Monthly Archive: November 2017

எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன

ஓடிக்கொண்டேயிருக்கும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்தேறும் எத்தனையோ நிகழ்வுகளினால் எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன. சில வினாக்களையும் உணர்வுகளையும் நிதானித்து கண்டறிந்து கொள்கிறோம். சில கவனம் பெறாமலேயே உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன. வேறு யாரோ ஒருவர் அதே உணர்வை அல்லது அதே வினாவை வெளிப்படுத்தும்போது,… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , ,

Emerald Book launch

‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு

வாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

aram1

‘அறம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உப்பு நீர் சூழ்ந்த ஒரு காயல் பிரதேசத்தில் குடிக்க ஒரு சொட்டு நீர் இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வறண்ட பூமியில் முள் வெட்டியும் உப்பங்கழியில் கிளிஞ்சல் அள்ளியும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தின் குழந்தையின் உயிருக்கு பிரச்சினை என்று வந்து விட்டால், பள்ளிக் கட்டணத்திற்கே சீட்டு எடுத்து செலவு செய்யும் அவர்களால் குழந்தையை காக்க என்ன செய்ய… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

‘தீரன் அதிகாரம் -்ஒன்று’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக அறிவித்து ஊரைவிட்டே ஒதுக்கி வைக்க, பொது மக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக் காடுகளில் ஒளிந்து வேட்டையாடி வாழ்ந்த அம்மக்கள், ஒரு நாள் ஊருக்குள் திரும்ப வந்து மக்களை வேட்டையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஹவேரியாக்கள் என்றழைக்கப்படும் இவர்கள் மகாராஸ்டிரம், உத்தரபிரதேசம், ஆரவல்லி மலைத்தொடர்கள், ஆந்திரம், கர்நாடகம், கும்பகோணம் என இப்போது… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே. குமாரவேல் அருமையான மனிதர்

      பெரிய மனிதர்கள் வெற்றியாளர்கள் மிக எளிமையாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் உற்சாகமாக இருக்கிறார்கள். அடுத்த சக மனிதனை உற்றுக் கவனிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவனிடமிருந்து கற்க முயலுகிறார்கள். இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் புரிந்தவர் என ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுபவரும் ‘சாஷே’ என்ற ஒன்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான சின்னிக் கிருஷ்ணன் அவர்களின் புதல்வரும், வெல்வெட்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

மணிவாசகர் பதிப்பகம் சென்றிருந்தேன்

வருமானம் என்று பார்க்காமல் தமிழுக்காக சில பதிவுகள் காக்கப்படவே வேண்டும் என்று இறங்கி தமிழ் ஆராய்ச்சி நூல்களை, தமிழறிஞர்களின் நூல்களை பெருமளவில் வெளியிட்ட சிதம்பரம் ஊரின் பெருமைமிகு பெரியவர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களையும் அவரது மணிவாசகர் பதிப்பகத்தையும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். அந்த நல்ல நினைவுகளோடு இன்று மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது…. (READ MORE)

Uncategorized

20171112_105758806489332.jpg

இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?

‘இதான் உலகத்திலேயே பெரிய ஏரியாண்ணா?’ பரி கேட்ட இந்த கேள்வி அறியாமையால் வந்ததல்ல. கண்ணின் முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் நிறைந்திருக்கும் இப்படி ஒரு ஏரியை கண்டத்தில் எழுந்த வியப்பு. ‘இல்ல பரி, காஸ்பியன் இருக்கு. அதுக்கப்புறம் ஆப்பிரிக்காவின் லேக் சுப்பீரியர், விக்டோரியா ஏரின்னு நிறைய இருக்கு!’ என்று சொல்லவில்லை…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

