ஆ…!

wp-1668487305219.jpg

வாட்ஸ்ஆப் வொண்டர்ஸ்!

நாளெல்லாம் கடும் வேலஅந்தி சாயவும் அசந்து தூங்கிட்டேன் காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் நல்லவர் ஒருத்தரு ஆரம்பிச்சாருநடுராத்திரியில க்ரூப் ஒண்ணு அவராவே முடிவெடுத்துஅல்லாரையும் சேத்தாரு ஆரோடயோ சண்டையாம்அவராவே போய்ட்டாரு வெளிய காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் என்ன க்ரூப்புஎதுக்கு இந்த க்ரூப்பு எதுவும் தெரியலஎவர்ட்ட கேப்பேன்! ‘ஐயா!  யாருய்யா  நீங்கல்லாம்?’ – பரமன் பச்சைமுத்துமணக்குடி15.11.2022 #Paraman… (READ MORE)

ஆ...!, கவிதை

நாளை தேவைப்படுமென்று அளவுக்கு மிகுதியை இன்று பூமியில் ஊற்றி முதலீடுசெய்கிறதா மேகம்? நேற்று மேகவங்கியில் முதலீடு செய்ததில் இன்று அறுவடை மொண்டு குளிக்கிறதா பூமி? அடித்து இடித்துப் பெய்கிறது மழை! – பரமன் பச்சைமுத்து03.11.2022 #Rain #ChennaiRain #Paraman #ParamanPachaimuthu #ParamanOnRain #rainyday #rainyseason

ஆ...!, கவிதை

,

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே…

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே சுற்றியிருக்கும் பெண்களெல்லாம் என்னையே பார்க்க ஒரேயொரு ஆணாகவெட்கமின்றி நிற்கிறேன் .. .. .. … மகள்கள் ஆடை அணிந்து பார்க்கிறார்கள் உள்ளே!  #Shopping – பரமன் பச்சைமுத்து02.10.2022

ஆ...!

அவரவர்க்கான வால்

ஆட்டுக்கும் வாலை அளந்து கொடுத்தான் ஆண்டவன் அவரவர்க்கான வால் அவரவர் விழாமல் தகவு நிலை கொளவே அடுத்தவர் மூஞ்சியில் மூக்கினுள் விட அல்லவே தன்னிலை தடுமாறாமல் தடுக்கத் தந்த வாலை அடுத்தவர் நிலை மாற்றி தள்ள நீட்டினால் அறுத்தெறிவான் ஆண்டவனென்னும் ஆகச் சிறந்த அறுவை நிபுணன் அடுத்தவன் வாலில் நெருப்பு வைத்ததால் அழிந்தது தென்னிலங்கை அவரவர்… (READ MORE)

ஆ...!, கவிதை

எலும்புத் துண்டு

உடைத்து வைத்த பிஸ்கட் துண்டுகள் அதே நிலையில்,வழக்கமாக வரும் காக்கைகள் வரவில்லை… ஞாயிறு – காக்கைகள் விடுமுறை? ஞாயிறு கறி சமைக்கிறான்கீழே குடியிருக்கும் நேபாள செக்யூரிட்டி! 🙂 பரமன் பச்சைமுத்து08.05.2022

ஆ...!

காஃபி ஒரு பானமல்ல

காப்பிக்காக அல்ல,காப்பி பருகும் போது கொள்ளும் தருணங்களுக்காக! காப்பி பானமல்ல,காரணம்! காஃபி வித் அம்மா@சரவணபவன் பரமன் பச்சைமுத்து28.04.2022 Amirtham AmirthamPachaimuthu ParamanAmma Paraman

Manakkudi Manithargal, ஆ...!

ஆம் ஆத்மியின் சின்னமோ

ஹாரி பார்ட்டரின்துடைப்பமோ பஞ்சாபில் வென்றஆம் ஆத்மியின் சின்னமோ குனிந்து நிற்கும்முள்ளம்பன்றியின் முதுகோ சீனத்துப் பெண்ணின் சிகை போல வேண்டுமென்று ஸ்ட்ரெயிட்னிங் செய்தஉள்ளூர் சிங்காரியின் காற்றில் பறக்கும் சிகையோ மருத்துவக் கல்லூரி பதிவாளரின் கையொப்பமாம்! வழுக்கைத் தலை வரப்பெற்று கையெழுத்திலாவது இருக்கட்டும் மயிரென்று வரைந்தாரோ! 樂 – பரமன் ( பொறுப்புத் துறப்பு: பகிர்வில் வந்த பதிவுக்கு… (READ MORE)

ஆ...!, கவிதை

மீன் கத்தரிக்கா

சுத்த சைவம்தான்,சாப்பிட உட்கார்ந்தேன்வதக்கித் தாளித்த கத்தரிக்காயை தட்டிலிருந்து எடுத்துக் கடிக்கையில்மீன் வறுவல் வாசனை வருகிறது… அடுத்த மனை கீழ்வீட்டில் வறுக்கிறார்கள்! – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, ,

