Monthly Archive: February 2022

wp-16452038669085980429362768020932.jpg

என்னது திருக்கோஷ்டியூரா…!

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள். ‘இது என்ன ஊரு?’ ‘திருக்கோஷ்டியூர்?’ ‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’ ‘ஆமாம்!’ ‘ரெண்டு நாள் முன்னால… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1645200769336.jpg

வணக்கம் பிள்ளையார்பட்டி

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன். அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

21: புவனகிரி பள்ளி: நிறைவுபுவனகிரி பள்ளி: நிறைவு

*21* *புவனகிரி பள்ளி: நிறைவு* திரவியம் தேட திரைகடல் ஓடி, அனுபவங்களோடு திரும்ப வந்து ஊரெல்லாம் சுற்றி,முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று உள்ளெழுந்த ஓர் உந்துதலால் புவனகிரிப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களைத் தேட, ஜெகன், சங்கர், பாலு, ராஜாராமன் என நால்வர் அகப்பட, வாட்ஸ்ஆப் குழுவொன்றைத் தொடங்கி வைத்தோம். ‘பள்ளி நினைவுகளை… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

20:‘புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’

*’20’* *’புவனகிரி பள்ளி:’* ( சென்ற பதிவில் ஜனார்த்தனன் சார் பற்றிப் படித்து விட்டு அவர் நினைவுகளை சிறிதும் பெரிதுமாக பலர் எழுதியிருந்தனர். ‘தறி வாத்தியார் ஒருவரல்ல, இருவர்!’ என்று தகவல்களும் அனுப்பியிருந்தனர்.  புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஓர் அனுபவமாக உள்ளது என்று பலரும் மின்னஞ்சல் செய்திருந்தனர். தொடர்ந்து வாசிப்பதற்கும், வாசித்து வந்த… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

,

கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’ கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான். கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது. ‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’… (READ MORE)

பொரி கடலை

,

19: புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’புவனகிரி – பள்ளி : அடிக்கும் வாத்தியார்’

19 புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’ 🌸 புவனகிரி பள்ளியில் அடிக்கும் வாத்தியார் எவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? அடி வாங்கியிருக்கிறீர்களா அல்லது எவனாவது அடி வாங்குவதை பார்த்து ஒடுங்கி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறீர்களா? ‘கொசகொச’வென்று பேசிக் கொண்டிருக்கும் வகுப்பில், ஒருவனுக்கு ‘பொளிச்’சென்று அடி விழுந்தால், மொத்த வகுப்பும் சப்தநாடிகளும் ஒடுங்கி முதுகின் முள்ளந்தண்டு ‘சர்க்’கென்று… (READ MORE)

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி