் இருப்பது சங்கடம்தான் என்றாலும் இருக்கிறோம். கோவிட் பாஸிட்டிவ் வந்த அத்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். மகள் ஓர் அறையில் தன்னை அடைத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டாள். சுவருக்கு அந்தப்பக்கம் இருப்பவளிடம் செல்ஃபோனில் பேசுகிறோம். கதவருகே… (READ MORE)

Uncategorized

மனிதகுலம் கிமு 6000

கிமு 6000த்தில் வால்கா நதிக்கரையில் வாழ்ந்த ‘இந்தோ ஸ்லாவியா’ இன மனிதர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். ‘வேள்பாரி’யில் ஆதி மனிதர்கள் தாய் வழி சமூகம் கொண்டிருந்ததாக சு வெங்கடேசன் எழுதியிருப்பாரே, அப்படியிருந்திருக்கிறது இவர்களின் வாழ்க்கை.பத்து பதினாலு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவி மூத்த தாய் வழியில் குடும்பம் நடத்தப் பட்டிருக்கிறது. அவரின் சந்ததியோடு குடும்பம் நடக்கிறது…. (READ MORE)

Uncategorized

கடும் போட்டி தேர்தல் 2021

காலையில் மாலனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் வாக்கு சதவீதம், எடப்பாடி தொகுதி, கொளத்தூர் தொகுதி சதவீதம், கடந்த தேர்தல், பொதுப்புத்தி என நிறைய கணக்கிட்டு ஆய்வு செய்திருக்கிறார் அவர்.  அதன் கடைசிப் பத்தியை இப்படி முடித்திருக்கிறார். //  திமுக தரப்பில்,  கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் இதே போன்று 72 சதவிகிதம் இருந்ததையும்… (READ MORE)

Uncategorized

எத்தனையாண்டுகள் ஆனாலும் தொடர்கிறது குமுதத்தில் குறுக்கெழுத்து முடிக்கும் இந்த விளையாட்டு! சிறுவனாக இருந்த போதுசித்தப்பா வாங்கி வரும் குமுதத்தில் தொடங்கி, கல்லூரி காலத்தில் தினமலர் வாரமலரிலும் என கூடி, இத்தனையாண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது விருப்பமாக. இதனால்தானோ என்னவோ, இதற்கு முன்பு ஆசிரியாக பணி செய்த தமிழ் இதழில் வலுக்கட்டாயமாக குறுக்கெழுத்துப் பகுதியை சேர்ந்தேன். ‘வளர்ச்சி’… (READ MORE)

Uncategorized

அம்மா – குளோபல் மருத்துவமனை

சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடித்திருக்க வேண்டிய, உடல் ஆரோக்கிய சோதனை ஒன்றை,உலகம் தழுவிய பொது முடக்கத்தால் ஓராண்டு கழித்து இந்த மார்ச்சில் செய்துவிட்டு வெளியே வருகிறோம்! (சென்னை, பெரும்பாக்கம் – குளோபல் மருத்துவமனையில்) 30.03.2021

Uncategorized

wp-16151251877117480122333963145405.jpg

மஞ்சளாறு பாயும் அந்த ஊரு

‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா?  ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000  அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

,

மேற்படிப்பு

முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன். இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்! பரமன் பச்சைமுத்து06.03.2021

Uncategorized

சசிகலா துறப்பு – 2

(சசிகலா – தொடர்ச்சி) அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம். அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்…. (READ MORE)

Uncategorized

சசிகலா அரசியல் துறப்பு!

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை. முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால்… இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்!’ என்று பேட்டியெல்லாம்… (READ MORE)

Uncategorized

கட்சி கடந்த பாராட்டுவிழாவில்

அழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து பல… (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

AVCCP, Uncategorized

, , , , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

கண்ணெதிரே ஓர் ஏரி

கண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி! இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும்! இந்தக் கட்சி, அந்தக் கட்சி… (READ MORE)

Uncategorized

திரை விமர்சகனை கூப்பிட்டார்கள்

சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு. ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’ ………. சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன். எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன்… (READ MORE)

Uncategorized

டீசல் கக்கும் பழைய வண்டிகள்…

குறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம். மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை… (READ MORE)

