Monthly Archive: September 2021

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

wp-1632816024215.jpg

20ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.09.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

தமிழக அரசுக்கு ‘சபாஷ்!’

தடுப்பூசி செலுத்த பதிவு செய்து விட்டு கேரளாவில் மக்கள் காத்திருக்க, இங்கே தமிழகத்தில் தடுப்பூசி முழுநாள் முகாம்கள் நடத்தி செப்டம்பர் மாதம் மட்டும் 70.71 லட்சம் தடுப்பூசி செலுத்தி கலக்கியிருக்கிறது தமிழக அரசு. முழுநாள் தடுப்பூசி முகாம்களுக்கு அரசு ஊழியர்கள் களப்பணியாளர்கள் ஞாயிறு காலை 7 மணியிலிருந்து இரவு வரை பணி புரிய வேண்டும் என்பது… (READ MORE)

Politics

மொத்த நாட்டிற்கும் ‘சபாஷ்!’

ஆகஸ்ட் மூன்றாம் வாரம் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது ஐசிஎம்ஆர், செப்டம்பர் இரண்டாம் வாரம் இந்தியாவில் மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது உலக சுகாதார மையம். இவற்றுக்கு நேர்மாறாக கட்டுக்குள் இருக்கிறது நோய்த்தொற்று. நாணு முழுக்க கொரோனாவே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் கட்டுக்குள் இருக்கிறது. சிக்கிம், ஹிமாச்சல் பிரதேஷ், லடாக், கோவா,… (READ MORE)

Politics

முதல் நாள்

படித்து தேர்வாகி  வென்று வேலைக்கு போவது ஓர் உணர்வு என்றால் நம் பிள்ளைகள் வேலைக்கு போவது வேறொரு நிலை, வேறோர் உணர்வு. தனது ப்ரொஃபஷனல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் என் மகள், இண்ட்டர்ன்ஷிப்பிற்காக ஒரு நிறுவனத்தில் சேரும் முதல் நாளான இன்று நாமே சேர்வது போல பயபக்தியோடு போய் அவளை விட்டு வந்தேன்…. (READ MORE)

பொரி கடலை

வெள்ள நீர் வடிகால் பணிகள் – சபாஷ்!

பாடி மேம்பாலத்திற்கு வடமேற்கேயுள்ள கொரட்டூர் போன்ற தாழ்நிலை பூமி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ‘எல்லா தெருவையும் தோண்டி தோண்டி போட்டுறாங்க. வண்டி போக முடியல’ என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால், சங்கதி வேறு. வெள்ள நீர் வடிகாலுக்காக பெரிய ஆழ் குழாய்கள் பதிக்கும் வேலை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவ்வளவு… (READ MORE)

Politics

, , ,

சில பாடல்களின் வரிகளினிடையே

சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து. ‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா…… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

சரியான தேர்வு போல

கோயில் நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்ட குயின்ஸ்லேண்ட் தீம் பார்க் அப்புறப்படுத்தப்படும். மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த 23 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு…. பல செய்திகள் இப்படி. அமைச்சராக சேகர்பாபு சரியான தேர்வு எனத் தோன்றுகிறது. சபாஷ்! 👏👏👏👏

Politics

, ,

wp-1632332717868.jpg

மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது

ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றனதான். வடுக்கள், படிப்பினைகள், பூக்கள், அனுபவங்கள், நினைவுகள் என எவ்வளவோ இருக்கின்றன ஒவ்வொரு மனிதனிடமும்.  ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு புத்தகம். சில புத்தகங்கள் பலராலும் புரட்டப்பட்டும், சில புத்தகங்கள்  திறக்கப்படாமலேயும் இருக்கின்றன. மறையும் ஒவ்வொரு மனிதனையும் சிங்களர்களால் கொளுத்தப்பட்ட யாழ்ப்பானத்து நூலகமாகவும், ஆப்கானியர்களின் படையெடுப்பால் அக்காலத்தில் எரிக்கப்பட்ட நாலந்தா… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’ பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு. கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

வேகவதி வேகமாய் காப்பாற்றப் படட்டும்!

வேகவதி ஆற்றை நீக்கிவிட்டு காஞ்சியின் சிறந்த மன்னனான மகேந்திர பல்லவனின் வரலாற்றை எழுதவே முடியாது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்த வந்த போது,  அந்தப் பக்கம் சாளுக்கிய படை, இந்தப் பக்கம் கோட்டை மூடப்பட்ட காஞ்சி மாநகரம் என வரலாற்றின் இடையே வேகமெடுத்து ஓடுகிறது வேகவதி ஆறு.  சங்ககால பத்துப்பாட்டின் அரசன் ‘தொண்டைமான் இளந்திரையர்’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தொடங்கட்டும், நல்ல திட்டம்!

காஞ்சியின் வேகவதி ஆற்றைப் பார்த்து விட்டு நாம் வருந்தி எழுதிய கட்டுரையில், ‘…நல்ல நதிகளை ஆக்ரமித்து வீடுகட்டுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினை, நதிகளை கழிவுநீர் வடிகாலாக மாற்றுவது நாம் தொடங்கி வைக்கும் அடுத்த பெரும் பிரச்சினை. இதற்கேதேனும் தீர்வு வர வேண்டும். நிலமும் கெடுகிறது, நிலத்தடி நீரும் கெடுகிறது. …’ என்று எழுதியிருந்தோம்.  அதைப் படித்து… (READ MORE)

Politics

, , , , ,

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட

சில மனிதர்கள் மறைந்து ஆண்டுகளாயினும் கூட அவர்களைப் பற்றிய உணர்வுகள் உயிரோடே உள்ளன நம்முள்ளே. புதுச்சேரி ஜிப்மரைக் கடக்கையில் அம்மாவிற்குள்ளும் எனக்குள்ளும் தனித்தனியே ஆயிரம் நினைவுகள். கடந்து வந்து காப்பி குடித்த பின்னும் கடக்க முடியா நிகழ்வுகளை நினைவு கூர்கிறோம். அப்பா இருந்த போதே போற்றிக் கொண்டாடியவன், இல்லாத போது Miss பண்ணுவேன்தானே! #MuPachaimuthu #AmirthamPachaimuthu

Uncategorized

மறைந்தவர்களுக்கு செய்யப்படும் மிகச்சிறந்த நினைவு அமைப்பு.

மறைந்த ஒருவரின் நினைவாக சிலை வைப்பார்கள், மணி மண்டபம் கட்டுவார்கள், பெரிய படம்  வைத்து மரியாதை செய்வார்கள்.ஓர் ஊருக்கே பயன்படும் அளவிற்கு ஓர் ஊருணியை செப்பனிட்டு ஊருக்கே பயன்படக் கொடுத்தவர்களும்   இருக்கிறார்கள். மறைந்த எழுத்தாளர் அசோகமித்ரனின் மகன் அதைச் செய்து மிகச் சிறந்த முன் மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.  சிதம்பரம் வட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குமுடிமூலை… (READ MORE)

பொரி கடலை

,

பிள்ளகள் என்றால்

நாம ரொம்ப பெரிய ஆளுங்க இல்லன்னாலும், கொஞ்ச பேர் நம்ம நேரத்துக்காக காத்துகிட்டு இருக்காங்க. நம் ஆஃபீஸில நிறுவனத்துல பலர் வேலை செய்யறாங்க. பலர் சேர ஆசைப்படறாங்க. எல்லா வேலையையும் விட்டுட்டு ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்துருக்கோம் ஒரு அலுவலகத்தின் வெளியே ஒரு இருக்கையில் ஒன்றரை மணி நேரமாக. உள்ளே மகள் இண்டர்வ்யூக்கு போயிருக்கிறாள் என்பதற்காக. அவளாகவே… (READ MORE)

பொரி கடலை

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு?

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு? ‘யோவ்! நான் இல்ல, யாரு துளசிய வாயில போட்டாலும் ஒரே சுவைதான், சுருக்கென்று வரும் கார்ப்புதான்! போவியா!’ என்கிறீர்களா? (ஜப்பானில் வேலை பார்த்த காலத்தில் டோக்கியோவின் உணவகம் ஒன்றில் காரமான பீட்ஸா வேண்டுமென நான் ஆர்டர் செய்திருந்த போது, அதில் துளசியை தூவித் தந்தார்கள். அவர்களுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

செம்மை சீர் ஆசிரியர் விருது – எதற்காம்? என்ன செய்து விட்டார்கள் அவர்கள்?

ஆசிரியர்களுக்கு ஏன் இந்த விருது? என்ன செய்து விட்டார்களாம் அவர்கள்? …. கேள்வி: பரமன், ஆசிரியர் தினமன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 50 பேருக்கு ‘செம்மை சீர் ஆசிரியர்’ பதக்கங்கள் வழங்கி மலர்ச்சி உரை ஆற்றியுள்ளீர்கள் என்பதை செய்தித்தாள்களில் பார்த்தேன். என்ன செய்தார்கள் இந்த ஆசிரியர்கள்? கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொண்டார்களா? இல்லை ஏதும் வேலை பார்த்தார்களா?… (READ MORE)

VALARCHI Tamil Monthly

நல்ல அறிவிப்பு: அரசுப் பள்ளிகளில்…

👏 கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பதோடு ‘அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பணியில் முன்னுரிமை!’ என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். 👏👏 சபாஷ்! சென்ற ஆட்சியிலிருந்தே அரசுப்பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை பெற்றோர் கொண்டு வருவது கணிசமாக உயர்த்தொடங்கியது என்பதை… (READ MORE)

Politics

,

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்!

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்! ஆண்டு தோறும் ‘மகாகவி நினைவு நாள்’ என்று மக்களை எட்டயபுரத்துக்கு வரவைத்து, விழா எடுத்து, பாரதி ஆய்வாளர்களுக்கு காசோலையும் விருதும் தரும் பணியை செய்த தினமணி நாளிதழ் நிச்சயம் திக்குமுக்காடியிருக்கும், இவற்றையும் இன்னும் பலதையும் சேர்த்து அரசு சார்பாகவே செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதைக் கண்டு. செப் 11 –… (READ MORE)

Uncategorized

, , , , ,

முன்னாடியிலேருந்தே இதை அணியறேன்!

கை மடிச்சு வுட்ட ஹாஃப் குர்தாவ ‘அண்ணாத்த’ டீசர் பாத்துட்டுதான் நான் போடறேன்னு சொல்லிடாதீங்க. நான் 12 வருஷமா அப்படிதான் டிரெஸ் பன்றேன், அத போட்டுட்டு இருக்கேன். ஆமா! நன்றி! பரமன்

பொரி கடலை

என்ன சொல்வது இதற்கு

இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்ராசிட்டிகள் தாள முடியவில்லை. ஜார்கண்ட் மாநில பேரவை வளாகத்தில் முஸ்லீம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதை எதிர்த்து போராட்டம், தடியடி, தண்ணீர் பீச்சியடித்தல்.  தொழுகை நடத்த ஓரிடம் ஒதுக்கியதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை! பண்ணிட்டு போகட்டுமே! வேறு கட்சிகாரர்கள் திமுகவின் சின்னத்தில் நின்று ஜனநாயகத்தை ஏமாற்றுகின்றனர், தகுதி… (READ MORE)

Politics

சர்ச் வெட்டிங் அனுபவம்

‘சர்ச் வெட்டிங்’ எனப்படும் கிறிஸ்துவ முறை திருமணம் நான் பார்த்ததில்லை.  இன்று மலர்ச்சி மாணவன் விஜய்சிவா – தான்யா திருமணம் சர்ச்சில் நடந்ததால் அதில் பங்குபெறும் அனுபவம் பெற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் முகுந்தனும் கொல்லத்தில் நடந்த அலெக்ஸ் அப்ரஹாம் திருமணத்திற்குப் போயிருந்தோமென்றாலும் அது சர்ச்சில் நடக்கவில்லை, நாங்களும் ‘குமாரகோம் – ஆலப்புழா’ பற்றி… (READ MORE)

பொரி கடலை

ஒருவேளை இவர்தான் சுந்தர சோழரோ!

