Monthly Archive: May 2023

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

யாத்திசை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

7 ஆம் நூற்றாண்டில் சேரர்களும், சோழர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு முதியவனான அரிகேசரி பாண்டியனை எதிர்த்தபோது, பாண்டிய அரசணையில் ஏறி எதிரிகளை துவம்சம் செய்து, சேரனை யவன தேசத்துக்கு நாடு கடத்தி, சோழனின் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தே ஆட்சி செய்தான் பெரும் வீரனான மகன் ரணதீர பாண்டியன். இந்த சேர சோழ பாண்டிய பெருங்குடிகளின்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

மெத்த வூடு – சாரதா அம்மா

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க எதேச்சையாக அக்கா உமாவும் கூட வர, உமா – சிவா – சாரதா அம்மா என்ற கோர்வையால் பல பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. …. ‘மெத்த வூடு’ என்றால் என்ன தோன்றும் உங்களுக்கு? மணக்குடியில் இருந்தவர்களுக்கு காய்ச்சார் மேட்டின் பாலதண்டாயுதம்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

அப்பா – அம்மா – பிறந்த நாள்

என் அம்மா பிறந்த போது அதை குறிப்பெடுத்து வைக்க எவரும் இல்லையோ, குறிப்பெடுத்தவர் பிறகு இல்லையோ தெரியவில்லை. என் அம்மாவின் பிறந்த நாள் எவருக்கும் தெரியாது.  ‘ஆடி மாசம் பொறந்தான் சிவா! பத்துமாசம் சின்னவன் சரவணன்!’ என்பதே பொதுவான பிறந்த கணக்கு வழக்கு முறை கொண்ட அக்காலமதில், பிறந்த நாள் ஆங்கிலத்தேதி பற்றியே சிந்தனைகளே இல்லை…. (READ MORE)

அம்மா, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 39வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (வைகாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை22.05.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

போர்த்திக் கொள்ள தூக்கம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இம்மனிதனுக்கு…

இருமங்கிலும் ரயில்களின் பேரிறைச்சல், நடைமேடையில் ஓயாமல் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் பயணிகளின் பெருஞ்சந்தடி, மிக அருகில் ஊர்ந்து கொண்டே இருக்கும் பேட்டரி வாகனங்களின் ஒலிப்பான்கள் என எல்லா சத்தங்களுக்குமிடையே, மனப்பேய்களின் இறைச்சல்களுக்கு நடுவே அமைதி கொண்ட புத்தனைப் போல துயில்கிறான் இம்மனிதன் சென்ட்ரல் ரயில்நிலைய 10 ஆம் நடைமேடையின் நடுவே, ஒரு கொசுவலையைக்  கட்டிக்கொண்டு…. (READ MORE)

பொரி கடலை

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

wp-1684430993390.jpg

வளர்ச்சிப் பாதை – தொடர்ந்த வளர்ச்சி…

நம்மை நேரியத்தில் வைத்திருக்கும் ஓரிடத்தில், நமக்கு உற்சாகமும் தெளிவும் தரும் ஓரிடத்தில் நம்மை இணைத்துக்கொள்வது நமக்கு பெரும் வளர்ச்சியைத் தந்து நம்மை தொடர்ந்து வழி நடத்தும். மலர்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதமாக தொடர்ந்து வரும் ‘வளர்ச்சிப் பாதை’ அதை செய்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில், இந்த வாரம் புதுச்சேரியில் நிகழ்ந்த ‘வளர்ச்சிப் பாதை’கள் வந்திருந்த மலரவர்களுக்கு நிறைய… (READ MORE)

MALARCHI

, , , ,

wp-16835722145804110226050559937873.jpg

சிங்கபுர நாடு – காடவர் கோன் கோட்டை

ராஜராஜனை சிறைபிடித்து கைதியாக வைத்த இடம் எது? ‘என்னாதூ!! ராஜராஜனை தோக்கடிச்சி, சிறைப்படுத்தி கைதியா வச்சிருந்தாங்களா!? எப்பேர்பட்ட வீரன் அவர்!’ என்று கேள்வி எழுகிறதா?  கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். ‘பாதுஷாபாத்’ தெரியுமா? சரி ‘சிங்கபுர நாடு’ எங்கிருக்கிறது தெரியுமா?  ராணி மங்கம்மா முகலாயர்களோடு சேர்ந்து மராத்திய சிவாஜியின் படைகளை எதிர்த்தது எந்த இடத்திற்காக என்று தெரியுமா?… (READ MORE)

Paraman Touring

, , , , , , , , , , , ,

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : பரமன் பச்சைமுத்து

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : கேள்வி: பழைய சோறு பற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் பார்த்தேன். நானும் உண்ணலாமா? பதில்: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு பாக்டீரியாக்களின் உதவி தேவை. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் இவை நம் வயிற்றில் இருந்து கொண்டு தங்கள் பணியை செவ்வனே செய்து நமக்கு உதவுகின்றன…. (READ MORE)

பொரி கடலை

,

என் பள்ளி நாட்களில் ரசித்த அந்தத் திரைப்படத்தை…

என் பள்ளி நாட்களில் பரமகுரு போன்ற தோழர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட,  பிறகு இரண்டாம் கட்ட வெளியீடாக சிறு நகரங்களில் திரையிடப்பட்ட போது கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீஸில் பாலசரவணனின் பரிந்துரையில் அவனோடு மணக்குடியிலிருந்து சைக்கிளில் போய் நான் பார்த்த படம் – ‘ஊர்க்காவலன்’ ‘அந்த வானத்துல இருக்கற சூரியன் எழறதுக்கு முன்னாடி எழுந்து, ஆ… ஜில்..சக்…… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,