Uncategorized

எருக்கூர் மக்களுக்கு வணக்கம்

பணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள். காரை பாதி வழியில் நிறுத்தி விட்டுநகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க? இங்க என்ன… (READ MORE)

Uncategorized

கண்ணப்ப மாலை

🌸 கபாலியை வணங்கி விட்டு ஐயர் தந்த சாமந்தியையும் வில்வத்தையும் கையில் வைத்துக்கொண்டு உள்பிரகாரத்தை சுற்றி வர நடக்கிறேன். ‘பெருமிழலைக் குரும்ப நாயன்மார்’ சிலையை இன்னைக்கு பாத்துடனும்!’ என்ற நினைப்புடனே நடக்கிறேன். திருநீலகண்டர் தொடங்கி வரிசையாய் அறுபத்து மூவரும் இருக்குமிடத்தில் ஒரு மனிதர் நிற்கிறார். சுவரில் இருக்கும் நாயனார்கள் சிலைகளுக்கும் அவருக்கும் இடையில் வெண்கல வண்ண… (READ MORE)

Uncategorized

மாற்றுமத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்

ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் 700 கோவில்களின் வழிபாட்டு சிலைகள் உடைத்து துண்டாக்கப் பட்டுள்ளன. பவன் கல்யாணும், தெலுங்கு தேசமும், பாஜகவும் ஆளும் குரல் கொடுத்ததால் விசாரணை நடந்தது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சியினரையும் பாஜகவினரையும் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில்,‘ஆமாம் நான்தான் 699 இந்துக்கோயில்களின் சிலைகளை உடைத்தேன். கோவிலில் இருந்த அந்த ராமர் சிலையையும்… (READ MORE)

Uncategorized

பயிர்கள் அழுகுகின்றன

தீபாவளியின் போது வெளுத்துக்கட்டும் மழை பொங்கல் நேரங்களில் இருப்பதில்லை. நெற்கதிர்கள் விளைந்து பொன்னிறமாக மாறி அறுவடைக்குத் தயாராகும் வேளையில், நிற்காமல் அடித்து ஊற்றுகிறது மழை. பயிர்கள் படுத்துவிட்டன. எல்லா நெல்லும் நாசம். விவசாயிகள் உயிர் போனதாக குமைந்து வருந்தி தவிக்கின்றனர். அவரவர்க்கு தெரிந்த புரிந் த வகையில் இறையை இறைஞ்சுகின்றனர். மணக்குடி கோபாலகிருஷ்ண ஐயர், குழவியில்… (READ MORE)

Uncategorized

வாசிப்பு பெருகட்டும்

செய்தித்தாள்களைக் கூட வாசிக்காமல் வெறும் மீம்ஸை படித்துவிட்டு பேசும் இளசுகளாக இருக்கிறார்களே, வாசிப்புப் பழக்கமே குறைகிறதே என்று கவலைப்படுவோர்க்கு ஒரு சிறு புள்ளி வெளிச்சம் தந்திருக்கிறது தமிழ்நாட்டு அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம். சமீபத்தில் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இளைஞர்களை கலை பண்பாடு நோக்கி நகர்த்தும் முயற்சியாக ‘வேள் பாரி’ புதினம் பற்றியும்… (READ MORE)

Uncategorized

கோதாவரி ஆற்றில் சிலீர் அனுபவம்

ஆந்திரா செழித்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தியாவின் இரண்டாவது நீண்ட ஆறான கோதாவரி. தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களின் முக்கிய படபிடிப்புப் பகுதியான ராஜமுன்ட்றியில் கோதாவரியில் இறங்கி மார்கழி மாதத்தின் ஜஸ் நீரில் காலாற நிற்கும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று. சாளுக்கிய மன்னன் ராஜ மகேந்திரன் ஆண்ட இடம் என்பதால் ‘ராஜமகேந்திரவரம்’ என்று… (READ MORE)

Uncategorized

ஓராண்டிற்குப் பிறகு விமானம்

சரியாக ஓராண்டிற்குப் பிறகு விமானமேற வருகிறேன். ‘டிக்கெட் தேதோ, ஐடி கார்ட்..’ என்று முரட்டு இந்தி இங்கிலீஷில் சொல்லி வாங்கி பார்த்துத் தரும்வாயிற்காவலர்கள், இப்போது இரண்டையும் தொடாமல் பார்க்கிறார்கள். ‘மாஸ்க் டவுன்..’ என்கிறார்கள் புதிதாய் முகம் பார்க்க. செல்ஃப் செக்இன் இயந்திரங்கள் கூடுதலாக உள்ளன என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலே அதிகம் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும்… (READ MORE)

