ஊரே அடங்கிவிட்டது
மொத்த மணக்குடியும் உறங்கிவிட்டது. இரவுப் பூச்சிகளும் தவளைகளும் இடைவிடாது சாதகம் செய்கின்றன. புகையாய் இறங்கும் பனியின் கனம் மலர் விட்டிருக்கும் என் மருதாணிச் செடியை தலை கவிழ வைத்திருக்கிறது. இரவு கவிழ்ந்த வீதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் விழித்தபடி. 09.40pm பரமன் பச்சைமுத்து மணக்குடி