சத்தம்

அருகிலுள்ள ஏதோவொரு வீட்டிலிருத்து முகந்தெரியா மனிதரொருவர் ‘ஆ…’வென்று செய்யும் யோகா உச்சாடனம் பக்கத்து மனை கிணற்றடியில்வேலைக்கார பாட்டியம்மா பாத்திரம் கழுவையில் எழும்‘களங் ப்ளங் டங்’ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே பக்கத்து வீட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் சொல்லும், ‘ஆங்… நான் பாத்துக்கறேன். போங்க!’ பலகணிக்கு வெளியே சோறு வைக்கப்பட்டதும் உற்சாகத்தில் தன் இனத்தை அழைக்க காகம்… (READ MORE)

ஆ...!, கவிதை

ஆ….!

‘வயின்ஷாங் ஹா!’ ‘தம்பீ, என்னாட சொல்றே!’ ‘அம்மா… இந்த ஊர் பாஷையில மாலை வணக்கம்ன்னு அர்த்தம்மா. ஃபோன எடுத்தாலே ‘வயின்ஷாங் ஹா, வைன்ஷாங் ஹா’ன்னு சொல்லி சொல்லி பழகி, உன்கிட்டயும் அப்படியே பேச்சுல வந்துருச்சிம்மா!’ ‘பொண்ணு பாத்திட்டுருக்கோம் தம்பீ. கும்பகோணம் போற வழியில நாச்சியார் கோயிலுக்கு முன்னால உள்ள போனா இருக்காம் ஒரு ஊரு. அங்கேருந்து… (READ MORE)

ஆ...!

, ,

காடை

‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)

Manakkudi Manithargal, ஆ...!, பொரி கடலை

, , , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

mental-hed - Copy

மனநிலை?

‘மனநிலை சரியில்லாத மகனை சுத்தியால் அடித்துக் கொன்ற பெற்றோர்!’ என்ற செய்தி படிக்கையில் எழும் கேள்வி, ‘யாருக்கு மனநிலை சரியில்லை?’

ஆ...!, பொரி கடலை

IMG-20150214-WA0013

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

  அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.   ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.   அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு.   அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

Self Help, ஆ...!, கவிதை

, ,

Bhogi1 - Thumbnail

போகி என்றொரு பெயரில்…

  போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்!   புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும்.   அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)

Self Help, ஆ...!

, , , ,

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்…

சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம், ‘ஒரு நாள் ஓய்வெடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது, போ!’ என்று கூறி எட்டு ஆகியும் எழாமல் இருக்கட்டும் என்று இழுத்துப் போர்த்திவிட்டு விட்டாள் இயற்கை அன்னை, இருண்ட வானம் அழுகிறது! தழிழகத்தில் மழை. – பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

Sokkappanai

சொக்கப் பானை சுடரில்…

வெப்பம் குறைந்து வென்பனி பொழியட்டும், எல்லோர் வாழ்விலும் குளுமை வரட்டும்   அந்தி மாலையில் தோன்றும் ஆறு கார்த்திகை நட்சத்திரங்களும் நல்ல சேதிகள் சொல்லி மின்னட்டும்.   சொக்கப்பானைச் சுடரில் சோம்பலும், சோர்வும் ஒழிந்து போகட்டும்.   அக இருள் அழிந்து உள்ளே சுடர் வரட்டும் திருக்கார்த்திகை தீப நாளில்!   வெளிச்சம் பெருகட்டும், வெற்றி… (READ MORE)

ஆ...!

Thumbnail - Poojaiyarikkurangu - Copy

பூஜையறைக் குரங்கு…

வயிற்றுப் பசி தீர்க்க திறந்திருந்த பால்கனி வழியே எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து, ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே, அடுத்த அறையிலிருந்து வந்த அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது. பசிக்கு வழி தேடி பால்கனி… (READ MORE)

Religion, ஆ...!

,

மழைநேர மனசு

‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட அதிகாலையில் எழுந்து பல்கூடத் துலக்காது சிரத்தையாய் செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை. ‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’ …. சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும் சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது… (READ MORE)

ஆ...!

, , , , ,

பேசிப் பேசி…

பேசிப் பேசி தீர்வு காணலாம். பேசிக்கொண்டு மட்டுமே இருந்தால், பேசிப் பேசி சோர்வு காணலாம். வெறும் பேச்சு மட்டுமே போதாது வேலையில் இறங்குங்கள், வெற்றி வேண்டும் நமக்கு!

ஆ...!