தேம்பாவனித் தந்த முனிவன்

இத்தாலியிலிருந்து தன் மதத்தைப் பரப்ப இம்மண்ணிற்கு வந்தானொருவன். உள்ளூர் மொழி தெரிந்தால்தான் முடியுமென்றெண்ணி தமிழைத் தொட்டவன், உள்ளூர குளிர்ந்ததிர்ந்தான், உள்நாக்கைத் தாண்டியும் தித்தித்த தமிழ்ச்சுவையில் அகமும் புறமும் மலர்ந்தான். தன்னைத் தொட்டவனைத் தாய்த் தமிழ் இழுத்து வாரி அணைத்துக் கொண்டது. மதப் பற்றாளன் தமிழ்ப்பற்றாளனானான். மதத் தொண்டு புரிய வந்தவன், தமிழ்த்தொண்டு செய்து மலர்ச்சி கண்டான்…. (READ MORE)

Uncategorized

இறைவா நன்றி

வேறு வேறு தேடல்கள் வேறு வேறு இலக்குகள் கொண்டு வேறு வேறு தளங்களிலிருந்து மனிதர்கள் மலர்ச்சிக்குள் வருகிறார்கள். மெதுவே மாணவர்களாய் மலர்கிறார்கள், மலர்ச்சி அவர்களுக்குள் நுழைகிறது. வளர்ச்சி வருகிறது. ஒவ்வொரு பேட்ச்சிற்கும் இது இயல்புதானென்றாலும், ஒவ்வோரு பேட்ச்சும் சிறப்பென்றாலும், இறையருளால் இது இன்னும் சிறப்பு! ‘முழுமலர்ச்சி இருபத்தியைந்தாவது பேட்ச்!’ இறையருளோடு இன்று மாலை இனிதே தொடங்குகிறது… (READ MORE)

Paraman's Program

மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே…

‘மாமழை போற்றுதும்!’ என்று காப்பியம் செய்த சேர சோதரா, ‘நீர்இன்று அமையாது உலகெனின்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசானே, மழையைப் பற்றியெழுதிய மற்ற பெரியோரே, தேர்வுக்காக மட்டுமே படித்த உங்கள் வரிகளை தேர்வோடே விட்டுவிட்டோம் நாங்கள். மழையைக் கொண்டாடி வரவேற்ற முன்னோரே, மாரியை அம்மனாக வழிபட்ட மூத்தோரே, மன்னிக்கவும். மழை என்றால் ‘சங்கடம்’ என்றே பதம் கொள்ளும்… (READ MORE)

கவிதை

, , ,

முழங்கால் வரை நீர் கொண்டிருந்த பகுதிகளில் நீரே இல்லை.

அத்யாவசியப் பொருள்கள் வாங்குவதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் சொன்னதைக் கேட்காமல் அலுவலம் கிளம்பிவிட்டேன் நான். நேற்று இரவு வீட்டிற்குத் திரும்புகையில் கனமழையில் வெள்ளக்காடாக இருந்த காரில் நீந்திச் செல்லும்படி இருந்த வீதிகளா இவை என்று எண்ணுமளவிற்கு தண்ணீர் வடிந்து இருந்தன நான் வழக்கமாக வரும்… (READ MORE)

Uncategorized

நல்ல செய்தி!

மழை வெளுத்துக் கட்டியது. நாகை மாவட்டத்தில் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில் நெற்பயிர்கள் மூழ்கின, வைத்தீஸ்வரன் கோயிலின் ஒரு பகுதியில் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது, சென்னைப் பெருநகரில் வேளச்சேரி, அம்பத்தூரில் சில பகுதிகளில் என சில இடங்களில் வீட்டுக்குள் நீர் புகுந்தது போன்றவை நிகழ்ந்துள்ளன. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டிற்குள் நீர் புகுந்தது. இந்த பாதிப்புக்களுக்கு மீட்பு நடவடிக்கை… (READ MORE)

Uncategorized

நானற்றுக் கிடந்த பொழுதுகளில்…

நானற்றுக் கிடந்த அந்த பொழுதுகளில் நான் எங்கே போயிருந்தேன், எப்படித் திரும்ப வந்தேன்! பரமன் பச்சைமுத்து 01.11.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,