Uncategorized

wp-16094981284213745354058379905676.jpg

நல்ல ஆண்டாக அமையும் 2021

🌸 ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, மலர்ச்சியின் புத்தாண்டு நிகழ்ச்சி 400 பேர்களுக்கு என்று நடத்தியே வழக்கம். நோய்த்தொற்றிலிருந்து உலகம் மெதுவாக மீண்டு கொண்டிருந்தாலும்,வழக்கமான பெரிய அரங்கு எடுத்து மலர்ச்சி உரை நிகழ்த்த நிறைய கட்டுப்பாடுகள். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர் என்பதால் அவர்களுக்காகமலர்ச்சி அரங்கிலேயே இம்முறை நிகழ்ச்சியை வைத்தோம். அறிவித்த… (READ MORE)

Uncategorized

, , , , ,

வைகுந்த ஏகாதசி அடையாறில்

பலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன! அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என… (READ MORE)

Uncategorized

images-18.jpeg

கார்த்தி சுற்றிருக்கிறீர்களா!

‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது!’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’ எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர். உறுதியாகவும் நீள்  வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து,  உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச்… (READ MORE)

Margazhi, Uncategorized

, ,

உறவினர் நிகழ்வு

உறவினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதில் உள்ள நல்ல விஷயம் நம் ஆட்களை ஒன்றாக சந்திக்க முடியும். உறவினர் நிகழ்வு ஒன்றில் சற்று முன்பு எடுத்தது் ##Somasippadi ##Gangashree 13.12.2020

Uncategorized

வேட்டி மறைப்பிற்கு இருபுறம் நின்றபடி திருமணம்

நாதஸ்வரமும் தவிலும் இசைக்கத் தொடங்கிய உடனேயே ஒரு இடமானது நல்நிகழ்வுக்குத் தயாராகிவிடுகிறது.  லாஷ்கர காந்தார தேசத்திலிருந்து படையெடுத்து வந்து டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களுக்கு நாதஸ்வர இசை புதியதாகவும் இடைஞ்சலாகவும் இருந்ததென்றும் மாலிக்காபூர் மட்டும் அதில் மயங்கிக் கிடந்தான் என்றும் சாகித்ய விருது பெற்ற தனது ‘சஞ்சாரம்’ புனைவில் எழுதியிருப்பார் எஸ்ரா.நாதஸ்வரமும் தவிலும் மிக எளிமையான… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்வது ஓரனுபவம்!

சோகம், வலி, ஏமாற்றம் என்றுஅழுகையில் பல்வேறு வகைகள் உண்டு.  தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்து உணர்ந்து வருவது ஒரு வகை அழுகை.  தனக்கு எதுவும் நடக்காத போதிலும், நல் ஆழமான உணர்ச்சியின் மிகுதியாக பொசுக்கென வெளிப்படும் நேரிய அழுகை பிறிதொரு வகை. இவ்விரு வகையும் உணரப்பட்டது சென்ற சனிக்கிழமை ‘வளர்ச்சிப்பாதை’யில். உறவுகள் பற்றிய வளர்ச்சிப்பாதை சிலரை… (READ MORE)

Uncategorized

wp-1606070319625.jpg

‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.

‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா?’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது. மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , ,

அடிக்கடி தேர்தல் வரட்டுமேயென்கிறது அடிமனது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும், சுழல் முறையில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். இப்படியொன்று நடப்பதற்கு காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை முன் வைத்தே ஆக வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்ததன்… (READ MORE)

Uncategorized

பளபள முகம்

‘க்வாலியர்…!’ பாவாடை மாமாவைப் பற்றிப் பேசுவதானால் ராமலிங்கம் சித்தப்பா சொல்லும் முக்கிய வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். தெரிந்த மனிதர்களையும் அறிந்து கொள்ள சிலர் உதவுகிறார்கள். இளம் பிராயத்தில் நான் விரும்பி நெருங்கி இருந்தது ராஜவேல் சித்தப்பாவோடும் ராமலிங்கம் சித்தப்பாவோடும்தான். ராமலிங்கம் சித்தப்பாவுக்கு பாவாடை மாமா என்றால் பெருமை, மதிப்பு. ராமலிங்கம் சித்தப்பாவால் பாவாடை மாமா மீது… (READ MORE)

