+2 தொடங்கியாச்சு!!

அப்பாவுக்கு என்னை அன்பழகன் சார் நடத்தும் சிறப்பு ஆங்கில இலக்கண வகுப்புக்கு அனுப்ப வேண்டும். பாட்டிக்கு நான் பசு மாடுகளை அறுவடை முடிந்த உளுந்து பயிர் பிடுங்கப்பட்ட வயல்களுக்கு மேய்ச்சலுக்கு கூட்டிப் போகவேண்டும். இவை இரண்டுக்குமிடையே பனங்காய் வெட்டியதும், கிட்டி புள், கோலி குண்டு ஆடியதும் நடந்தன என் பள்ளி கோடை விடுமுறை நாட்களில். வற்றிக் கொண்டிருக்கும் குளத்தின் எஞ்சிய குளத்தில் குதித்து நீந்திக் கிடப்போம்.

மார்ச்சில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தால் மார்ச், ஏப்ரல், மே என இரண்டரை மாதங்கள் அவிழ்த்து விட்ட கழுதையாய் திரிவோம் வெய்யிலை வீணாக்காமல். மாமரங்களில் ஏறி மாங்காய்களை பறித்து மரத்தின் பட்டைகளிலேயே தேய்த்து பால் வடிய காத்திருந்து கடித்து தின்பது, புளியம்பூவை பறித்து மண் சட்டியில் இட்டு வறுத்து பலகாரம் செய்ய முயற்சிக்கும் அக்காக்களை வேடிக்கை பார்ப்பது, மாரியம்மன், பொன்னியம்மன் உற்சவ ஊர்வலத்தை கண்டு களிப்பது என மாதங்கள் ஓடும். அசத்தலான சுவை கொண்ட வேப்பம்பூ காரக்குழம்பை ஆண்டு முழுக்க அனுபவிப்பதற்காக, கோடையில் வேப்ப மரத்தினடியில் வெள்ளை வேட்டிகளை அல்லது வண்ணப் புடவைகளை விரித்து உதிரும் வேப்பம்பூவை சேகரிக்கும் அம்மாக்களை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

சில சிறுவர்கள் அத்தை, மாமா, பாட்டி என உறவினர் வீட்டிற்கு ஊருக்கு செல்வர். நகரத்து வாழ் சிறுவர்களுக்கு கிரிக்கெட்டும் கால்பந்தும் இன்னும் பல இத்தியாதிகளும் இருந்திருக்கும்.
கோ….டை… விடுமுறை அது.

நேற்று வரை பொதுத்தேர்வுக்கு அறைப் பொறுப்பு ஏற்றிருந்த பள்ளி ஆசிரியையான என் மனைவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்கிறாள்.

‘இன்னையிலேருந்து ப்ளஸ் டூ வகுப்பு தொடங்குது!’

‘அட… நேத்து வரைக்கும் போர்டு எக்ஸாம் டூட்டியில இருந்தியேம்மா!’

“ஆமாம்! அவங்க எக்ஸாம் முடிச்சிட்டு போறாங்க. இவங்க இதோ ப்ளஸ் டூக்குள்ள வர்றாங்க!’

….

நாட்கள் வீண்டிக்கப் படுவதில்லை இப்போதெல்லாம். கொஞ்சம் தயாரிப்பு முன்னெடுப்பு, கொஞ்சம் விடுமுறை, அதிலும் வேண்டிய சிறப்பு பயிற்சிகள், சில நாட்கள் பெருஞ்சுற்றுலா என்று குவியம் கொண்டு செலவழிக்கப்படுகின்றன நாட்கள் இப்போதெல்லாம். பிள்ளைகள் தயாராக வேண்டியுள்ளதே அடுத்தடுத்த உயர்நிலைகளுக்கு!

கோடையில் பிள்ளைகளுக்கு வகுப்பு வேண்டாமென்று சில ஆண்டுகள் தவிர்த்த நானும் இரண்டாண்டுகளாய்
இளம்பிள்ளைகளுக்கான மலர்ச்சி வகுப்புகளான ‘அரும்புகள்’ ‘மொட்டுகள்’ வகுப்புகளை மே மாதம் முதல் இரண்டு வாரங்களில்தான் நடத்துகிறேன் இப்போதெல்லாம்.

– பரமன் பச்சைமுத்து
20.03.2024

#SummerHolidays #plus2 #Paraman #ParamanPachaimuthu #பரமன் #கோடை #பரமன்பச்சைமுத்து

#SummerHolidays #plus2 #Paraman #ParamanPachaimuthu #பரமன் #கோடை #பரமன்பச்சைமுத்து #MalarchiKids #Childrencourse #SummerCourses

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *