பிரார்த்தனை என்பது…
பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து