Uncategorized

முழுமலர்ச்சி Batch 49

இரண்டு தொலைபேசிக் கவுன்சிலிங்கள், பிசினஸ் பக்கம் கட்டுரை எழுதியது, ஒரு வழிகாட்டல் உதவி என்பதைத் தாண்டி வேறு சில கூடுதல் நிகழ்வுகளாலும் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்தது. இறைவனின் அருளால், முழுமலர்ச்சி திரள் 49 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது என்பது நல்ல நிகழ்வு. இரண்டாவது வகுப்பான இன்றே மனம் விட்டு வாய் விட்டழுது பகிர்வு… (READ MORE)

Uncategorized

வண்டலூர் ஏரி உயிர் பெறுகிறது

102 ஏக்கர் பரப்பளவுள்ள 100 ஏக்கர் விவசாயத்திற்கு பாசனம் தந்த வண்டலூர் ஏரி, பொது மக்கள் குப்பைகளை கொட்டி வந்ததாலும் வண்டலூர் ஊராட்சி குப்பையைக் கொட்டி எரித்ததாலும்(!!!) தனியார் ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் துர்ந்து 60 ஏக்கர் விவசாயப் பானத்திற்கு மட்டும் அளவிற்குச் சுருங்கிப் போனது. இந்தியன் சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற தனியார் நற்சங்கம் இறங்கி வேலை… (READ MORE)

Uncategorized

திறந்திருக்க வேண்டாம் திரையரங்குகளை

மெரீனா கடற்கரை, தி நகர் ரெங்கநாதன் தெரு என பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பள்ளிகள் 16ஆம் தேதியிலிருந்து  திறக்கலாம், புறநகர் ரயில்கள் ஓடலாம் என்பனவும் தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்தும் இல்லாமல் புறநகர் ரயில்களும் இல்லாமல் தவித்த சிறு குறு வியாபாரிகளுக்கு இது நற்செய்தி. பள்ளிகளைப் பொறுத்த… (READ MORE)

Uncategorized

இலங்கை மஞ்சள் மூட்டைகள்

மீன் பிடி நாட்டுப் படகில் நேற்றும், இலங்கைக்குக் கடத்த முயன்ற 2,000 கிலோ மஞ்சளை (73 மூட்டைகள்) பறிமுதல் செய்திருக்கிறார்கள் ராமேசுவரத்தில் என்று செய்திகள் வந்துள்ளன. இது வரையில் 8,000 கிலோ பிடிக்கப்பட்டுள்ளனவாம். சமீபமாக அடிக்கடி ‘இலங்கைக்கு மஞ்சள் மூட்டை கடத்தல்’ வகை செய்திகள் வருகின்றனவே! 😯

Uncategorized

வந்து விட்டது வடகிழக்குப் பருவமழை

வானகச் சிறுவர்கள் சிலர் ஊரளவு பெரிய சல்லடையொன்றின் மீது வாய்க்காலின் மதகைத் திறந்து நீரை விட்டது போல பெய்து கொண்டேயிருந்தது மழை.அதிகாலை மூன்றுக்கு வெட்டிய தொடர் மின்னல்களின் வெளிச்சமும் இடித்த பேரிடிகளும் அப்போதிலிருந்து காலை ஏழு வரை அடித்த மழையும் மிரள வைத்தன. வானியலாளர்கள் கணித்த படி வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது நகரங்களின்… (READ MORE)

Uncategorized

தாகம் தீர்க்கும் ஆந்திரத்திற்கு நன்றி

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்க் கொடை தந்து சென்னை மக்களின் அடுத்த ஐந்து மாத குடிநீர்த் தேவையை தீர்த்து வைத்த ஆந்திரத்திற்கு நன்றி! பிரார்த்தனைகள்! வாழ்க! KrishnaWater KrishnaRiver Chennai Facebook.com/ParamanPage

