Monthly Archive: June 2019

சாலை வழியே சிங்கப்பூருக்கு…

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சாலைவழிப் பயணமாக வந்தேன் இன்று. லட்சக்கணக்கான தென்னைகளும் செம்பனைகளும் இருமங்கிலும் கொண்ட சிறப்பான நெடுஞ்சாலை சாலையில் 320 கிமீ தூரம் பயணித்து எல்லையைக் கடந்தேன். இரண்டு் நாடுகளுக்குமிடையே இரண்டுக்கும் சொந்தமில்லாத ‘நோ்மேன்ஸ் ஐலண்ட்’டும், அதில் காரிலமர்ந்தபடியே கடவுச்சீட்டு பரிசோதனை குடியமர்வு ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றைச் செய்ததும் புதுவனுபவங்கள். இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கு… (READ MORE)

Uncategorized

பூவில் வண்டு தேன் பருகுவதை பார்த்திருக்கிறீர்களா?

பூவில் வண்டு தேன் பருகுவதை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா? வெறும் மணத்தைக் கொண்டே ஈர்க்கப்பட்டு மலரையடைந்து, ஒரு ஹெலிகாப்டரின் விசிறியின் வேகத்திற்கு அடிக்கும் இறக்கையை சட்டென குறைத்து அலுங்காமல் குலுங்காமல் மலரின் மெல்லிய இதழ்களில் ‘லேண்ட்’ ஆகி சூல் பகுதியில் இறங்கி, அதற்கென உறிஞ்சு கொடுக்குக் குழலை செலுத்தித் தேன் பருகும் லாவகத்தைக் கவனித்திருக்கிறீர்களா! ஒரு மலரை… (READ MORE)

Uncategorized

செலாமத் பெட்டாங் மலேசியா!

‘மதிப்புக்குரிய தாய்மார்களே, மாண்புமிகு ஆண்களே… வானவெளியில் காற்று மண்டலத்தில் கொந்தளிப்பு இருக்கிறது. உங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வரும் அறிவிப்பிலும், இறங்கிய உடன், ‘டிஃபன் சாப்பிட்டீங்களா?’ என்பதற்குப் பதிலாக, ‘விமானத்தில் பசியாறக் குடுத்தாங்களா?’ ‘நீங்க பசியாறிட்டீங்களா?’ என்று மலேசியத் தமிழர்கள் கேட்பதிலுமே புரிகிறது, மலேசியாவில் தமிழ் அதிகம் கலப்பில்லாமல் வாழ்கிறதென்று. ஒன்றாம்… (READ MORE)

Uncategorized

பத்துமலை முருகன் கோவில்

நாகரீகம் வளராத இயற்கையோடு மனிதர்கள் இயைந்து வாழ்ந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டாற்றின் கரையில் இருந்த ஒரு பெரு மலையின் பெருங்குகையில் தோமுவான் என்றழைக்கப்பட்ட பழங்குடியினர் வாழ்ந்தனர். காலப்போக்கில் அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிட்ட சீனர்கள், அம்மலையின் பெருங்குகைகளில் பெரும்படிமமாகக் கிடந்த வௌவால் கழிவுகளை (தமிழகத்தில் ‘புழுக்கைகள்’ என்றும், மேசியத் தமிழர்களால் ‘சாணம்’… (READ MORE)

Uncategorized

20190621_1619473270350158394201439.jpg

தினம் யோகா என்பவனின்  யோகா தினம்!

தினம் யோகா என்பவனின் யோகா தினம்! என் தந்தை தினசரி் யோக ஆசனப்பயிற்சிகள் செய்வதைப் பார்த்தே நான் வளர்ந்தேன். வளர வளர யோகம் என்பது வெறும் ஆசனப்பயிற்சிகள் அல்ல வாழ்வியல் முறை என்று உணர்ந்து பழகிய போது வயது நின்று போவதை சக்தி பெருகுவதை உணர்ந்தேன். ‘யோகத்தைக் கொடுத்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நண்பர்களிடமும்… (READ MORE)

Spirituality

, , , , , , ,

மலேசிய ஏஸ்ட்ரோ விண்மீன் HD தொலைக்காட்சியில் பரமன் பச்சைமுத்து

‘ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கும்!’ என்று சொல்லி குழுவாக வந்தமர்ந்து தொடங்கியவர்கள், அவர்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும், ‘இவருக்கு ரிகர்சல் வேண்டாம். நேரலை போயிடலாம்!’ என்றார்கள். மலேசியாவின் பெரும் ஊடகமான ஏஸ்ட்ரோவின் விண்மீன் HD தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றிருந்தோம் இன்று காலை. முதலில் பதிவு, அப்புறம் வெட்டி நகாசு செய்தல் என எதுவும் செய்ய… (READ MORE)

Uncategorized

வணக்கம் சென்னை

எத்தனை பேர் பிழைக்க வந்து குடியமர்ந்தாலும் அத்தனை பேரையும் தன்னகத்தே கொண்டு ஏந்தி நிற்கும்… சென்னையில் நுழைகிறேன்! வணக்கம் சென்னை! – பரமன் பச்சைமுத்து சென்னை 16.06.2019

Uncategorized

இயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்!