இப்படிக்கு, இக்கால மனிதன்…

நேற்று, ஓடி ஓடி உழைத்து, வேளா வேளைக்குப் பசியார உணவுண்டேன், உடல் நலம் கண்டேன். இன்று, ருசியார உணவு கண்டு, கண்ட வேளையில் உண்டேன், உடல் கெட்டேன், ஓடி ஓடி உழைக்கிறேன், நலம் பெற. இப்படிக்கு, இக்கால மனிதன் By – பரமன் பச்சைமுத்து [இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

,

Theeranathi

தீரா நதி

காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள்.   காலையில் கடைசி ஊர்வலமாம்.   கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும்.   வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம்  மெதுவாகப்… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

தேடலும், தேர்வும்

நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம்,  ‘என்ற’ ‘என்னும்’  வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!, கவிதை

, , ,

சதாப்தி

ஃப்ளாஸ்க்கில் சுடு தண்ணீர், சாஷேயில் அமுல் பால் பவுடர், சக்கரை, காஃபித் தூள் தனித்தனியே தரப்படுவதை பிரித்து கலக்கும் வேளையில் புரிகிறது மனைவியின் அருமை! (ஷதாப்தி ட்ரெயினில்) :பரமன் பச்சைமுத்து [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

ஆ...!

மனைவி படிக்கிறாள்

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். மர்ச்சனட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்…. (READ MORE)

ஆ...!, கவிதை

,

போகி என்றொரு பெயரில்,

போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பை எதையாவது போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி பெரியவர்கள் மூச்சுத்திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! ‘அகம்’ என்றால் வீடு என்றொரு பொருள் உண்டென்று நமக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு, புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை,… (READ MORE)

ஆ...!, கவிதை

, , , ,

பவர்…

கடைத்தெருவில் மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி வீடு வந்ததும் சொன்னாள், “முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ, உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க!” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும்! எப்படி இருக்கும் எனக்கு! நிஜமாகவே இன்னும் கொஞ்சம் பவர் கூடியதுபோல இருந்தது. சரி… சாயந்திரம், கண் டாக்டரைப் போய்ப்… (READ MORE)

ஆ...!, கவிதை

,

ஸெல்ஃப் மேட் மேன்…

“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,” என்று கரவொலிக்கிடையில்  மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் , மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்” மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்” மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு… (READ MORE)

ஆ...!, கவிதை

, , ,

இதோ இந்த மழைத் துளி,

இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

ஆ...!, கவிதை

, , , ,

தீபாவளி மழை

பட்டாசு நமுத்துப் போய் விடுமே… வெடிக்குமா வெடிக்காதா, வியாபாரம் நன்றாய் நடக்க வேண்டுமே, பட்டுப் புடவை கிடைக்குமோ கிடைக்காதோ, இதில் எப்படிப் பேருந்துப் பிடித்து ஊர் போய் சேர்வது, சே! தலையை அடகு வைத்தே தலை தீபாவளி… இந்தக் கவலைகள் எல்லாம் அப்புறம். முதலில் நரகாசுரன் வதமே நடக்குமா நடக்காதா என்று  கவலைப்படுமளவிற்கு விடாமல் பேய்… (READ MORE)

ஆ...!

, ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,

குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்

குளிர்காலக் காலையிலும் குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால், ஒன்று, வெளியே வானிலையில் குறைந்தழுத்த மண்டலம் உருவாகிள்ளது அல்லது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று அறிக!   :பரமன் பச்சைமுத்து

ஆ...!

,

தீபாவளி புடவை வாங்கும் படலம்

கண்ணெதிரே கையருகே எத்தனை நல்லது இருந்தாலும், தூரத்திலிருப்பதைப் பார்த்து வேண்டுமென ஆசைப்படுவது புடவைக் கடையில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்திப் போகும் மனித இயல்பு! #தீபாவளி புடவை வாங்கும் படலம் #மனைவியோடு கடையில்

ஆ...!, கவிதை

, ,

செப்டம்பர் 17

சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டு தள்ளி நின்று சிரிக்கிறது காலம்… ‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும், ‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும் ஒரே நாளில்  பிறந்தார்கள்! # பெரியார், #மோடி, #செப்டம்பர் 17 : பரமன் பச்சைமுத்து

Politics, ஆ...!

, , , ,

வாரும் மகாபலி…

வாரும் மஹாபலி! தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன்,  சில காலம் மண்ணில் வாழ்வான். தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான். அசுரனே என்றாலும் அன்பினால் ஆட்சி செய்தவனை அவன் மக்கள் கொண்டாடுவார்கள்! வாரும் மஹாபலி, வளம் பல தாரும் மஹாபலி! என்… (READ MORE)

Religion, ஆ...!, கவிதை

, , , ,

தலைவன்

‘பெரிதாய் பேசுகிறவர்கள் செயல் திறனிலும் சிறப்பாயிருப்பார்கள், பேசாமலே இருப்பவர்கள் பெரிதாக எதையும் செய்யமாட்டார்கள்,’ என்றெண்ணி இறங்கிய தலைவன் இழப்பது அதிகம். தலைவனுக்கழகு திறன் அறிந்து நடத்துதல்.   – பரமன் பச்சைமுத்து

ஆ...!

, ,