Uncategorized

நீர்க்கோழி்

கடற்கரையில் படுத்துக்கொண்டு தலையை மட்டும் மணலுக்குள் புதைத்துக் கொண்டு கிடப்பவனைப் போல உடலை நீரின் மேலே மிதக்க விட்டபடி கழுத்தை மட்டும் வளைத்து நீட்டி நீருக்குள் விட்டு இரைகளைத் தேடிப்பிடிக்கும் நீர்க்கோழியைக் கண்டிருக்கிறீர்களா? நான் முதன்முதலில் நீர்க்கோழியைப் பார்த்தது மணக்குடியின் பாப்பாக் குளத்தில்தான். மொத்த ஊரும் பயன்படுத்திய அந்தக்குளம் நீர் நிறைந்து பனை கருக்குப் போன்ற… (READ MORE)

Uncategorized

புதுச்சேரி வழி காட்டுகிறது!

புதுச்சேரி வழி காட்டுகிறது! மொத்த விமான நிலையத்தையும் சூரிய சக்தி மின்சாரத்தால் வெற்றிகரமாக இயங்கவைத்து அசத்தி உள்ளனர். இப்படி முழு நிலையமும் சூரிய சக்தியால் இயங்குவதில் இந்தியாவின் முதல் நிலையம் புதுச்சேரிதானாம்! மாதத்திற்கே 10,00,000/- ரூபாய் மிச்சமாம். இதைவிட முக்கியமான நம்மை ஈர்த்து மகிழ்விக்கும் சங்கதி – இந்த அளவுள்ள ஒரு விமானநிலையம் இயங்க என்எல்சியிலிருந்து… (READ MORE)

Uncategorized

துப்புரவாளர்கள் மாறுகிறார்கள் சென்னையில்

எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம். தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும். 😃

Uncategorized

துப்புரவாளர்கள் மாறுகிறார்கள் சென்னையில்

எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம். தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும். 😃

Uncategorized

பாரதியார் இல்லத்திலெடுத்த படங் கள்

பாரதியார் இல்லத்தில் படமெடுக்க முடியாது, கூடாது. அனுமதியில்லை.ஏதோவோர் அனுகூலத்தால் எனக்கு அப்பேறு கிட்டியது அன்று. இது 360 டிகிரி படம். உங்களை விரல்களை வைத்துத் தள்ளி சுழற்றி பாரதியின் முழு வீட்டையும் காணலாம். மலர்ச்சி மாணவர் ஒளிஓவியர் கோபிநாத் எடுத்தவை இப்படங்கள். https://momento360.com/e/u/2677affbe645458189c69230180c028c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/63c601e8c581406b85b17635f4928453?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/ec4debfe72bd44898e5c5dce07f4865c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/6cd4a202a6624c278fbc5d01235f4a0c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/feed8f2a4ec34a5c9bec971ab9fd9042?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/bdb5a3bc436e470faa4f166a87cdb547?utm_campaign=embed&utm_source=other&heading=178.68696603836378&pitch=-9.499744746633604&field-of-view=75 https://momento360.com/e/u/1489eadd5d234f16a72a00d1fc762954?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 கைவைத்து சுழற்றி முழுப்படத்தையும்… (READ MORE)

Uncategorized

22 தேசிய மொழிகள், செய்யலாமே!

காஷ்மீரில் ஏற்கனவே அலுவல் மொழியாக இருந்த உருது, ஆங்கிலத்தோடு, மக்ளிடம் பேசப்பட்டு வந்த டோக்ரி, காஷ்மீரி, இந்தி ஆகிய மூன்றையும் சேர்த்து ஐந்து மொழிகளையும் அலுவல் மொழியாக்கியிருக்கிறார்கள்.  ‘என்னாது, இவ்ளோ நாளா காஷ்மீர்ல காஷ்மீரி மொழியே அலுவல் மொழியாக இல்லையா!’ என்ற அதிர்ச்சியைக் கடந்து வரும் எண்ணம் – ஐந்து அலுவல் மொழியா! அப்படியானால், இந்தியாவின்… (READ MORE)