‘நேத்து பொன்னியம்மன், மாரியம்மன், பனையாத்தாள் வீதியுலா. மணக்குடியில சித்திரை திருவிழாயில்லையா! அதான் கொஞ்சம் கண்ணு முழிச்சிட்டோம்!’ என்று சொல்லிடப்பேசி வழியே அப்பா சொல்லிக் கொண்டே போகையில், அவரைக் குறுக்கிட்டுக் கேட்க முயற்சிக்கும் போதே அவரே சொன்னார், ‘எப்பயும் போல மழையை எதிர்பார்த்தோம். மழை வந்தது. வாசல் தெளிச்சது போல தூத்தலோட போயிடுச்சி!’ அவருக்கும், எனக்கும், இங்கு… (READ MORE)

Uncategorized

28 ஆண்டுகள் கழிந்து…

எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து வாய் பிளக்க வைப்பதை வாடிக்கையாக செய்வதில் வல்லமை பெற்றது வாழ்க்கை. மயிலாடுதுறை அப்படி ஓர் அனுபவத்தைத் தந்து விட்டது.எல்லா ஊரையும் போலல்ல மயிலாடுதுறை எனக்கு. எம்ஜியாரால்மயிலாடுதுறை என்று மறுபெயராக்கம் செய்யப்பட்ட மாயவரத்தில்தான் நான் படித்தேன். ஏவிசி கல்லூரி வளாகமே என் கல்வி வளாகம்.’சின்ன சங்கதி… பெரிய வளர்ச்சி!’ என்ற மலர்ச்சி… (READ MORE)

Uncategorized

நீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி

‘வளர்ச்சி பத்திரிக்கைங்களா? நான்எத்திராஜ், வேளச்சேரியிலிருந்து. ஜூன் மாத இதழில் ‘நீர் முடிச்சு’ பற்றி எழுதியிருந்தீர்கள். தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டி வேர் எல்லாவற்றிலும் எவ்வளவு போட்டு முடி போட வேண்டும்? பரமன்: தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டிவேர், மிளகு, ஜீரகம் ஒவ்வொன்றும் 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் சேர்ந்தாலே கையளவு வரும். இவர் கை ஒரு… (READ MORE)

Uncategorized

, , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

சிக்கிம் – நிறைவுக் கட்டுரை: சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை: நாதுலா பாஸ் எனப்படும் சிக்கிம் சீன எல்லையில் பயணிப்பதற்கு முன்பே கடவுச்சீட்டு வாங்க வேண்டும். சிக்கிம் புறப்படும் முன்னரே அதற்கான சரியான ஏற்பாடுகளைச் செய்யவும். ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இங்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வருவது… (READ MORE)

Uncategorized

சிக்கிம் டைரி – 2

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் மாநிலத்திற்கு மேல் இருப்பவரெல்லாம் வட இந்தியர்களே. கிழக்கின் சிக்கிமிஸ் கூட வடக்கர்களே நமக்கு. ஒரு வகையில் நமது இருப்பைப் பொறுத்து அது உண்மைதானென்றாலும், பொது வழக்கில் இருப்பது வேறு.உண்மையான வடக்கர்களை இன்று காலை உணவகத்தில் பார்த்தேன். இட்லி, தோசை, உப்புமாவிற்குப் பறக்கிறார்கள். ‘சாம்பர்… சாம்பர்..’ என்று சாம்பாருக்கு உற்சாகமடைகிறார்கள். (உற்சாகம்… (READ MORE)

Uncategorized

சிக்கிம் டைரி

மரணத்திற்குப் பின் என்ன என்பதைப் பற்றி அதிகம் கை காட்டாமல் இப்போது இரு இக்கணமே வாழு என்று அறிவுறுத்திப் போன புத்தனின் மார்க்கம் நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது பல சங்கதிகளையும் தன்னுள் சேர்த்து கொண்டே வந்துள்ளது. ‘ஊழி வந்து உறுத்த’ என்று இளங்கோவடிகள் சொன்ன ஊழை நம்புகிறார்கள் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும் சிக்கிமிய… (READ MORE)

Uncategorized

இமயமலையின் அடிவாரத்து சாங்கு ஏரியில்…

பரந்து விரிந்த உயர்ந்த இமயமலையின் அடியில் ஓர் எறும்பு ஊர்வது எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது இமயமலை ரேஞ்சில் வளைந்து வளைந்து ஊர்ந்து டொயாட்டோ இன்னோவாவில் நாம் பயணிப்பது. 15,000 பனியாறுகளைக் கொண்டிருக்கிறது, எப்போதும் உறைந்திருக்கும் உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கிறது, பூமியினடியில் ஆசிய தட்டுகளுக்குள் ஐரோப்பிய தட்டுகள் உள்நுழைகின்றன, இதனால் இம்மலை ஆண்டுக்கு ஐந்து மீட்டர் உயருகிறது,… (READ MORE)

Uncategorized