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை முடித்து விட்டேன் என்று நடிகர் ரகுமான் ட்வீட் செய்திருக்கிறார். ஒருவேளை அமிதாப் பச்சன் நடிப்பதாக இருந்த ‘சுந்தர சோழர்’ பாத்திரத்தில் இவர்தான் நடிக்கிறாரோ! நடித்தால் நல்லதுதான்! இல்லை மதுராந்தகனோ! பிரகாஷ்ராஜ் அனிருத்தராகவோ பார்த்திபேந்தர பல்லவனாகவோ இருக்கலாமோ! பார்ப்போம்! – பரமன் பச்சைமுத்து07.09.2021

Manakkudi Talkies

, , ,

wp-1630852742451.jpg

‘மு. பச்சைமுத்து அறக்கட்டளை’யிலிருந்து, 65 ஆசிரியர்களுக்கு ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’ பதக்கம்:

அரசுப் பள்ளிகளிலிருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்தும் பல்வேறு காரணிகளைத் தகுதிகளாக வைத்துக் கணக்கிட்டு, அதிலிருந்து 65 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’ என்ற பதக்கமும் சான்றிதழும் அளித்து அணி செய்யும் பணியை செய்யும் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ இயக்கத்தினரோடு கைகோர்க்கும் பேறினை பெற்றோம். ஆசியர்களுக்கு அளிக்க ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

மொத்த மீடியாவும் காத்திருக்க…

நம் பத்திரிக்கையின் அஞ்சல் பதிவிற்கு விண்ணப்பித்து நீதிபதி முன் ஆஜராகியே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அரசு விதிப்படி இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழைகிறேன். இயல்புக்கு மாறாக ஏக கூட்டம்! மதிற்சுவருக்கே வெளியிலிருந்து உள்ளே குறிபார்த்து வரிசையாக தயாராக நிற்கும் ஆளுயர வீடியோ கேமராக்கள், ஊடகவியலாளர்கள் என பெருங்கூட்டம். இயல்புக்கு மாறாக விறைப்பாய்… (READ MORE)

பொரி கடலை

போலிப் பத்திரவுக்கு புதுச் சட்டம்: நன்று!

நம் நண்பரின் வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவர் நகரில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். மனை வெகுநாட்களாக சும்மாவே இருப்பதை கவனித்து, மெதுவாகத் திட்டமிட்டமிட்ட சில மோசடியாளர்கள், திடீரென்று ஒரு நாள் அதில் கொட்டகை போட்டதோடு நிலம் தோண்டி கடைக்கால் போடும் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டனர். நிலவரம் தெரிந்த நம் நண்பர் தமது உறவினரின் நிலத்தில்… (READ MORE)

Politics

ஜெயமோகன் – பொன்னியின் செல்வன் – – விகடன் நேர்காணல்

ஜெயமோகனின் நேர்காணல் விகடனில் – நன்று. ஏன் விருதுகளைப் புறக்கணிக்கிறார், பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஏன் எழுதுவதில்லை? (பல காலமாக அவரை இதையே கேட்கிறார்கள், அவரும் திரும்பத் திரும்ப பதில் சொல்கிறார்), பொன்னியின் செல்வன் வசனம் அனுபவம் என கேட்கப்பட்டதற்கு சரியான பதில்கள்.  ஆனாலும், ‘விருது கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன்!’ ‘ஞானியாவற்கான தகுதிகள் கொண்டவனாக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

ஜெ வழி

‘சங்கி மாப்ள! திமுக கலைஞர் வழியில ஆட்சி பண்ணல, ஜெயலலிதா வழியிலதான் ஆட்சி பண்ணுது!’ ‘என்ன இப்படி சொல்றிய!’ ‘அதிமுக வெளிநடப்பு, தர்ணா, ஓபிஎஸ் கைது செய்திய  பாத்தீயா?’ ‘பாத்தேன் மச்சான். எடப்பாடியை காணோம்னு பரப்பப்படும் செய்தியையும் பார்த்தேன்!’ ‘எதுக்கு இந்த தர்ணா? கைது?’ ‘ஜெ பல்கலை கழகத்தை கேன்சல் பண்ணி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோட… (READ MORE)

Politics