Uncategorized

உயர்நீதி மன்றத்தின் நல்ல கேள்வி

‘சித்த மருத்துவ மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும், ஏன் நியமிக்கவில்லை? அந்தப் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவம் படித்தவரை மத்திய அரசு நியமித்துள்ளது ஏன்? சித்த மருத்துவத் துறையில் இணை ஆலோசகர் என்ற ஒரு பதவியை ஏன் மத்திய அரசு இல்லாமல் செய்தது? ‘ என்ற உயர்நீதி மன்றத்தின் கேள்விகள்… (READ MORE)

Uncategorized

அவர்கள் கொண்டிருப்பது பொறுப்பு

பிள்ளையார் வாங்க பையை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போகும் போதே கவனித்தேன். செட்டிநாடு ஹரிஸ்ரீ பள்ளியிருக்கும் தெருவில் இப்போது இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுவாசதி வாரியக் குடியிருப்பின் முன் மண் பிள்ளையார் செய்து கொண்டிருப்பவரை. நமக்கு அப்பவே மண் எடுத்து அச்சில் சாம்பல் தூவி அப்படியே அடித்து சுடச்சுட எடுக்கப்பட்ட பிள்ளையார் வேண்டும். சந்தையில் சில… (READ MORE)

Uncategorized

ஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…

ஆளுநர் அனுமதி அளித்ததின் பேரில் சட்டச் சிக்கல்கள் நீங்கி, ஒரே மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என்ற ஒரு மாதிரியை உருவாக்குகிறது ஆந்திரம். நிர்வாக வசதிக்காக திருச்சியை இரண்டாம் நலைநகராக மாற்ற எம்ஜிஆர் அரசு முனைந்தது நினைவுக்கு வருகிறது. ஆந்திரத்தின் 3 தலைதகரம் திட்டத்தால் மாநிலம் முழுவதும் சமமான முன்னுரிமை, வேலைவாய்ப்புகள் பெறலாம். மனைகள் விலை மூன்றிடங்களிலும்… (READ MORE)

Uncategorized

ஆடி சித்திரை…

வறுமை நிலையின் காரணமாக அந்த மனிதன் புவனகிரியில் ஒரு தையல்கடை பாயிடம் பொத்தான் கட்டுவது காஜா எடுப்பது போன்றவற்றை பகுதி நேர வேலையாகச் செய்து கொண்டிருந்தார்.  ஓர் ஆடி மாதத்தில், கர்ப்பிணியான அவரது மனைவியை மாட்டு வண்டியில் வைத்து மணக்குடியிலிருந்து புவனகிரி வரை கூட்டி வந்துவிட்டார். புவனகிரி பாலத்தில் நின்று சிதம்பரம் போக ‘கூட்டமில்லாத பேருந்துக்காக’  … (READ MORE)

Uncategorized

‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்!’

கொரோனா தீ நுண்மி தடுப்பூசிக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. ‘கோவாக்சின்’ ஊசியும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியும் மக்கள் மீது சோதனை என்ற கட்டத்தில் இருக்க, மருத்துவ உலகம் நமக்கு ஏற்கனவே பழக்கமான ஒரு தடுப்பூசியை சொல்லி கட்டை விரலை உயர்த்துகிறது.  தட்டம்மை, அம்மைக்கட்டு, ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மைக்காக இதுவரை குழந்தைகளுக்குப் போடப்பட்ட… (READ MORE)

Uncategorized

பள்ளிச்சிறார்களுக்குக் காலையுணவுத் திட்டம்…

கர்நாடகாவின் கிராமப்புறத்து பள்ளிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பள்ளிச் சிறார்களுக்கு காலையுணவு தரும் திட்டத்தை ‘அக்சய பாத்ரா’ என்ற பெயர் கொண்டு செயல்படுத்தியது கிருஷ்ண பக்தி இயக்கமான ‘இஸ்க்கான்’, கிராமப்புற சிறார்களுக்கு ஊட்டச் சத்து கிடைத்தது. பலரால் பாராட்டப்பட்ட திட்டமது.(சில பள்ளிகளில் காலை உணவும் மதிய உணவும், பல பள்ளிகளில் மதிய உணவு மட்டும் ) புதுவையில்… (READ MORE)

Uncategorized

‘மூல விதைகள்’ வெளியீடு

🌸🌸 🌸 🌸 ஒவ்வொரு முதியவன் இறக்கும் போதும், அவனோடே ஓர் உறவு வட்டமும், குலக் கதைகளும் குடும்பம் உயர்ந்த கதைகளும் மறைந்து போகின்றன. இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாவிட்டால் அவை அப்படியே புதையுண்டு போகின்றன. உங்கள் தந்தையைப் பற்றி எவ்வளவு தெரியும்? ‘அவரப் பத்தி எனக்குத்தான் தெரியும், இத்தனை வருஷம் ஒண்ணாவே வாழ்ந்துருக்கேன், நான்… (READ MORE)

Uncategorized, மு பச்சைமுத்து அறக்கட்டளை

பேய்கள் தோர்னமெண்ட்

பாத்ரூமிற்குள் நுழையும் போதெல்லாம் பித்தளை தாயக்கட்டைகள் உருளும் சத்தம் கேட்கிறது. முன்பெல்லாம் பிற்பகலில் மட்டுமே கேட்டது இப்போது பின்னிரவிலும் கேட்கிறது. … ‘ஊரடங்கு காலம், வயது முதிர்வு வெளியே போகவேக் கூடாது என்று வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் எச்சரித்துள்ளதால்,  வீட்டிலேயே அடைந்து கிடங்கும் நேர் கீழ்த்தளத்துப் பெருசுகள் தாயக்கட்டைகளை எடுத்து விட்டது ஏப்ரலிலிருந்து. பழகப் பழக எல்லா… (READ MORE)

Uncategorized

என் அடுக்ககத்தி்ற்கு வந்த கொரோனா போய்விடும்

என் அடுக்ககக் குடியிருப்பின் கீழ்த்தளத்திலிருப்பவருக்கு (நான் இருப்பது இரண்டாவது தளத்தில்) கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலுள்ளோருக்கு செய்த சோதனை முடிவில் அவர்கள் அனைவருக்கும் வந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. என் அடுக்கக் கட்டிடமே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி சொல்லுகிறது. தமிழகத்தில் குணமாவோரின் எண்ணிக்கை கணிசமான அளவிலேயே உள்ளது…. (READ MORE)

Uncategorized

கொரோனா காலத்தில் நடந்த எளிமையான திருமணம்

🌸 நாதஸ்வரத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ இசைக்க கூடவே தவிலும் கலக்க,‘அடேயப்பா! ரொம்ப நாள் கழிச்சி ஒரு கல்யாணத்துக்கு வர்றோம்!’ என்ற எண்ணம் வந்தது. 40 பேருக்கு அரசு அனுமதியளிக்கிறது என்ற போதிலும், அதில் பாதியளவே கூடியிருந்தனர் வீட்டிலேயே நடைபெறும் திருமணத்திற்கு. மலர்ச்சி மாணவர் ஜெகதீசனின் மகள் திருமணம், அவரும் மலர்ச்சி மாணவி. ஊரடங்கு நேரமென்பதால்… (READ MORE)

Uncategorized

அரும்புகள், மொட்டுகள் – மலர்ச்சி வகுப்புகள் முடித்த இளம்பிள்ளைகளுக்கான வகுப்பு

Malarchi Follow up class for Adolescents ! அரும்புகள், மொட்டுகள் – மலர்ச்சி வகுப்புகள் முடித்த இளம்பிள்ளைகளுக்கான வகுப்பு சிறு பிள்ளைகள் பெரிய  உள்ளத்தையும் கூரிய அறிவையும் கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி! – பரமன் பச்சைமுத்து07.06.2020 #MalarchipPaathai#Malarchi#MalarchiKids#BeWithPositivity#ParamanSession Facebook.com/ParamanPage

Uncategorized

கொரோனா செப்டம்பர் வரை நீளும்

சென்னையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை என்றிருக்கும் நிலையில், நோய்த்தொற்று குறையாது அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பைச் சொல்லியிருக்கிறது எம்ஜியார் பல்கலைக்கழகம்.  ஜூலை 15ல்  1,50,254 பேர்கள் சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள், இறப்பு எண்ணிக்கை 1,654ஆக இருக்கும், செப்டம்பரில் தொற்று உச்சத்தைத் தொடும், அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்கிறது அவர்களது கணிப்பு.

Uncategorized

3 படங்கள் பார்த்தேன்

சௌந்தர்யா:  பரமன் கொஞ்ச நாட்களாக நீங்கள் படம் எதுவும் பார்க்கவில்லையா? விமர்சனமே வரவில்லை, அதான் கேட்கிறேன். பரமன்:  ஒரு மலையாளப் படம், ஒரு இந்திப் படம், ஒரு பழைய தெலுங்குப் படம் பார்த்தேன். 1. மலையாளம்:அதிகாலையிலேயே எருமை மாட்டை வெட்டி இறைச்சி விற்கும் வர்கீஸ், அவன் தரும் இறைச்சியை தினமும் வாங்கியே பழகிவிட்ட ஊர், ஓர்… (READ MORE)

Uncategorized

ஆலோலம்…

‘ஆலோலம்…’ : ஆலோலம் அடுத்த நிலை வேளிர் குலத் தலைவன் தமிழ்க்கடவுள் முருகன் பல குன்றுகள் கடந்து வந்து கொடிகுலத்து வள்ளியை காண வருகையில், குறிஞ்சில நில திணை புரத்தில் பயிர்களின் மேல் அமைக்கப்பட்ட பரணில் அவள் உட்கார்ந்து கொண்டு ‘ஆலோலம் ஆலோலம்’ பாடி சத்தமெழுப்பி புள்ளினங்களை விரட்டியதாக கதைகள் சொல்கின்றன.(‘கருணை மிக்கவள் வள்ளி, பறவைகளை… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

நாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…

முப்பத்தியெட்டு டிகிரி வெயிலின் வெப்பத்தை அரை மணி நேரத்தில் 50 டிகிரி வெப்பமாக மாற்றிப் பார்க்க வேண்டுமா?  காரை ஓர் அரை மணி் நேரம் வெய்யிலில் நிறுத்துங்கள். கதவைத் திறக்கும் போது ‘நெருப்புடா…’ என்ற படி வெப்பம் முகத்தில் அறையும். அடுத்த சில நிமிடங்களில் உடலை தகிக்க வைத்து விடும், மூடிய காருக்குள் சூடாகிக் தகிக்கும்… (READ MORE)

Uncategorized

wp-1589609035155372820356105562670.jpg

வைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…

கனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே!  கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்!’ என்ற குறிப்போடு. விடவா முடியும்! நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , , , ,

Psycho Poster

‘சைக்கோ’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தொள்ளாயிரத்து தொண்ணூற்றியொன்பது பேரைக் கொலை செய்து தலைகளை சேகரித்து வைத்துக் கொண்டு ஆயிரமாவது தலையை அங்குலிமால் தேடிக்கொண்டிருந்த போது ஆயிரமாவது மனிதனாக புத்தர் அவனிடம் போனார், அப்புறம் அங்குலி மால் மாறிவிட்டான் என்ற அந்தக்கால சில வரிக் கதையை அப்படியே கொஞ்சம் இந்த நவீன யுகத்திற்கு மாற்றினால், அதை அழகான துப்பறியும் கதையாக மாற்றி… (READ MORE)

Uncategorized

‘மூச்சு’

🌸🌸 ‘எப்போதும் ஒருவித பயத்தோடே இருப்பேன். தூங்குவதற்கு மிகச் சிரமப்படுவேன். ‘மூச்சு’ ஆன்லைன் வகுப்பின் பயிற்சிகள் பெரும் மாறுதல்களைத் தந்துவிட்டது. நன்றாக மிக ஆழமாக தூங்குகிறேன். பாசிட்டிவாக லைவ்வாக இருக்கிறேன்! பரமன் சாருக்கு நன்றி!’ குத்தாலிங்கத்தை அழைத்து சொல்லியிருக்கிறார் ஒரு மாணவி. ‘அதே தியானம்தான். ஆனால் இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு வேற நிலை ஆழம்!’ என்று… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு B பாலாஜி ,பத்தாம் வகுப்பு,எஸ்ஆர்ஜிடிஎஸ் ஸ்கூல்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage

Arumbugal-Mottugal, Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

    மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு கிருத்திக் ராஜா எஸ் ஆர் ,பன்னிரெண்டாம் வகுப்பு,எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன ஸ் ஸ்கூல்,சென்னை,மலர்ச்சி மொட்டுகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids… (READ MORE)

Arumbugal-Mottugal, Uncategorized